தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு மீது சென்னை பொலீஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தினரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர். அண்மையில் அவர் முடிதிருத்துனராக நடித்து வெளிவந்த மண்டேலா என்ற திரைப்படத்தில் தமது சமூகத்தினரை கிண்டல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்றும் படம் முழுவதும் இது போன்ற காட்சிகள் உள்ளன என சுட்டிக்காட்டியிருக்கும் இந்த சங்கத்தினர் இதன் மூலம் முடிதிருத்தும் சமுதாயத்தை சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
காரில் ஏற்றாமல் அலைக்கழிப்பதும், பின்புற வாசலில் முடி திருத்தும் தொழிலாளியை வரச் சொல்வதும், குழந்தைகளிடம் பூச்சாண்டி என்று கூறுவதும் என எங்களை நாகரிகமற்ற முறையில் இழிவுபடுத்தியுள்ளார்கள். இதனால் அனைவரும் மனவேதனை அடைந்துள்ளார்கள். இதனால் மண்டேலா படத்தைத் தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்
ஆகவே இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேற லெவல்- தனுஷின் கர்ணனுக்கு விஜய் சேதுபதியின் விமர்சனம்..!
இதுபோன்ற சுவாரசியமான சினிமா செய்திகளுக்கு எமது சினிமா பக்கத்தை நாடவும்.