Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
குரு

குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

  • November 13, 2021
  • 254 views
Total
1
Shares
1
0
0
Darchanamoorthy God Wallpapers | Dhakshinamoorthy God Desktop Wallpapers  Download | Guru Bhagavan | New sri guru bhagavam wallpaper -  Clipartsmania.com
image source

மங்களகரமான பிலவ வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 27ஆம் (13.11.2021) தேதியன்று இயற்கை சுபரான குருதேவர் செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டம் மூன்றாம் பாத நட்சத்திரத்தில் அதாவது, இன்று சனிக்கிழமை மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

மங்களகரமான பிலவ வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கார்த்திகை மாதம் 4ஆம் (20.11.2021) தேதியன்று இயற்கை சுபரான குருதேவர் செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டம் மூன்றாம் பாத நட்சத்திரத்தில் அதாவது, சனிக்கிழமையன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

குருவானவர் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் குரு பார்வை கோடி புண்ணியம் என்று அழைக்கப்படுகின்றது.

மேஷ ராசி

தடைகளையும் வெற்றி கற்களாக மாற்றக்கூடிய மேஷ ராசி அன்பர்களே இந்த வருட குரு பெயர்ச்சி உங்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும், வாழ்க்கையின் மீது ஆசையும், புதிய நபர்களின் அறிமுகத்தையும் ஏற்படுத்தக்கூடிய பொன்னான காலமாக அமையும்.

வழிபாடு

வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்துவர மனதில் நினைத்திருந்த எண்ணங்கள் கைகூடும்.

ரிஷப ராசி

கலகலப்பான பேச்சுக்களின் மூலம் அனைவரையும் கவரக்கூடிய ரிஷப ராசி அன்பர்களே இந்த வருடம் குரு பெயர்ச்சி உங்களுக்கு பார்வையை விசாலப்படுத்தி, உறவுகளின் ஒத்துழைப்புகளை உருவாக்கி, நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வை அமைத்துக் கொள்ளக்கூடிய பொன்னான காலமாக அமையும்.

வழிபாடு

மகாலட்சுமியை வழிபாடு செய்துவர மேன்மையான வாய்ப்புகளும், சூழ்நிலைகளும் உண்டாகும்.

மிதுன ராசி

சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு தனது காரியத்தை சாதித்துக் கொள்ளக்கூடிய மிதுன ராசி அன்பர்களே இந்த வருடம் குரு பெயர்ச்சியானது உங்களுக்கு மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தன்னம்பிக்கையுடன் புதுவிதமான சிந்தனைகளை செயல்படுத்துவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கக்கூடிய நல்லதொரு பொற்காலமாக அமையும்.

வழிபாடு

சீரடி சாயி பாபாவை வியாழக்கிழமைதோறும் வழிபாடு செய்துவர சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.

கடக ராசி

விவேகமான எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் அனைவரையும் கவரக்கூடிய கடக ராசி அன்பர்களே இந்த வருடம் குரு பெயர்ச்சி உங்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உங்களின் மீதான நம்பிக்கைகளை மேம்படுத்தும் செல்வச்சேர்க்கையை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கும், சுபகாரியம் தொடர்பான விரயங்களும் ஏற்படும்.

வழிபாடு

திங்கட்கிழமைதோறும் அம்பிகையை வழிபாடு செய்துவர தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.

சிம்ம ராசி

எதிலும் துரிதத்துடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே வருகின்ற குரு பெயர்ச்சி உங்களுக்கு மனதில் புதுவிதமான எண்ணங்களையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தி தயக்க உணர்வுகளை குறைத்து தைரியத்தை உருவாக்கி ஒத்துழைப்புகளை அதிகரிக்கக்கூடிய பொன்னான காலமாக அமையும்.

வழிபாடு

பிரம்ம தேவரை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்களும், தயக்கங்களும் குறையும்.

கன்னி ராசி

கனிவான பேச்சுக்களின் மூலம் காரியங்களை சாதிக்கக்கூடிய கன்னி ராசி அன்பர்களே இந்த வருடம் குரு பெயர்ச்சி உங்களுக்கு தொழில் சார்ந்த துறையில் முன்னேற்றத்தையும், அலைச்சல்களின் மூலம் ஆதாயத்தையும், வாக்கு சாதுர்யத்தின் மூலம் பொருட்சேர்க்கையும் ஏற்படுத்தக்கூடிய பொன்னான காலமாக அமையும்.

வழிபாடு

தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்துவர சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும்.

துலாம் ராசி

எதிலும் நடுநிலைத்தன்மையுடன் செயல்படக்கூடிய துலாம் ராசி அன்பர்களே இந்த வருடம் குரு பெயர்ச்சி உங்களுக்கு வெளிவட்டாரங்களில் செல்வாக்கை மேம்படுத்தும். மேலும் பலதரப்பட்ட மக்களின் ஆதரவையும் உருவாக்கி எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழ்நிலைகளை அமைக்கக்கூடிய பொன்னான காலமாக அமையும்.

வழிபாடு

அர்த்தநாரீஸ்வரரை வழிபாடு செய்துவர செய்யும் செயல்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும்.

விருச்சிக ராசி

எதிலும் சுறுசுறுப்பாகவும், வேகமாகவும் செயல்படக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களே இந்த வருடம் குரு பெயர்ச்சியானது நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பதற்கும், தனக்கென ஒரு இடத்தினை உருவாக்குவதற்கும், புதுமையான கண்ணோட்டத்தில் செயல்படுவதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

வழிபாடு

அர்த்தநாரீஸ்வரரை வழிபாடு செய்துவர முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு ராசி

எதிலும் பொறுமையுடன் செயல்பட்டு மேன்மையை உருவாக்கக்கூடிய தனுசு ராசி அன்பர்களே இந்த வருடம் குரு பெயர்ச்சி உங்களுக்கு மனதில் நினைத்திருந்த ஆசைகளையும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பையும், செல்வாக்கை மேம்படுத்துவதற்கான சூழ்நிலைகளையும் உருவாக்கக்கூடிய நல்ல காலமாக அமையும்.

வழிபாடு

முருகப்பெருமானை மனதார செவ்வரளி மலர் சாற்றி வழிபாடு செய்துவர சுபிட்சமான சூழல் ஏற்படும்.

மகர ராசி

எதிலும் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயல்பட்டு வெற்றி காணக்கூடிய மகர ராசி அன்பர்களே இந்த வருடம் குரு பெயர்ச்சி உங்களுக்கு பலதரப்பட்ட அனுபவங்களையும், நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவான புரிதலையும், செல்வாக்குகளை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் உண்டாக்கும்

வழிபாடு

ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் விலகும்.

கும்ப ராசி

நிதானமான செயல்பாடுகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய கும்ப ராசி அன்பர்களே இந்த வருடம் குரு பெயர்ச்சியானது புதுமையான சிந்தனைகளையும், ஆசைகளையும் உருவாக்கி, அதற்குண்டான ஒத்துழைப்பையும் ஏற்படுத்தி சாதகமான முடிவையும் அளிக்கக்கூடிய ஒரு பொற்காலமாக அமையும்.

வழிபாடு

விநாயகரை வழிபாடு செய்துவர மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

மீன ராசி

பொறுமை குணம் கொண்ட மீன ராசி அன்பர்களே இந்த வருடம் குரு பெயர்ச்சி உங்களுக்கு சிந்தனைகளில் புதுவிதமான மாற்றத்துடன் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெற்று, புதுமையான அனுபவங்களுடன், வளமான எதிர்காலத்தை உருவாக்கி அதற்கான வாய்ப்புகளையும் அமைக்கும் காலமாக அமையும்.

வழிபாடு

காவல் தெய்வங்களான பைரவர், கருப்புசாமி, ஆஞ்சநேயர் இவர்களை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளை தகர்த்தெறிந்து வெற்றி அடைவீர்கள்.

பணக்கஷ்டத்தை தீர்த்து.. செல்வ செழிப்பை தரும் காமதேனு

wall image

Post Views: 254
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
Netflix அதிகாரபூர்வமாக இம்மாதம் கேமிங் துறைக்குள் கால்த்தடம் பதிக்கிறது..!

Netflix அதிகாரபூர்வமாக இம்மாதம் கேமிங் துறைக்குள் கால்த்தடம் பதிக்கிறது..!

  • November 12, 2021
View Post
Next Article
மேக்கப்

மேக்கப் பிரஷ்களை பராமரிக்கும் வழிமுறை..!

  • November 13, 2021
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.