கோலிவூட் என அழைக்கப்படும் தென்னிந்தியா தமிழ்த்திரையுலகானது உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களையும், சுதேச பார்வையாளர்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களையும் தயாரித்துள்ளது.
அந்த வகையில் தென்னிந்திய திரையுலகில் தயாரிக்கப்பட்டு அதிகம் சம்பாதித்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள் எவையென பார்ப்போம்.
உங்கள் கவனத்துக்கு : பாகுபலி மற்றும் கே.ஜி.எப் போன்ற திரைப்படங்கள் தமிழ்த் திரைத்துறைக்கு உரித்தானவை அல்ல. அவை தெலுங்கு மற்றும் கன்னடப் படங்கள். தமிழிலும் எடுக்கப்பட்டதால் மொழிமாற்றம் செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்கள்.
தமிழ் திரைப்படங்கள் டாப் 10 (வசூல் அடிப்படையில்)
(1) 2.0 (2018)
தலைவர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஷங்கரின் கூட்டணியில் ஏ.ஆர்.ரகுமான் இணைய எந்திரன் திரைப்படத்தின் பாகம் 2 ஆக வெளி வந்த இந்த திரைப்படம் சம்பாதித்தது,
- உலகளாவிய மொத்த வசூல் 679.5 கோடிகள்
- உலகளாவிய மொத்தப் பங்கீடு 331.3 கோடிகள்
(2) பிகில் (2019)
தளபதி விஜயின் நடிப்பில், பெரும் பெண்கள் பட்டாளத்தோடு லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் அட்லீ இயக்கத்தில் வெளி வந்த வெற்றித் திரைப்படம்.
- உலகளாவிய மொத்த வசூல் 304.6 கோடிகள்
- உலகளாவிய மொத்தப் பங்கீடு 163.1 கோடிகள்
(3) கபாலி (2016)
மீண்டும், சூப்பர் ஸ்டார் திரைப்படம். Vintage ரஜினியின் மீளும் பயணத்துக்கு விதையிட்ட படம். இந்த திரைப்படத்துக்காக விமானத்தில் போஸ்டர் அடித்து அதனாலேயே புகழ் பெற்ற படம்.
- உலகளாவிய மொத்த வசூல் 295 கோடிகள்
- உலகளாவிய மொத்தப் பங்கீடு 161 கோடிகள்
(4) எந்திரன் (2010)
சூப்பர் ஸ்டாருக்கு 3. தமிழ் சினிமாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு பற்றி எடுக்கப்பட்ட திரைப்படம். உலக அழகி ஐஸ்வர்யா ராய் இணைய மீண்டும் ஷங்கர்-ரஹ்மான் கூட்டணியில் மெகா ஹிட் அடித்த படம்.
- உலகளாவிய மொத்த வசூல் 289 கோடிகள்
- உலகளாவிய மொத்தப் பங்கீடு 159 கோடிகள்
(5) மெர்சல் (2017)
தளபதிக்கு 2வது புள்ளி. அதிகளவில் கொண்டாடப்பட்ட படம். விஜயின் 3 வேடங்கள் வழக்கம் போல ரஹ்மான் – அட்லி கூட்டணி. சமந்தா மற்றும் காஜல் ஆகிய நடிகைகளோடு வடிவேலும் எஸ்.ஜே.சூர்யாவும் இணைய படம் மொத்தமே திருவிழா.
- உலகளாவிய மொத்த வசூல் 260 கோடிகள்
- உலகளாவிய மொத்தப் பங்கீடு 131 கோடிகள்(1)
(6) சர்கார் (2018)
தளபதிக்கு 3. அரசியல் ரீதியாக புயல்களை கிளப்பிய படம். தேர்தல் காலத்திலும் வெளிவந்ததால் கிட்டத்தட்ட தமிழ்நாட்டு அரசியலையே மாற்றியது எனலாம். மீண்டும் ரஹ்மான் இசை. ஆனால் இயக்கம் முருகதாஸ், நடிகை இளம் வயதிலேயே தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்.
- உலகளாவிய மொத்த வசூல் 257 கோடிகள்
- உலகளாவிய மொத்தப் பங்கீடு 129 கோடிகள்
(7) ஐ (2015)
விக்ரமின் நடிப்பு வேட்டைக்கு தீனியிட்ட திரைப்படம். உலக அழகி எமி ஜாக்சன் நடிப்பில் ரஹ்மான் இசையில் வெளி வந்தது. இயக்கத்தில் மீண்டும் பிரம்மாண்டவாதி ஷங்கர்.
- உலகளாவிய மொத்த வசூல் 236.3 கோடிகள்
- உலகளாவிய மொத்தப் பங்கீடு 119.1 கோடிகள்
(8) பேட்ட (2019)
“தலைவர்னா சும்மாவா ?” தலைவர் கணக்கில் 4. ரஜினி – சேதுபதி கூட்டணி சேர இரண்டு பேரின் ரசிகர்களும் தெறிக்கவிடும் வகையில் அனிருத் இசையமைக்க படம் அடுத்தகட்டம் ரகம்தான்.
- உலகளாவிய மொத்த வசூல் 235.5 கோடிகள்
- உலகளாவிய மொத்தப் பங்கீடு 117.7 கோடிகள்
(9) தர்பார் (2020)
“இதுக்குமேல யாரால முடியும் ?” தலைவர் 5 / 10. போலிஸ் வேஷத்தில் தலைவர் கலக்கு கலக்கு என்ற கலக்க அவருக்கு ஜோடியாக நயன்தாரா களமிறங்க அனிருத் இசையமைக்க சொல்லவா வேண்டும் ?.. 2020 ல் வெளி வந்து இந்த இடத்தை பிடித்த ஒரே திரைப்படம் இதுதான்.
- உலகளாவிய மொத்த வசூல் 209.3 கோடிகள்
- உலகளாவிய மொத்தப் பங்கீடு 111.6 கோடிகள்
(10) விஸ்வாசம் (2019)
தவமிருக்கும் தல ரசிகர்களுக்கான அசல் வேட்டை. தடலாடியாக பாசமான அப்பாவாக என கலக்கு கலக்கு என தல கலக்கிய படம். இன்றும் நின்று பேசும் “கண்ணான கண்ணே” இமான். அதிக குடும்பங்களை கவர்ந்து சம்பாதித்ததில் எந்த ஐயமுமில்லை.
- உலகளாவிய மொத்த வசூல் 184 கோடிகள்
- உலகளாவிய மொத்தப் பங்கீடு 96.8 கோடிகள்
போனஸ் தகவல்கள்….
முதல் 10 அதிகம் சம்பாதித்த தமிழ் திரைப்படங்கள்,
- அவற்றில் 5 திரைப்படங்களில் ரஜினி நடித்துள்ளார்
- அவற்றில் 3 திரைப்படங்களில் விஜய் நடித்துள்ளார்
- அவற்றில் 3 திரைப்படங்களில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்
- அவற்றில் 2 திரைப்படங்களில் உலக அழகி எமி ஜாக்சன் நடித்துள்ளார்
- அவற்றில் 6 திரைப்படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்
- அவற்றில் 2 திரைப்படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்
- அவற்றில் 3 திரைப்படங்களை ஷங்கர் இயக்கியுள்ளார்.
- அவற்றில் 2 திரைப்படங்களை அட்லீ இயக்கியுள்ளார்.
top 10 தமிழ் திரைப்படங்கள் தகவல் உதவி : IMDB
image source:https://joy105.com/wp-content/uploads/2017/06/fimlimg.jpg