தற்போது அதிகப்படியான மக்களால் பேசப்படும் Signal App பற்றிய சில முக்கிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்
இந்த Signal App என்பது ஒரு cross-platform encrypted messaging service ஆகும். அதாவது சுருக்கமாக கூறுவதாயின் வாட்சப் ஐ (Whatsapp) போல சமமான அல்லது அதற்கு நிகராக காணப்படும் ஒரு செயலி (App) ஆகும். எனவே இந்த Singnal appன் வரலாற்றைப் பற்றி கூறுவதாயின் இது 2014ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தகவல் பரிமாற்ற செயலி ஆகும்.
இந்த Signal App யினை உருவாக்கியது Signal Foundation மற்றும் Signal Messenger நிறுவனம் ஆகும்.இந்த Signal Appன் மூலம் நம்மால் பல்வேறு நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. அதாவது இந்த செயலியின்(App) மூலம் one-to-one அல்லது group messages களை அனுப்ப முடியும்.அதுமட்டுமில்லாமல் one-to-one அல்லது group calls, voice notes, images மற்றும் videosகளையும் பரிமாற்றிக் கொள்ளும் வசதி இதில் காணப்படுகின்றது.
இந்த signal App உங்கள் சாதாரண தொலைபேசி எண்ணை அடையாளங்காட்டியாக (identifiers) ஆக பயன்படுத்திக் கொள்கிறது.இந்த Signal Appன் தனியுரிமை அம்சங்கள் (privacy features ) பற்றி கூறுவதாயின் இந்த செயலி end-to-end encryption கொண்டு காணப்படும் ஒரு செயலி ஆகும்.
அதாவது உங்களுடைய தரவு (Data) வை யாராலும் பார்க்க முடியாது என்பதாகும்.இதனால் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு நிறைந்ததாக காணப்படும்.அதுமட்டுமில்லாமல் இந்த signal App முற்றிலும் இலவசமான ஒரு செயலி (open-source software) ஆகும்.
இதனால் இதை அனைவராலும் மிக இலகுவாக எந்தவொரு கட்டணமின்றி பயன்படுத்த முடிகிறது.அதனால் தற்போது இச் செயலி(App) மிகவும் பிரசித்தி பெற்று வருகிறது.அதுமட்டுமில்லாமல் Whatsapp னால் கொண்டுவரப்பட்ட புதிய privacy policy update னாலும் தான். தற்போது உலகின் பிரசித்தி பெற்ற elon musk எலன் மாஸ்க் ம் இதனையே பயன்படுத்துகிறார்.இச் செயலியை Android, iOS, Windows, MacOS மற்றும் Linux devices களிலும் பயன்படுத்த முடிகிறது.
DuckDuckGo : கூகிளுக்கு அடுத்து அதிகம் பயன்படும் பாதுகாப்பான தேடுபொறி
இது போன்ற வேறு தொழில்நுட்பத் தகவல்களை அறிந்து கொள்வதற்கு தொழில்நுட்பம் பகுதியை பார்வையிடுங்கள்.