இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!
இன்று ஆண், பெண் வேறுபாடின்றி பல விடயங்களை சரிசமமாக பகிர்ந்து கொள்கின்றனர். ஓர் காலத்தில் ஆண்கள் மட்டுமே விளையாடுவார்கள் ஆண்களால் மட்டுமே இவை செய்யலாம் என்பதையெல்லாம் முறியடித்து இன்று gaming உலகுக்குள் பெண்களும் நுழைந்திருக்கின்றார்கள்.
Gaming என்பது வேறு உலகம் Animation உலகம் எனலாம் நாம் தொடர்ந்து அதை விளையாடிக் கொண்டிருந்தோம் என்றால் அதனில் அடிமையாகி விடுவதை நம்மால் உணரமுடியும்.
நாம் விழித்தெழும் போது கூட gaming Screen கண்முன் வருவதாக கேமிங் விளையாடுபவர்கள் பலர் கூறுகின்றார்கள். சுய அனுபவங்களும் எனக்கு இதிலுண்டு.
சரி இன்றைய காலகட்டத்தில் Trend ஆன அதிகம் பேர் விரும்பி விளையாடுகின்ற video games இன் பட்டியல் இதோ !pubG Mobile & pc Game , Call of Duty , Need For Speed Hitman Series ,Ironman series , Starwars, Shadow Fight , Red Dead Redemption 1 & 2 God of war என்று பட்டியல் நீளும்.
ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட விருப்பத்திற்கேற்றவாறு Games மாறும் ஆனால் இப்போது இவையில் பல Online Games ஆகிவிட்ட காரணத்தினால் விளையாடும் நபர்கள் சேய்மையில் இருந்தாலும் Online இன் மூலம் அண்மையிலிருந்து விளையாடுவதை உணரலாம். Online games இல் பல நகைச்சுவைகளும் இடம்பெறுவதுண்டு நபர்கள் வீட்டிலிருந்து கொண்டு கத்தி கத்தி கூச்சலிட்டு விளையாடுவார்கள். அதில் பல நகைச்சுவைகள் இடம்பெறும் ஆக மொத்தத்தில் இன்று உலகத்தில் Gaming பரவலாக பேசப்படும் ஓர் விடயமாக மாறிவிட்டது. Gaming இன்றி அமையாது உலகு! இப்படிக்கு உங்கள் அன்பின் இணைய நண்பி -திவ்யா விஸ்வலிங்கம்-
image source:https://www.techradar.com/news/are-microsofts-disappointing-gaming-earnings-tied-to-fortnite-slump