எப்படி தேங்காய் உடைத்தால் துன்பம் நீங்கும்?
தேங்காய் உடைத்தால் அது பலவாறாக உடையும் அவ்வாறு உடைவதால்
பலன்கள் எப்படி இருக்கும் ?
வட்டமாக இருந்தால் – செல்வம் செழிக்கும்.
மூன்றில் ஒரு பங்கு ஆனால் – மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
ஐந்தில் ஒரு பங்கு ஆனால் – அழியா செல்வம் உண்டாகும்.
பொடிப்பொடியாக உடைந்தால் – ரத்தினம் வந்து சேரும்.
சமமாக உடைந்தால் – துன்பம் நீங்கும்.
நீள் வாக்கில் உடைந்தால் – செல்வம் அழியும்.
திசைகளும் தீபங்களும்
1.கிழக்கு – இத் திசையில் தீபம் ஏற்றி வழிபடத் துன்பம் ஒழியும்.கிரகத்தின் பீடை அகலும்
2.மேற்கு – இத்திசையில் தீபம் ஏற்றி வழிபட கடன் தொல்லை, சனிப்பீடை,கிரகதோஷம், பங்காளிப் பகை இவை நீங்கும்.
3.வடக்கு – இத்திசையில் தீபம் ஏற்ற திரண்ட செல்வமும், திருமணத்தடை,சுபகாரியத் தடை, கல்வித் தடை அனைத்தும் நீங்கும். சர்வ மங்களம் உண்டாகும்.
4.தெற்கு – ஏற்றக்கூடாது அபசகுணம், பெரும்பாவம்
ஏற்ற எண்ணெய்
1.நெய் – தீபத்திற்கு நெய் விடுவது மிகச்சிறப்பு. சகலவித செல்வ சுகத்தையும் இல்லத்துக்கு நலனையும் தரும்.
2.நல்லெண்ணெய் – தேவதா வசியம், புகழ், ஜீவன சுகம், பந்து சுகம் இவைகளை விருத்தி செய்யும்.
3.வேப்பெண்ணை +நெய் + இலுப்பெண்ணை – மூன்றும் கலந்து தீபம் இடுவதால் செல்வம் உண்டாகும் இது குல தெய்வத்திற்கு உகந்தது.
4.நெய் + விளக்கெண்ணெய் + வேப்பெண்ணெய் + இலுப்பை எண்ணெய் + தேங்காய்எண்ணெய்
இந்த ஐந்தும் கலந்து பூஜை செய்வோருக்கு தேவியின் அருள் கிட்டும்.
இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.