இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அறியாததை அறிந்து கொள்வோம்.
நாம் மார்கழியில் அனுமனின் அவதார தினத்தைக் கொண்டாடுகிறோம். ஆந்திர மாநிலத்தில் சித்திரைப் பெளர்ணமியை அனுமன் ஜயந்தியாகக் கொண்டாடுகிறார்கள்.
சித்திரை மாதம் பௌர்ணமி அன்று அனுமனின் பெற்றோரான கேசரியும், அஞ்சனையும் மலைச் சிகரம் ஒன்றில் அமர்ந்து உரையா டிக் கொண்டிருந்தனர். அந்த வேளையில், பிரம்மதேவனின் கட்டளைப்படி அஞ்சனையின் கர்ப்பத்தில் வாயு பகவான் பிரவேசித்தார் என்றும், வாயுவின் அவதாரமாக அனுமன் தோன்றினார் என்றும் புராணம் சொல்கிறது. இந்தக் கூற்றின்படி அனுமன் தோன்றிய நாள் சித்திரை பௌர்ணமி எனும் நம்பிக்கையின்படி ஆந்திர மாநிலத்தில் இந்த தினத்திலேயே அனுமத் ஜயந்தி கொண்டாடப்படுகிறது. வடநாட்டில் வைசாக (வைகாசி) பௌர்ணமிக்கு அடுத்த செவ்வாய்க்கிழமையன்று அனுமத் ஜயந்தி கொண்டாடப் படுகிறது.
வருகிறது அனுமன் ஜெயந்தி… சனி தோஷம் நீங்க… வாயு புத்திரனை வணங்குங்கள்…!!
நமது புராணங்கள், இதிகாசங்களில் எத்தனையோ வீர புருஷர்கள் இருந்தாலும், ஒரு சிலர் மட்டும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் மக்களின் மனதில் தங்களின் சிறந்த குணங்களால் நிலைத்து நிற்கின்றனர். அப்படிபட்ட ஒரு காவிய நாயகன்தான் ‘ஸ்ரீ ஆஞ்சநேயர்” ஆவார்.
அஞ்சனை மைந்தன் அனுமன் வழிபாடு…!!
மேலான குணங்கள் அனைத்திற்கும் உதாரணமாக இருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் பிறந்த மார்கழி மாதம் மூலம் நட்சத்திர தினம் ‘அனுமன் ஜெயந்தி” தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் (12.01.2021) செவ்வாய்க்கிழமை அனுமன் ஜெயந்தியாகும்.
ராமாயண காவியத்தில் ஈடுஇணையற்ற இடத்தைப் பிடித்தவர் அனுமன். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்குச்சாதுர்யம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் அனுமன்.
அனுமனின் மகிமைகள் எண்ணிலடங்காதவை. அஞ்சனை என்னும் கந்தர்வப் பெண்ணிடம் வாயுவின் அனுக்கிரகத்தின் மூலம் உதித்ததால் ஆஞ்சநேயர் எனப் பெயர் பெற்றார்.
அனுமன் ஒரு தெய்வப்பிறவி ஆவார். அவர் சிவபெருமானின் வடிவானவர். தன் இளம் வயதிலிருந்தே அனைத்து வகையான கலைகளையும் கற்று தேர்ந்தவர். எனவே அவருக்கு ‘சுந்தரன்” என்கிற பெயரும் உண்டு. பிரம்மச்சர்யத்திற்கு உதாரணமானவராக இருப்பது ஸ்ரீ ஆஞ்சநேயர்தான்.
இறவா வரம் பெற்ற சிரஞ்சீவிகளில் ஆஞ்சநேயரும் ஒருவர். இலங்கையிலிருந்து சீதையை வணங்கி அனுமன் விடை பெற்றுக் கொள்ளும் போது சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து ஓர் இலையைக் கிள்ளி அனுமன் தலையில் போட்டு வாழ்த்தியதால் அவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து நாம் அவரது ஆசியைப் பெறலாம்.
ஆஞ்சநேயரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் :
- ஆஞ்சநேயரை வழிபடுவதால் உங்கள் வாழ்வில் ஏற்படும் துக்கங்கள், கஷ்டங்கள் நீங்கும்.
- பீடைகள் ஒழியும். கிரக தோஷங்கள் குறிப்பாக சனி கிரக தோஷங்கள் நீங்கும்.
- துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரீக பாதிப்புகள் நீங்கும்.
- தொழில், வியாபார முடக்க நிலை நீங்கி நல்ல லாபம் கிடைக்கும்.
- திருமண பாக்கியம், குழந்தைப்பேறு மற்றும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி போன்ற நன்மைகள் கிடைக்கும்.
- அவருக்கு ஸ்ரீ ராம ஜெயம் எழுதி மாலையாக போட்டால் அனைத்துச் செயலும் வெற்றியாகவே முடியும்.
- ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றினால் குழந்தை பாக்கியமும்,
- துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும்,
- வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும்,
- வெற்றிலை மாலை சாற்றினால் திருமணத்தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
ராம நாமம் கேட்கும் இடங்களில் அனுமன் அமர்ந்திருப்பார் என்பது ஐதீகம். ராமபிரானின் சேவகன் அனுமனை அவர் அவதரித்த நாளில் வணங்கினால் தொல்லைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அனுமனை விரதம் இருந்து வழிபட்டால், சனி பகவானால் ஏற்படும் துன்பத்தை ஓரளவு குறைத்துக்கொள்ள நமக்கு வழிபிறக்கும்.
ஸ்ரீ ராம ஜெயம்
இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.