வைரங்களை விட விலை உயர்ந்த ரத்தினக் கற்கள்!!
வைரங்கள் குறித்து அமெரிக்காவின் பிரபல நடிகையாக இருந்த மர்லின் மன்றோ அவர்கள் கூறுகையில் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான நண்பன் வைரம் என்று கூறுகிறார். வைரமானது ஒருவரின் செல்வம் மற்றும் அந்தஸ்தை எடுத்து சொல்லும் ஒரு குறியீடாக இருக்கிறது. நகை ஆபரணங்களில் வைரமானது விலை உயர்ந்த ஒன்றாகக் பலராலும் கருதப்படுகிறது.
ஆனால் வைரங்களை விட விலை உயர்ந்த அரிய வகை ரத்தினக் கற்களை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். வைரங்களை விட ஓபல் மிக விலை உயர்ந்தது ஓபல் என்பது ஒரு தாது வகை ரத்தினக் கற்கள் ஆகும்.
Black Opal
ப்ளக் ஓபல் ஆனது இரத்தினக் கற்களில் அரிதான ஒன்றாகும் இவ் வகை இரத்தினக் கற்களானது உயர்தர வடிவமைப்பைக் கொண்டது ப்ளக் ஓபல் விலையானது சுமார் ஒரு கரட் பத்தாயிரம் டாலர்கள் ஆகும் ப்ளக் ஓபல் ரத்தினக் கற்கள் நியூ சவுத் வேல்ஸ் எனும் இடத்தில் ஆஸ்திரேலியாவில் காணப்படுகிறது.
இந்த இடத்தை உலகின் ப்ளக் ஓபலின் தலைநகரம் என்று கூறுகிறார்கள். ப்ளக் ஓபல் கருமை நிறத்தில் காணப் படுவதற்கு ரத்தினக் கற்களில் இருக்கும் கார்பன் மற்றும் அயன் ஒட்சைட் காரணிகளாக இருக்கின்றன. பொதுவாக இரத்தினக் கற்கள் ஜொலிக்கும் தன்மையுடன் ஏழு வானவில்லின் கலர்களை பிரதிபலிக்கும் திறன் கொண்டவையாக இருக்க கூடும் இதில் ப்ளக் ஓபலும் விதிவிலக்கல்ல ப்ளக் ஓபலின் அழகானது அதன் கருமை வாய்ந்த அமைப்பும் பளபளப்பான தோற்றமும் ஆகும் 1938 இல் ஆழ்கடலில் 180 கரட் கொண்ட நீல நிற ரத்தினக் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன அதன் மதிப்பானது 2005 ஆம் ஆண்டு வரை ஆறு லட்சத்து எண்பதாயிரம் டாலர்கள் ஆக இருந்துள்ளது.
அதன் பிறகு ஆஸ்திரேலிய நாட்டில் சுரங்கம் தோண்டுபவரான பாபி என்பவரினால் முதன் முதலில் ப்ளக் ஓபல் கண்டு எடுக்கப்பட்டு பதின்நான்கு வருடங்கள் பட்டை தீட்டி பாதுகாத்து வந்து உள்ளார். அதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நகை ஆபரணங்கள் செய்பவரான கத்தரின் ஜட்டா என்பவரிடம் 306 கரட் ப்ளக் ஓபல் விற்கப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை ரூபாய்க்கு விற்கப்பட்டது என்பது இன்றுவரை புதிராகவே உள்ளது.
இன்றைய நிலவரப்படி இந்த ப்ளக் ஓபலின் மதிப்பானது சுமார் மூன்று மில்லியன் டாலர்கள் ஆகும். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் Lightning Ridge சவுத் வேல்ஸ் என்ற இடத்தில் இன்று வரையிலும் இந்த மாதிரியான ப்ளக் ஓபலை பலரும் தேடி வருகிறார்கள்..
Jadeite Opal
ஜேடைட் ரத்தினக்கல் ஒரு கரட் சுமார் 3 மில்லியன் டாலர்கள் மதிப்பு உடையதாகும். ரத்தினக்கல் வகைகளில் ஜேடைட் ஓபலானது மிகவும் அரிதான ரத்தினக்கல் ஆகும். ஜேடைட் ஓபலானது உலகம் முழுவதும் காணப்படுகிறது. குறிப்பாக ரஷ்யா,கனடா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் இவை காணப்படுகிறதாம்.
அதிகப்படியாக இந்த ரத்தினக்கல் ஆனது மியான்மரில் மற்றும் பர்மாவில் காணப்படுகிறது. ஜேடைட் ஓபலானது விலை உயர்ந்த ரத்தினக்கல் ஆகும் இவ் வகை ஓபலானது சிவப்பு / மஞ்சள்/ ஆரஞ்சு மற்றும் பழுப்பு போன்ற பல நிறங்களில் காணப்படுகிறது. இதில் பச்சை நிற ஓபலானது பொதுவாக கிடைக்கக் கூடியதாகவும் விலை உயர்ந்ததாகவும் காணப்படுகின்றன. கரும்பச்சை நிறத்தில் இருக்கும் ஓபலை இம்பிரியல் என்று கூறுகிறார்கள் இந்த ஓபல்கள் சீனாவுக்கு நேரடியாக அனுப்பப்பட்டு 27 முத்துகள் கொண்ட விலை உயர்ந்த பொருளான ரூபி மற்றும் டயமன்ட் பிளாட்டினம் மற்றும் 18 கரட் தங்கம் சேர்த்து நெக்லஸ் ஆக உருவாக்கி உள்ளனர். இந்த நெக்லசை அமெரிக்க அரச குடும்பத்தைச் சேர்ந்த பார்பரா சொந்தமாக்கிக் கொண்டு உள்ளார்.
எழுபதுகளில் இவர் இறந்த பின்னர் இந்த நெக்லஸ் ஆனது 2014 ஆம் ஆண்டு ஏலத்தில் வந்தது சுமார் 27.4 மில்லியன் டாலருக்கு கிரேட்டன் உரிமையாளர் ஏலத்துக்கு எடுக்கப்பட்டு உலகசாதனை பட்டியலிலும் இடம் பிடித்து உள்ளது.
Alexandrite
இந்த இரத்தின கல் ஆனது விலை உயர்ந்த இரத்தினகல் ஆகும். இந்த இரத்தின கல் ஆனது வெளிச்சத்துக்கு ஏற்றாற் போல் நிறங்களை மாற்றும் தன்மை கொண்டதாகும். இந்த வகை இரத்தினங்கள் ரஷியன்ஸ் மௌண்டின் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 1830களில் ரஷ்யாவில் இருந்த இரண்டாவது அலெக்ஸ்சாண்டர் பிறந்த நாள் அன்று கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு Alexandrite என்று பெயரிட்டுள்ளனர். சாதாரண வெளிச்சத்தில் இந்த இரத்தின கல் ஆனது பச்சை நிறத்தில் ஒளிர கூடியது. நெருப்பின் வெளிச்சத்தில் கருஞ்சிவப்பு நிறத்திலும் ஒளிர கூடியதாகும். ரஷ்ய நாட்டின் ராணுவத்தினரால் இந்த இரத்தின கல் ஆனது நல்ல குணத்தை பிரதிபலிப்பதாக நம்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரஷ்ய நாட்டில் இது பிரபலமான ரத்தின கல்லாகவும் உருவெடுத்தது. ஆனால் இருபதாம் நூற்றாண்டுக்குப் பிறகு தாது வகைகளில் குறைபாட்டால் இந்த வகை ரத்தினங்கள் ரஷ்யாவில் குறைவாகவே காணப்படுகின்றன. பிறநாடுகள் ஆன ஆப்பிரிக்கா/ ஆசியா/ மற்றும் தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் இவ்வகை இரத்தினகல் போல பல இரத்தினங்களை கண்டெடுத்துள்ளனர். ஆனால் அதில் எதுவும் அலெக்சாண்டரைட் போல ஒளிரும் தன்மை கொண்டதாக காணப்படவில்லை.
அலெக்சாண்டரைட் சுமார் ஒரு கரட் க்கு 12 ஆயிரம் டாலர் மதிப்பாகும் பச்சோந்தி போல் நிறம் மாறும் தன்மை கொண்டதாகும். தற்போது அனைவராலும் விரும்பப்பட்டு வருவதாலும் பல போலியான அலெக்சாண்டரைட் சின்தடிக் முறையில் செய்யப்பட்டு குறைவான விலைக்கே விற்கப்படுகின்றன.
Red Beryl
இந்த இரத்தினகல் ஆனது சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் காணப்படும் பச்சை நிற பேரில் ஆனது எமரல்ட் எனும் பெயரில் அழைகப்படுகிறது. இந்த அறிய வகை ரத்தினக்கல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு விற்பனை செய்துள்ளனர் உலகிலேயே விலையுயர்ந்த இடத்தில் ரத்தின நிபுணர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆயிரத்து தொள்ளாயிரத்துக்கு பிறகு உலகிலேயே 10 சதவீதம் மட்டுமே இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாகவே ரெட் பேரில் உலகின் மிக அதிக விலையுயர்ந்த ரத்தினம் ஆகக் கருதப்படுகிறது. பேரில் ஒரு கேரட் சுமார் பத்தாயிரம் டாலர்கள் ஆகும். மெக்சிகோ நாட்டில் தரமற்ற ரெட் பேரில் கற்களும் கண்டெடுக்கப்பட்டன. மேலும் ரத்தினக்கல் இளஞ்சிவப்பு நிறங்களில் போன்றே கண்டெடுக்கப்பட்டன இதனால் உண்மையான ரெட் பேரில் ரத்தினங்களை கண்டறிவதில் ஒரு சவாலாக இருந்துள்ளது.
Taaffeite
உலகிலேயே விலை உயர்ந்த அரிய தாது வகை இரத்தினமாகும் இது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் இந்த வகை ரத்தினக் கல் வெளிர் நிறத்தில் மட்டுமல்லாமல் நீலம்/ பச்சை/ மற்றும் சிவப்பு நிறங்களிலும் வைர நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கற்கலானது ஒளிக்கதிர்களை ஒளிரச் செய்யும் அமைப்பைக் கொண்டதாகும். சிறிய கண்ணாடி அமைப்பைக் கொண்ட இந்த கல் ஆனது ஒரு கேரட் அரை மில்லியன் டாலர்கள் மதிப்புள்ளதாகும். முதன் முதலில் இந்த கல் ரிச்சட் என்பவரால் 1948 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிக்கலாமே : விடுமுறைக்கு தனித்துவமான இடங்கள்
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்