ஜி டி ஏ என்பது ஒரு தொழில் நுட்ப விளையாட்டு!!
மனிதர்கள் வாழக்கூடிய உலகத்தை அப்படியே மீண்டும் உருவாக்கிக் கொடுத்து
அதிலே நம்மை ஒரு பாதாள உலக நபராக பல சவால்களையும் தொழில்களையும்
போட்டிகளையும் நாம் நிறைவேற்ற வேண்டி இருக்குமாறு வடிவமைக்கப்பட்ட
ஒரு அதி உச்ச தொழில் நுட்ப விளையாட்டுதான் இந்த ஜி டி ஏ என்பது.
வைஸ் சிட்டி,சன் அண்ட்ரியஸ், 3, 4 , 5 என்று தமது தொழில்நுட்ப ரீதியிலும் சரி கதை அமைப்பிலும் சரி சிறந்த கிராபிக்களிலும் சரி அபிவிருத்தி அடைந்து கொண்டே வந்திருக்கிறது இந்த ஜி டி ஏ கேம்ஸ்.
அதன் அடுத்த கட்டம்தான் ஜி டி ஏ ஒன்லைன் என்பது. இதில் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலத்தோடு கனெக்ட் ஆகி இருக்க புதிய புதிய வித்தியாசமாக அதாவது ஏலியன்கள் வருவது, புதிய கப்பல் ஊருக்குள் வருவது போன்று வித்தியாசமான Mod களை தொடர்ச்சியாக ஜி டி ஏ அறிமுகம் செய்து
கொண்டே இருக்கும்.
கேம் விளையாடுவோரும் அவற்றை சென்று பார்ப்பது,அவற்றில் புதிய புதிய விடயங்களை செய்வது, அதில் கொடுக்கப்படும் சவால்களை முடிப்ப,து என சுவாரஸ்யமாக இருப்பார்கள். ஆனால் அண்மைக்காலமாக இந்த ஒன்லைனில் இருக்கின்ற பொருட்களின் விலையை அதிகமாக கூட்டி வைத்து அங்கு நடைபெறும் வியாபாரத்தை குறைத்து பொருளாதார வீழ்ச்சி இணை ஜி டி ஏ வை உருவாக்கிய ராக்ஸ்டார் நிறுவனமானது செய்து வருகிறது.
இந்தக் கேம்களின் ஒரு ரசிகர் தெரிவிக்கின்ற படி இந்த மாதிரியான
செயற்பாட்டுக்கு காரணம் அவர்கள் ஜி டி ஏ 6 கேமினை வெளியிடப் போவது தான்
என்று கூறுகிறார். உதாரணமாக சொல்லப் போனால் கேமில் 2013 இல் 12 ஆயிரம்
டொலர்கள் விற்ற ஒரு சுல்தான் வகை கார் இரண்டாயிரத்து இருபதில் ஒன்று
தசம் இரண்டு மில்லியன் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கேமில் இருக்கின்ற இந்த
பண பெறுமதிக்கு ஏற்றாற் போல நாம் நிஜமாக செலவழிக்க வேண்டிய பணமும்
சிறிதளவு அதிகரித்திருக்கிறது. அதனால் நிறைய பேர் இவற்றை வாங்குவதற்கு
தயங்குகிறார்கள். இவ்வாறு இவர்கள் செய்வதற்கான காரணம் புதிதாக இவர்கள்
வெளியிடப் போகின்ற ஜி டி ஏ 6 கேமினை ஒன்லைன் முறையிலேயே வெளியிட
இருப்பதால் எல்லோரும் அதன்பால் ஈர்க்கப்பட்ட வேண்டும் என்பதற்காக
செய்கிறார்கள் என்று கூறுகிறார்.
ஆனாலும் ஜி டி ஏ 6 வருகிறதோ இல்லையோ ஜி டி ஏ ஒன்லைன் கான ஆதரவை
தொடர்ந்தும் ராக் ஸ்டார் நிறுவனம் வழங்கியே ஆகவேண்டும். ஏனெனில் அதிகபட்சமான ரசிகர் பட்டாளத்தையும் வருமானத்தையும் தொடர்ந்தும்
அளித்துக் கொண்டிருப்பது ஜி டி ஏ ஒன்லைன் ஒன்று தான்.
மேலும் பல கேமிங் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.
Wall image source:https://twitch.amazon.com/prime/loot/gtaonline