Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

Google சந்தைப்படுத்தல் செலவீனங்களில் 50% குறைவை சந்திக்கும்

  • May 14, 2020
  • 357 views
Total
1
Shares
1
0
0

Google கூட Covid-19 க்கு எதிர்ப்பு சக்தியை பெறவில்லை

Covid-19 தாக்கத்தில் இருந்து எழுவதற்காக Google ஆனது தனது அத்தியாவசியமற்ற சந்தைப்படுத்தல் செலவீனங்களில் 50% ஐ குறைப்பதாக அறிவித்துள்ளது.இந்த செய்தியானது கடந்த மாதம் 23 ஆம் திகதி செய்தி சேவைகளை எட்ட ஆரம்பித்திருந்த வேளையில், அதற்கு ஒரு வார காலம் பின்பு, Googleன் தாய் நிறுவனமான Alphabet Inc னால் ஆட்சேர்ப்புகளை குறைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது முழு-நேர மற்றும் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் கூட அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

தலைமை நிறைவேற்று அதிகாரியான சுந்தர் பிச்சை தற்போது நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பாதீட்டை பாதியாக குறைக்கும் ஒரு பொருளாதார ரீதியான முடிவை எடுத்திருக்கிறார். கூகிளின் வேறுபட்ட துறைகளில் பணியமர்த்தலானது முற்றிலும் உறைந்து விட்டதா அல்லது குறைந்திருக்கிறதா எனவும் விவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. நிறுவன செய்திதொடர்பாளர் தெளிவுபடுத்தியதாவது : “நாம் ஆட்சேர்ப்புக்கான வேகத்தை குறைப்பதோடு, மூலோபாய பகுதிகளின் எண்ணிக்கையில் சீரான உந்தத்தை பேணவும், சேர்க்கப்பட்டு இன்னும் செயலமர்த்தப்படாத ஊழியர்களுக்கு வேலைகளை அளிக்கவும் உள்ளோம்” என்பதாகும். தொழில்நுட்ப ராட்சதனின் இந்த நகர்வுகள் எல்லாமே Covid-19 கொண்டு வந்த பொருளாதார சரிவிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவேயாம்.

இந்த பாதீட்டுக் குறைப்புகள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுத்தம் என்பவற்றோடு நிறுவனமானது சந்தைப்படுத்தலில் சமரசமும் செய்துகொள்ளப்போகிறதா ? பிச்சை வெளிப்படுத்தியபடி, நிறுவனமானது மீள் கட்டமைப்பில் உள்ளது. அதாவது நிறுவனமானது, தனது பணப்பையில் இறுக்கமான பிடியைக் கொண்டிருப்பதோடு அவசியமற்ற முறையிலான விளம்பரம்,  போக்குவரத்து மற்றும் முதலீடுகள் என்பவற்றை தவிர்ப்பதிலும் தெளிவாக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. Google ஆனது தற்போது பெரும்பாலும் டிஜிட்டல் சந்தைப்படுத்தலையே விரும்புகிறது; காரணம் உள்ளக பார்வையாளர்கள். இதனைப் பற்றி அவர்களது உப பெண் செய்தியாளர் ஒருவர், “நாம் தொடர்ச்சியாக வலுவான சந்தைப்படுத்தல் பாதீடுகளை மேற்கொள்கின்றோம், முக்கியமாக டிஜிட்டல் மற்றும் ஏனைய பல வியாபார பிரிவுகளிலும்” என குறிப்பிடுகின்றார்.

புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள் பலவும் தமது பாதீடு மற்றும் ஊழியர்களை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் சில ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்த ஆரம்பித்துவிட்டன. ஆகவே,“500 அதிர்ஷ்ட கம்பனிகளில்” ஒன்றான கூகிள் போன்ற நிறுவனத்தில் வேலை செய்வதிலும் கூட நமது தொழில்பாதுகாப்பு இருளடைகிறதா ? இதுவரை நாம் அறிந்தது, Google பணியாளர்களை கைவிடவில்லை ஆனாலும் ஆட்சேர்ப்புகளை குறைத்துள்ளது என்பதுவே.

வல்லுநர்களின் ஊகப்படி, நெருங்கி வரும் உலக மந்த நிலையில் இந்த நிலை இன்னும் மோசமாகவே மாறப்போகிறது. அவ்வாறான நிலையானது நெருங்கும்போது அரசாங்கமானது தன்னை தக்க வைத்துக்கொள்வதற்காக, வெளிநாட்டு தொழில்நுட்ப இராட்சதர்களான Google மற்றும் Facebook ஆகியவற்றிடம் இருந்து வருவாய் பங்குகளை கோரும். ஆகவே, கட்டுப்படுத்த கடினாமான எக்கச்சக்க சேதாரங்கள் ஏற்படப்போகின்றன.

இது போன்ற கூகிள் பற்றிய தகவல்களுக்கு இங்கே செல்லவும்.

image source:https://swimcreative.com/wp-content/uploads/2016/09/20160825_100619-1.jpg

Post Views: 357
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
வேம்பின் நன்மைகள்

கொரோனாவை துரத்தவல்ல வேம்பின் 8 மருத்துவ மகிமைகள்!

  • May 13, 2020
View Post
Next Article
கனவுகளும் பலன்களும்

கனவுகளும் பலன்களும் பகுதி 7

  • May 14, 2020
View Post
You May Also Like
கூகுள் 23வது பிறந்தநாளை டூடுல் மூலமாக கொண்டாடுகிறது
View Post

கூகுள் 23வது பிறந்தநாளை டூடுல் மூலமாக கொண்டாடுகிறது

Google
View Post

Google நிறுவனம் Pixel 5 discontinue செய்கிறது..!

கூகிள் மேப்ஸ் மூலம் காணக்கூடிய 10 புதிரான இடங்கள்
View Post

கூகிள் மேப்ஸ் மூலம் காணக்கூடிய 10 புதிரான இடங்கள்

Google Photos இனிமேல் புகைப்படத்துக்கு இலவச சேவையை வழங்காது
View Post

Google Photos இனிமேல் புகைப்படத்துக்கு இலவச சேவையை வழங்காது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.