Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

எதிர்த்துப் பேசும் உங்கள் பிள்ளையை கையாள 7 அறிவுரைகள்!!

  • July 27, 2020
  • 420 views
Total
9
Shares
9
0
0

உங்கள் பிள்ளை எப்போதுமே உங்களுக்கு ஒரு தேவதைதான், ஆனால் திடீரென்று அவருடனான தொடர்பாடல் சுமூகமாக இல்லை என்பதை உணர்கிறீர்களா ? பிள்ளைகள் பொருத்தமற்ற முறையில் எதிர்த்துப் பேசுவதற்கு அல்லது கண்களை உருட்ட அல்லது முறைக்க ஆரம்பிக்கலாம். இது மனதை நோகடிப்பதாகத்தான் தோன்றும், ஆனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் ஆரோக்கியமான உறவை வளர்ப்பதற்காக இந்த சூழ்நிலைகளை சரியாகக் கண்டுபிடித்து நிர்வகிக்கலாம்.

குடும்பத்தில் மரியாதையை பராமரிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை எல்லோரும் உணர்வது கட்டாயம், உங்கள் பிள்ளை எதிர்த்து பேசும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான இந்த 7 படிகளை முன்னிலைப்படுத்த விரும்புகிறோம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்த்துப் பேசும் பிள்ளையை கையாள வேண்டிய 7 படிமுறைகள்

படி 1: ஒரே தொனியில் பதிலளிப்பதைத் தவிர்க்கவும்.

எதிர்த்துப் பேசும்  பிள்ளை
image source

ஆம், உங்கள் பிள்ளை எதிர்த்துப் பேசும்போது சில நேரங்களில் அமைதியாக இருப்பது கடினம், ஆனால் உங்கள் சொந்த மொழியைக் கண்காணிப்பது முக்கியம். மரியாதை காட்டுவது எப்படி என்பதற்கு நீங்கள் உதாரணமாக இருக்க முயற்சிக்க வேண்டும். கத்துவது, அலறுவது அல்லது கெட்ட வார்த்தைகள் மூலமாக நீங்களும் உங்களுக்குள் உள்ள மிருகத்தை வெளிவிடக்கூடாது.

அதே நேரத்தில், உங்கள் பிள்ளை உங்களுடன் எதிர்த்துப் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டாம். எதிர்பார்க்கப்படும் நடத்தைக்கான வழிகாட்டுதல்களை நிறுவவும். “நல்லது,” “ஆம், சரி,” “எனக்கு ஒரு இடைவெளி கொடுங்கள்,” “எதுவாக இருந்தாலும்” போன்ற சொற்களைக் கேட்கும்போது உங்கள் பிரதிபலிப்புக்களைக் காட்டுங்கள். இந்த எதிர்வினை நிறுத்தப்பட வேண்டும் என்று உங்கள் பிள்ளைக்குச் சொல்லுங்கள் மற்றும் அவரது நடத்தையை சரிசெய்ய அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். “இப்படிப் பேசாதே” போன்ற வாக்கியங்களைப் பயன்படுத்த வேண்டாம், நீங்கள் அவர்களுடன் பேசும்போது உங்கள் பிள்ளையின் கண் மட்டத்தில் மண்டியிடவும் , அவர்களுடன் சமமாக இருந்து உரையாடவும்.

படி 2: அவர்கள் கொண்டிருக்கும் சிக்கலைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவும்.

உங்கள் பிள்ளை அவர்களின் நடத்தையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கிறார் என்பதையும், சில சமயங்களில் பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது என்று அவர்களுக்குத் தெரியாது என்பதையும் மறந்துவிடாதீர்கள். எனவே, அவர்கள் பொறுமை இல்லாததைக் காண்பிப்பது இயல்பு. அவர்களின் தொனியில் கவனம் செலுத்தி கட்டுப்பாடுகளை அமைத்த பிறகு, அவர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவும். பெரும்பாலும் ஒரு பிள்ளை எதிர்த்துப் பேசும்போது, ​​அவர்கள் கோபம், விரக்தி, கவலை அல்லது பயத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிள்ளையுடனும் குறைந்தது 15 நிமிடங்களாவது தனியாக செலவழிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அவர்களிடம் கவனமாகவும், நேர்மறையான மனப்போக்குடனும் நடந்து கொள்ளுங்கள். அவர்களின் தேவைகள், நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் பிள்ளை பிரபஞ்சத்தைப் படிப்பதில் ஆர்வம்காட்டும் ஒருவராக இருந்த பட்சத்தில் நீங்கள் அவரை ஒருபோதும் கோளரங்கத்துக்கு அழைத்துச்செல்லவில்லை எனில் அவர்களுக்கு உல்லாசப் பயணம் கூட கசப்பாகத்தான் தெரியும். .

படி 3: உங்கள் பிள்ளை வருத்தப்படுவதை நீங்கள் அறிவீர்கள் என சொல்லுங்கள்.

உளவியலாளர்கள் இது போன்ற வாக்கியங்களைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்: “அச்சச்சோ! நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் புண்படுத்தும் விதமாக இருக்கின்றன. நீங்கள் என்னிடம் அப்படி பேசுகிறீர்கள் என்றால் நீங்கள் வருத்தத்தில் இருக்க வேண்டும்.” அல்லது “இதைப் பற்றி நான் அதிகம் கேட்க விரும்புகிறேன், ஆனால் நீங்கள் இப்படி உங்களால் தாக்கிப் பேசப்படுகையில் கேட்க முடியாது” போன்ற வசனங்கள் உதவும்.  உங்கள் பிள்ளை அதற்குப் பின்னும் உங்களிடம் கத்துகிறார்களானால், நீங்கள் இருவரும் அமைதியாக இருக்க வாய்ப்பு கிடைத்தவுடன் சிக்கலைப் பற்றி பேசப் பரிந்துரைக்கப்படுகிறது.

படி 4: விளைவுகளைக் காட்டி மரியாதையை எதிர்பார்க்கலாம்.

கண்ணியமாக இருப்பது அவர்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை பிள்ளைகள் உணர வேண்டும். ஒவ்வொரு கெட்ட வார்த்தையும் அல்லது கண் உருட்டலும் புறக்கணிக்கப்படக்கூடாது. சில நேரங்களில் உங்கள் பிள்ளையின் மோசமான மனநிலையின் சிக்கலை பற்றி அறிந்த பிறகும் அவரை சரிப்படுத்த சில நினைவூட்டல்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

எதிர்த்துப் பேசும் உங்கள் பிள்ளையை கையாள 7 அறிவுரைகள்!!
image source

ஒவ்வொரு முறையும் அவர்கள் எதிர்த்துப் பேசும்போது என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை உங்கள் பிள்ளை அறிந்திருக்க வேண்டும், எனவே எப்போதும் திட்டவட்டமாக இருங்கள், நீங்கள் அவமரியாதைக்கு ஒத்துப்போக மாட்டீர்கள் என்பதைக் காட்டுங்கள். மேலும், கூடுதல் வேலைகளைச் சேர்ப்பதன் மூலமோ அல்லது டிவி அல்லது கணினி நேரத்தை குறைப்பதன் மூலமோ மோசமான நடத்தையின் விளைவுகளை நீங்கள் காட்டலாம்: “நீங்கள் என்னிடம் அப்படி பேச முடிவு செய்தால், உங்கள் நண்பர்களுடன் விளையாட நீங்கள் செல்ல முடியாது”  எனக் கூறலாம். இந்த வழக்கில், அவர்கள் அதை தீவிரமாக கருதுவார்கள். ஆனால் பிள்ளை எதிர்த்துப் பேசுவதை நிறுத்தாவிட்டால் உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறக்காதீர்கள்.

படி 5: உங்கள் பிள்ளை தங்கள் கருத்தை வெளிப்படுத்தட்டும்.

நினைவில் கொள்ளுங்கள், பிள்ளைகள் ஏதாவது ஒன்றைப் பற்றி தங்கள் கருத்தை வெளிப்படுத்தினால், அது நல்லது. ஆனால் அவர்கள் அதை நட்பு முறையில் செய்ய வேண்டும். மேலும், இதைச் செய்ய தங்களுக்கு பாதுகாப்பான இடம் இருப்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை விளக்க முயற்சிக்கும்போது அவற்றைத் தடுக்காமல் அல்லது துண்டிக்காமல் இருப்பது நல்லது.

அவர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சினை இருக்கிறது என்பதைக் கேட்டு கவனம் செலுத்துங்கள். பச்சாத்தாபம் மற்றும் புரிதலைக் காண்பிப்பது மிகவும் முக்கியமானது, எனவே உங்கள் பிள்ளை உங்களை எதிரியாக கருதாமல் கருத்தைப் பகிர அது உதவும்.

படி 6: உங்கள் பிள்ளை வழக்கமாக எப்போது எதிர்த்துப் பேசுகிறார் என புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

எதிர்த்துப் பேசும் உங்கள் பிள்ளையை கையாள 7 அறிவுரைகள்!!
image source

உங்கள் பிள்ளை எதிர்த்துப் பேசும்போது ஏதேனும் ஒற்றுமைகளை நீங்கள் கவனித்திருந்தால், இது ஒரு நல்ல விஷயம். இல்லையென்றால், இவை பொதுவாக எப்போது நிகழ்கின்றன என்பதைப் பற்றி ஆழமாக சிந்தியுங்கள். உங்கள் பிள்ளை ஒவ்வொரு நாளும் மோசமான மனநிலையில் பள்ளியிலிருந்து திரும்பி வரக்கூடும். அதை நீங்கள் கவனிப்பது ஒரு பெரிய சிக்கலைத் தீர்ப்பதற்கும் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளைத் தவிர்ப்பதற்கும் முக்கியமாக இருக்கும்.

படி 7: நல்ல நடத்தையைப் பாராட்டுங்கள்.

எல்லோரும் பாராட்டப்படுவதை விரும்புகிறார்கள், உங்கள் பிள்ளைகள் விதிவிலக்கல்ல. உங்கள் பிள்ளை எதிர்த்துப் பேசுவதை நிறுத்திவிட்டு உங்களுக்கு நன்றியைக் காட்டுவதைக் கண்டால், நீங்கள் அவர்களுக்கு ஒரு அரவணைப்பு, பாராட்டு அல்லது நன்றியை பரிசாக கொடுக்கலாம்.

ஆனால் அதே நேரத்தில், நட்பாக இருப்பது என்பது அவர்கள் விரும்பும் எதையும் பெற முடியும் என்று அர்த்தமல்ல என்பதை பிள்ளைகள் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்களோ அல்லது பிள்ளையோ “எதுவாக இருந்தால் என்ன” என்ற வார்த்தையை எத்தனை முறை சொல்கிறீர்கள் எனக் கவனித்துப் பாருங்கள்.அசமந்தப் போக்கு திமிர் நடத்தை மற்றும் பிடிவாதத்துக்கு காரணமாக மாறுகிறது. உங்கள் வீட்டிலும் இவ்வாறான பிள்ளைகள் இருந்தாலம் மேற்கூறிய யுக்திகளை உபயோகியுங்கள். உங்கள் அனுபவங்களை எம்முடன் கருத்துக்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இது போன்ற வேறுபட்ட தகவல்களுக்கு மனித உறவுகள் பகுதியைப் பார்வையிடுங்கள்.

Wall Image Source

Post Views: 420
Total
9
Shares
Share 9
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
ஸ்மார்ட் வாட்ச்

ஸ்மார்ட் வாட்ச் உங்கள் ஆரோக்கியத்தை கவனிக்கும்!!

  • July 26, 2020
View Post
Next Article
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஆரம்பிக்கும் ஐபோன் உற்பத்தி ஆலை

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஆரம்பிக்கும் ஐபோன் உற்பத்தி ஆலை

  • July 27, 2020
View Post
You May Also Like
துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

மனிதனுக்கு
View Post

மனிதனுக்கு முன்னர் மனிதத்தை இறக்க விடாதீர்கள்..!

அனு : இயலாமையோடு நடுங்கும் குளிரில் நோயுற்ற அம்மாவுக்காக வேலை செய்யும் அழகிய உயிர்
View Post

அனு : இயலாமையோடு நடுங்கும் குளிரில் நோயுற்ற அம்மாவுக்காக வேலை செய்யும் அழகிய உயிர்

நட்பை
View Post

நட்பை வலுப்படுத்தும் புரிதல்..!

கருப்பையில் குழந்தை கற்கும் 4 வித்தியாசமான முறைகள்
View Post

கருப்பையில் குழந்தை கற்கும் 4 வித்தியாசமான முறைகள்

நம் குழந்தை பருவத்தில் அறிந்திருக்கலாமென ஆசைப்படும் 7 பழக்கங்கள்
View Post

நம் குழந்தை பருவத்தில் அறிந்திருக்கலாமென ஆசைப்படும் 7 பழக்கங்கள்

உங்களை தூண்டி விட்டு, குறைத்துப் பேசி நிலைப்பவர்களிடம் இருந்து விலக 5 வழிகள்
View Post

உங்களை தூண்டி விட்டு, குறைத்துப் பேசி நிலைப்பவர்களிடம் இருந்து விலக 5 வழிகள்

உங்கள் குழந்தைகள் சுதந்திரமாகவும் தன்னம்பிக்கையுடனும் மாற 5 குறிப்புகள்
View Post

உங்கள் குழந்தைகள் சுதந்திரமாகவும் தன்னம்பிக்கையுடனும் மாற 5 குறிப்புகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.