Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

விஞ்ஞானிகளையும் ஆச்சரியப்பட வைத்த ஐந்து இந்திய கோவில்கள்!!

  • June 13, 2020
  • 395 views
Total
1
Shares
1
0
0

இந்திய கோவில்கள்!!

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்களால் கட்டப்பட்ட பல்வேறு கோவில்களில் ஏதேனும் ஒரு அதிசயத்தை நாம் காணத்தான் செய்கிறோம். அந்த வகையில் விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்த ஐந்து இந்திய கோவில்களை பற்றி இங்கு பார்ப்போம் வாருங்கள்!!

கோனர்க் சூரியனார் கோவில்

விஞ்ஞானிகளையும் ஆச்சரியப்பட வைத்த ஐந்து  இந்திய கோவில்கள்!!
image source: https://www.ancient-origins.net/ancient-places-asia/chariot-gods-legend-konark-sun-temple-revealed-009099

முதலாவதாக : ஓடிசா மாநிலம் கோனர்க் இல் உள்ள கோனர்க் சூரியனார் கோவிலின் அதிசியத்தை பற்றி இங்கு பார்ப்போம்!!

இந்தக் கோவிலின் மூலவராக இருப்பவர் சூரிய பகவான் அவரின் சிலை சில நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை எப்போதும் காற்றில் மிதந்தவாறே இருந்துள்ளது. அந்த சிலை எப்படி காற்றில் மிதக்கிறது என்ற ரகசியம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது இந்த நிலையில் அந்த கோவில் கோபுரத்தின் ஒரு பகுதி போர்துகேசியர்களால் இடிக்கப்பட்டது. அச்சமயத்தில் அந்த கோவில் கோபுரத்தில் மிகப்பெரிய காந்தங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதோடு அந்த கோவில் சுவற்றில் உள்ள கற்களுக்கு இடையில் இரும்புகளும் சூரிய பகவான் சிலையில் இரும்பு துகள்களும் சேர்க்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

காந்தம் மற்றும் இரும்பின் சரியான கலவையால் சூரிய பகவானின் சிலையில் இருந்து இரும்புத் துகள்கள் காந்தத்தால் ஈர்க்கப்பட்டு அந்த சிலை மிதப்பது கண்டறியப்பட்டது . ஆயினும் கோபுர இடிபாட்டுக்கு பின்னர் கோபுரத்தின் இருந்த காந்தங்கள் இடிந்து விழுந்ததால் அங்கிருக்கும் சூரிய பகவானின் சிலை தற்போது மிதப்பது இல்லை இது குறித்த கல்வெட்டு ஆதாரங்கள் பெரிதாக இல்லையென்றாலும் அந்த ஊர் மக்களும் அந்த கோவிலை சுற்றி காண்பிப்பவர்களும் இந்த வரலாறு தெளிவாக கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநில சஹஸ்ரலிங்கா

இரண்டாவதாக : கர்நாடக மாநிலத்தில் தென்பட்ட விசித்திரமான லிங்கங்களை பற்றி பார்ப்போம்!!

இந்த பகுதியில் சல்மாலா என்ற ஒரு ஆறு உள்ளது வற்றாமல் ஓடும் இந்த ஆற்றின் நீரை நம்பி அங்கு பல்லாயிரம் மக்கள் வாழ்கின்றனர். இதை வெறும் சாதாரண ஆறு என்று நினைத்த மக்களுக்கு கடந்த 1969ஆம் ஆண்டு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது வறட்சி காரணமாக கடந்த 1969ஆம் ஆண்டு இந்த ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. அப்போது அதன் மையப்பகுதியில் இருந்து பல அதிசயங்கள் வெளிவர ஆரம்பித்தது முதலில் ஆங்காங்கு சில பாரங்கற்கள் தெரிய ஆரம்பித்தது அந்த பாரங்கற்களை உற்று நோக்கும் போது பல்லாயிரகணக்கான லிங்கங்கள் தெரிய ஆரம்பித்தது.

அதோடு ஒவ்வொரு லிங்கதிற்கும் அருகே நந்தியின் சிலையும் வடிக்கப்பட்டிருந்தது. எப்போதும் வற்றாமல் ஓடும் இந்த ஆற்றில் ஆயிரக்கணக்கான லிங்கங்களை வடிவமைப்பது என்பது அறிவியலுக்கு எட்டாத ஒரு விடயம் அப்படி இருக்கையில் அங்கு எப்படி இவ்வளவு லிங்கங்கள் வடிவமைக்கப்பட்டது அதை யார் வடியமைப்பு செய்தார்கள் என்ற கேள்விக்கான பதிலை ஆய்வாளர்களால் இன்று வரை அறிய முடியவில்லை.

விஞ்ஞானிகளையும் ஆச்சரியப்பட வைத்த ஐந்து  இந்திய கோவில்கள்!!
image source:https://www.booksfact.com/archeology/sahasralinga-thousand-siva-lingas-sirsi.html

மூன்றாவதாக : கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹாசனாம்பா கோவில் அதைப் பற்றி பார்ப்போம்!!

விஞ்ஞானிகளையும் ஆச்சரியப்பட வைத்த ஐந்து  இந்திய கோவில்கள்!!
image source:https://www.deccanherald.com/state/hasanamba-fest-will-be-held-699870.html

12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில் வருடா வருடம் 10 நாட்கள் மட்டுமே மக்கள் வழிபடுவதற்கு அனுமதி உண்டு. அதன் பிறகு கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் அடுத்த ஆண்டுதான் திறக்கப்படும். ஓராண்டு கழித்து ஆலயம் திறக்கப்படும் பொழுது போன வருடம் அம்மனுக்கு வைக்கப்பட்ட சந்தனம் குங்குமம் போன்றவை அப்படியே இருக்கும் அதோடு நிவேதனமாக வைக்கப்பட்ட அரிசியும் நந்தா விளக்கு என்ற நெய் விளக்கும் எரிந்து கொண்டே இருக்கும். இதற்கெல்லாம் மேலாக அந்த கோவிலில் ஒரு அதிசய கல் உள்ளது அந்த கல் வருடாவருடம் அம்மனை நோக்கி ஒரு அங்குலம் நகர்ந்து செல்வது குறிபிடத்தக்கது.

நான்காவதாக : எட்டாம் நூற்றாண்டில் இராஷ்டிரகூட மன்னர்களால் கட்டப்பட்ட எல்லோரா கைலாசநாதர் கோவிலை பற்றி பார்ப்போம்!!

விஞ்ஞானிகளையும் ஆச்சரியப்பட வைத்த ஐந்து  இந்திய கோவில்கள்!!
image source:https://www.nativeplanet.com/travel-guide/kailasa-temple-in-ellora-001888.html

பெரியதொரு மலையை குடைந்து இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நான்கு லட்சம் டன் எடையுள்ள பாறைகள் இதற்காக குடையப்பட்டுள்ளது. பொதுவாக அந்த காலத்தில் ஒரு கோவிலை கட்ட 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்த கோவிலை கட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகியுள்ளது கிட்டத்தட்ட மூன்று தலைமுறையைச் சேர்ந்த சிற்பிகள் இந்த கோவிலை உருவாக்கி உள்ளனர். அடுத்தடுத்து அந்தப் பகுதியை ஆண்ட அரசர்களும் இந்தப் கோவில் பணியைத் நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.

ஐந்தாவதாக: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள லேபாக்ஷி என்ற ஊரில் அமைந்துள்ள லேபாக்ஷி வீரபத்திரன் கோவிலை பற்றி பார்ப்போம்!!

விஞ்ஞானிகளையும் ஆச்சரியப்பட வைத்த ஐந்து  இந்திய கோவில்கள்!!
image source:http://creativestellars.blogspot.com/2017/02/veerabhadra-swamy-temple-lepakshi.html

விஜயநகரப் பேரரசால் கட்டப்பட்ட இந்த கோவிலில் கிட்டத்தட்ட 70 தூண்கள் உள்ளன. ஆனால் அதிசயம் என்னவென்றால் அதில் ஒரே ஒரு தூண் மட்டும் தரையில் படாதபடி இன்றுவரை தொங்கிக் கொண்டே இருக்கிறது அதன் அடியில் மெல்லிய துணியையோ அல்லது பேப்பரையோ ஒரு பக்கம் செலுத்தி மறு பக்கம் இழுக்கலாம் அந்த அளவிற்கு தூணுக்கு அடியில் மெல்லிய ஒரு இடைவெளி இருக்கிறது.

விஞ்ஞானிகளையும் ஆச்சரியப்பட வைத்த ஐந்து  இந்திய கோவில்கள்!!
image source:https://www.pinterest.com/pin/317996423669458491/

அடுத்ததாக அதே கோவிலில் ஒரு மிகப்பெரிய காலடிச் சுவடு இருக்கிறது. அது ஒரு சாதாரண மனிதனுடைய காலடிச் சுவடு இல்லை என்பதை பார்த்த உடனேயே உணரலாம் அந்த அளவிற்கு மிகப்பெரிய ஒரு காலடிச் சுவடு அது சீதா தேவியின் காலடிச் சுவடு என்று அந்தப் பகுதி மக்களால் நம்பப்படுகிறது. அந்த காலடிச் சுவடுக்குள் அடியில் இருந்து எப்போதும் நீர் கசிந்து அந்த காலடி சுவட்டை நனைத்த படியே இருப்பது குறிபிடத்தக்கது.

விஞ்ஞானிகளையும் ஆச்சரியப்பட வைத்த ஐந்து  இந்திய கோவில்கள்!!
image source:https://in.pinterest.com/pin/475692779364032569/

இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு இங்கே செல்லவும்.

Wall image source:http://www.pragyata.com/mag/sacralising-the-cosmos-nature-and-life-626

Post Views: 395
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
https://chellaupdates.com/social/feminism/

புதிதாக தாயானவர்களுக்காக 10 குழந்தை வளர்ப்பு அறிவுரைகள்

  • June 12, 2020
View Post
Next Article
கைரேகை காட்டும் அற்புதங்கள்.. உங்கள் கைரேகை என்ன சொல்கிறது?

கைரேகை காட்டும் அற்புதங்கள்.. உங்கள் கைரேகை என்ன சொல்கிறது?

  • June 13, 2020
View Post
You May Also Like
பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

தீ மிதி
View Post

தீ மிதிப்பது ஏன்? அதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

சபரி
View Post

சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்தவரா?

சடாரி
View Post

சடாரியை ஏன் தலையில் வைக்கிறார்கள்? சடாரி வைப்பதால் என்ன பலன்?

சபரிமலை
View Post

சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.