சுய கவனிப்பு என்றால் என்ன ?
சுய கவனிப்பு தலைமைத்துவம் என்பது உள்ளே துவங்குவது, நிறுவனம் சார்ந்த தலைமைத்துவம் என்பது தனி நபர் தலைமைத்துவதில் தான் துவங்குகிறது. நீங்கள் சிறப்பாக உணரவில்லையெனின் உங்களால் வேலையில் சிறப்பாகச் செயலாற்ற முடியாது. நீங்கள் உங்களைப் பற்றியே சிறப்பாக உணர்ந்தால் ஒழிய, மற்றொருவர் தன்னைப் பற்றியேசிறப்பாக உணருமாறு செய்ய உங்களால் முடியாது. உங்களிடம் சக்தியே இல்லையென்றால், ஒரு நேர்மறைச் சக்தியின் ஆதாரமாக உங்களால் இருக்க முடியாது. வெற்றியின் கதவுகள் வெளிப்புறமாகத் தான் திறக்கின்றன. உட்புறமாக அல்ல.
தனிநபர் தலைமைத்துவம் பற்றி விளக்குவதற்கு உங்களையே கவனித்துக் கொள்ள நேரம் ஒதுக்குங்கள். நல்ல உடலமைப்பை பெறுங்கள். சிறப்பான தொழில் ரீதியான நூல்களையும், உற்சாகமூட்டும் சுயசரிதைகளையும் வாசியுங்கள். திட்டமிட்டு உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். பயிற்சிகளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
உங்களது அன்புக்குரியவர்களுடன் மிகச் சிறப்பான வகையில் நேரத்தை செலவிடுங்கள். இயற்கையோடு கலந்துற வாழுங்கள். வெற்றியை விரட்டிச் செல்லும் நேரத்தில் வாழ்கையை ரசித்து அனுபவியுங்கள்.
உங்கள் மீதே அக்கறை காட்டிக்கொள்வதன் வாயிலாக, பிறருக்கு மேலும் அதிகமாக வழங்க இயலும். நீங்கள் உங்களது மிகச்சிறந்த ஆட்டத்தில் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதன் மூலம், உங்களது தலைமைத்துவத் திறன்பாடு உறுதி செய்யப்படுகிறது.
வாழ்க்கையை ரசித்து அனுபவிப்பதற்கு நேரம் உருவாக்கிக் கொள்வதன் மூலம், சுற்றியுள்ளவர்களையும் உங்களால் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.