இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்
விடுமுறைக் காலமாக இருக்கட்டும் சரி கல்வி காலமாக இருக்கட்டும் சரி மாணவர்களுக்கு ஏற்படுகின்ற மிகப்பெரிய பிரச்சனை அவர்களுடைய கவனச்சிதறல். மாணவர்கள் படிக்க ஆரம்பிக்கும் பொழுது எவ்வாறு இருக்கின்றார்களோ அவ்வாறு இருந்தால் கவனச்சிதறல் ஆனது ஏற்படாது என்பது அவர்களுக்கு புரிவதில்லை.
ஆம். கவனச்சிதறல் ஏற்படும் முக்கியமான ஒரு காரணம் நாம் நேரம் செல்ல செல்ல நம்முடைய எண்ணங்களை வேறு வேறு விடயங்களில் ஈடுபடுத்துவது தான். ஒரு மாணவனை கேட்டுப்பாருங்கள் அவனுக்கு பாடசாலையில் முதலாவது பாடம் நன்கு ஞாபகத்தில் இருக்கும் முழுமையாக கவனித்திருப்பான் விறுவிறுப்புடன் எல்லா பயிற்சிகளையும் செய்வான். நேரம் செல்லச்செல்ல கிடைக்கின்ற சிறிய சிறிய இடைவெளிகளில் தன்னுடைய மனதை வேறு விடயங்களில் தொலைத்துவிட்டு பாடம் ஆரம்பித்தாலும் கூட தொலைத்த இடத்திலேயே அவனுடைய எண்ணங்களை விட்டு வைத்து பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பது இன்றைய மாணவர்களுக்கு வழக்கமாகிவிட்டது.
இந்தப் பழக்கங்களில் இருந்து வெளிவருவதற்கு மிகச் சிறந்த ஒரு வழி தான் மனதை கட்டுப்படுத்துவது. மனக்கட்டுப்பாடு என்பது நாம் அனைவரும் நினைப்பது போல மிக எளிமையான விடயமும் அல்ல மிக மிக கடினமான விடயம் அல்ல. ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் போகப்போக நமக்கு இலகுவாக பழக்கப்பட்டு கொள்ளக்கூடிய ஒரு விடயம் தான் இந்த மனக்கட்டுப்பாடு.
உதாரணமாக ஒரு உடற்பயிற்சி செய்யும் இடத்துக்கு சென்று ஆரம்பத்தில் உடற்பயிற்சி செய்யத் தொடங்கிய உடனே உடம்பு முழுவதும் வலி எடுக்கும் எந்த வேலையும் செய்ய முடியாது இருக்கும். ஆனால் அந்த வலிக்கு உங்களை நீங்களே பழக்கப்படுத்திக் கொண்டு செல்ல செல்ல அது உங்களுக்கு அழகான உடற்கட்டை சிறந்த உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். அதேபோல தன் மனக் கட்டுப்பாடும் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கும் ஆனால் தொடர்ந்து முயற்சி செய்தால் அது படிவடையும். ஆகவே மனக் கட்டுப்பாடு தொடர்பான ஒரு கட்டுரையும் இந்த பக்கத்திலேயே பிரசுரமாக உள்ளது அதனையும் வாசித்து மனக் கட்டுப்பாட்டை பழகிக்கொள்ளுங்கள்.
image source:https://atlas.cern/resources/education/secondary-students