கண்ணாடி அணிய வேண்டும் என மருத்துவர் எழுதிக் கொடுத்த உடனேயே அதைப் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் சொல்லித் தயார்படுத்துங்கள்.
கண்ணாடி அணிவதால் ஏற்படப் போகிற பொசிட்டிவான விஷயங்களைச்
சொல்லி, அதைப் பத்திரமாகக் கையாளவேண்டியதன் அவசியத்தையும் சொல்லிக்
கொடுங்கள்.
நீங்கள் கண்ணாடி அணிகிற பழக்கம் உள்ளவர் என்றால், உங்கள் பிள்ளைகளின்
முன்னால் கண்ணாடி அணிவதைத் தவிர்க்காதீர்கள். கண்ணாடியுடன் உங்களைப் பார்க்கும் போது பிள்ளைக்கும் அதை அணிகிற ஆர்வம் வரும்.
எப்போதும் கண்ணாடி அணியச் சொல்லப்பட்டிருந்தால், தினமும் காலையில் எழுந்ததும் அதை அணிவதைப் பழக்குங்கள். பிள்ளைக்கு அந்தப் பழக்கம் முழுமையாக வரும்போது தான்,கண்ணாடி அணிவதை ஒரு சுமையாகப்
பார்க்கிற மனநிலை மாறும்.
கண்ணாடி அணிவதென்பது அடுத்தவரின் கிண்டல், கேலிக்குள்ளான விஷயமல்ல
என்பதையும் அப்படி யாரேனும் கிண்டல் செய்தால் அதைப் பொருட்படுத்தக்கூடாது என்கிற மனப்பக்குவத்தையும் ஏற்படுத்தவேண்டும்.
தன்னுடைய கண்ணாடியை தானே சுத்தப்படுத்தவும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும் பழக்குங்கள்.
தடிமனான லென்ஸ் உள்ள கண்ணாடியை உங்கள் பிள்ளைக்கு மருத்துவர்
பரிந்துரைக்கிறபோது, கண்ணாடியின் ஃபிரேம் சிறியதாக இருக்கும் படிப் பார்த்துக்கொள்ளவும்.
பிளாஸ்டிக் ஃப்ரேம் பொருத்திய கண்ணாடிகளே பிள்ளைகள் கையாள ஏற்றவை.
உடையாது. வளையாது. எடை குறைவாக இருக்கும். இப்போது எடை குறைவான
உலோக ஃப்ரேம்கள் கூட வருகின்றன.
உங்கள் பிள்ளைக்கு அலர்ஜி ஏதும் இல்லையா என்பதைத் தெரிந்து கொண்டு
அவற்றை வாங்கித் தரலாம்.சிறு பிள்ளைகளின் மூக்கு முற்றிலும் வளர்ச்சியடைந்திருக்காது என்பதால் கண்ணாடி அணிகிற போது பிடிமானமின்றிஅது வழுக்கி விழக்கூடும். அதைத் தவிர்க்க அட்ஜஸ்ட்டபுள் நோஸ் பேடு வைத்த ஃப்ரேமைத் தேர்ந்தெடுக்கவும்.
பிள்ளைகளுக்கு கண்ணாடிகளை முறையாக அட்ஜஸ்ட் செய்துகொள்ளத்
தெரியாது. எனவே, லென்ஸ் பகுதியானது சரியான இடத்தில் உட்காரும்படி இருக்க
வேண்டும். இல்லாவிட்டால் கீழே இறங்கிய கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்யாமல்.
மேலே உள்ள பகுதி வழியே பார்க்கப் பழகுவார்கள்.