Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
கிராம

மண்மணம் மாறாத நம்ம ஊர் திருவிழாக்கள் கிராம தெய்வங்களை மறந்துவிட்டீர்களா?

  • June 18, 2021
  • 208 views
Total
1
Shares
1
0
0

இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.

மண்மணக்கும் கிராம தெய்வங்கள்

Ayyanar (also spelt Aiyyanar, Ayanar or Iyenar) (Tamil: ஐயனார்) is a Tamil  village god, worshipped predominantly in the Indian state… | Epic story,  Deities, Worship
image source

நாம் என்னதான் நகர வாழ்க்கைக்கு பழகியிருந்தாலும் நாம் வாழ்ந்த கிராமங்களை நினைக்கும்போது அந்த மண்வாசனை நம் மனதில் வந்துபோகும். அதிலும் பண்டிகை, விழாக்காலங்கள், வீட்டு விசேஷங்கள் வந்துவிட்டால் இளைஞர்கள் என்றால் மல்லுவேட்டி, வெள்ளை சட்டை சகிதமாய் கிளம்பிவிடுவார்கள்.

மறுபுறம், யுவதிகளோ பாவாடை, தாவணி எனப் பாரம்பரிய உடைகளில் பட்டாம்பூச்சியாய் வட்டமிடுவார்கள். நாம் வளர்ந்த சூழலை விட்டுக்கொடுக்காத குணமும், நம் பண்பாட்டின் மேல் உள்ள பற்றும் பாசமுமே இதற்கு காரணம்.

மண்மணம் மாறாத நம்ம ஊர் திருவிழாக்களில் நாம் கலந்து கொள்ளும் விதத்தினை ஞாபகப்படுத்தும் பதிவுதான் இது

மண்மணக்கும் கிராம தெய்வங்களை மூன்று வகையாக பிரித்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்

மண்மணம் மாறாத நம்ம ஊர் திருவிழாக்கள் கிராம தெய்வங்களை மறந்துவிட்டீர்களா?
image source
  • குடும்ப தெய்வம்
  • குலதெய்வம்
  • ஊர்த் தெய்வம்

குலதெய்வம்

குலதெய்வம் என்பது நமது வம்சாவளியாக வந்த மூதாதையர்களுள் ஒருவர்தான் குலதெய்வமாக இருப்பார். சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர், மூதாதையரில் ஒருவர், தன் வழித்தோன்றல்கள் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக சண்டையிட்டு வீர மரணமடைந்திருப்பார். இவ்வாறு மரித்தவர்களை நினைவுக்கூறுவதற்காகவும், தங்களின் சந்ததியினரை காத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் உருவான தெய்வ வழிபாடுதான் ‘குலதெய்வ வழிபாட்டு முறை”.

இதில், அந்த மூதாதையரை கடவுளாக எண்ணி வணங்கும் அவரின் நெருங்கிய உறவுகள், ரத்தக்கலப்பு உள்ளவர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் என தலைமுறை தாண்டிய சொந்தங்கள் பல குடும்பங்களாக பல்கி பெருகியிருக்கும். இந்த குழுவில் இருப்பவர்களே, ஒரு வீட்டுப் பங்காளிகள் என அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள், தங்கள் சக பங்காளிகள் வீட்டில் பெண்ணெடுக்கவோ, பெண் கொடுக்கவோ மாட்டார்கள். ஆண்டுக்கு ஒருமுறை, இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, குலதெய்வத்துக்கு சிறப்பு வழிபாடு செய்யும் பழக்கம் பரவலாக இன்றும் காணப்படுகிறது.

குடும்ப தெய்வம்

பங்காளிகளாக இருந்து, ஒரே குலதெய்வத்தை வழிபடுபவராக இருந்தாலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு குடும்ப தெய்வமும் இருக்கும்.

மண்மணம் மாறாத நம்ம ஊர் திருவிழாக்கள் கிராம தெய்வங்களை மறந்துவிட்டீர்களா?
image source

ஒவ்வொரு பொங்கலின் போதும், ‘குடும்ப தெய்வத்துக்கு” படையல் இடுகின்றனர். மேலும், ஏதேனும் ஓர் இக்கட்டான சூழலில் தீர்க்கமான முடிவு எடுப்பதற்கு, சீட்டில் பிரச்சனைகளை எழுதி, ‘குலுக்குச் சீட்டு” போட்டு எடுக்கும் முறையும் குடும்ப தெய்வ வழிபாட்டில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அதேபோல், ஒவ்வொரு ஊரிலும் குடும்ப தெய்வத்துக்கு செய்யும் சடங்குகள், அக்குடும்பத்தின் தலைவர் முன்னிலையில் நடக்கும்.

Pavalakodi Amman Karupusamy pongal - YouTube
image source

ஊர்த் தெய்வம்

ஊரில் பெரும்பான்மையான மக்களுக்குண்டான பொதுவான தெய்வமே ‘ஊர்த் தெய்வம்” என்கின்றனர். பெரும்பாலும் ஊர்த் தெய்வங்கள் உக்கிர தேவதைகளாகவோ அல்லது ஆயுதங்களுடனோ காணப்படுகின்றன.

ஊர்த் தெய்வங்கள் பெரும்பாலும், ஊரின் மையப்பகுதியில் அருள்பாலிக்கின்றன. இப்பகுதியில் முக்கியமான ஊர்க் கூட்டங்கள், திருவிழாவின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஊர்த் தெய்வங்களுக்கு பெரும்பாலும் விவசாயம் முடிந்து, அறுவடை முடிந்த காலங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

மண்மணம் மாறாத நம்ம ஊர் திருவிழாக்கள் கிராம தெய்வங்களை மறந்துவிட்டீர்களா?
image source

இந்த ஊர்த் தெய்வங்களின் முக்கியமான பரிவார தெய்வங்கள் ஊரின் எல்லைப்பகுதியில் நிலைநிறுத்தப்படுகின்றன. இவற்றுக்கு ‘எல்லைத் தெய்வங்கள்” என்று பெயர். நம் ஆதித்தமிழர்களின் முக்கியத் தொழிலாக, வேட்டையாடுதல் இருந்திப்பதால், இத்தெய்வங்களுக்கு வேல், அரிவாள் எனும் கூர்தீட்டிய ஆயுதங்கள் கொண்டு சிலைகள் உருவாக்கப்படுகின்றன.

40ஆண்டுக்கு முன்பு இந்தமாதிரி நோய்கள் யாருக்குமே வந்தது கிடையாது உங்களுக்கு தெரியுமா??

wall image

Post Views: 208
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
அருண்

புதிய தொழில்நுட்பத்தில் அருண் விஜயின் போர்டர்..!

  • June 17, 2021
View Post
Next Article
மூன்று

மூன்று வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது ஷென்சோ 12..!

  • June 18, 2021
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.