குளிர் உத்தராயணம் எனப்படும் அரிய நிகழ்வு இந்த செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி, மாலை 07.00 மணிக்கு (காலை 09.30 மணி UTC) க்கு வருகிறது.
பூமியின் மக்கள்தொகையில் 90 சதவிகிதம் வசிக்கும் வடக்கு அரைக்கோளத்திற்கு இலையுதிர் காலம், குளிரான வெப்பநிலை மற்றும் குறுகிய நாட்கள் வருவதை இந்த உத்தராயணம் தெரிவிக்கிறது.
உத்தராயணம் என்றால் என்ன ?
உத்தராயணம் இடம் பெறும் நாட்களில் சூரியன் உச்சம் பெறும் (அதாவது பூமி அதற்கு பொருத்தமான சரியான இடத்தில் நிற்கும் ). இதன் மூலம் அன்றைய தின இரவும் பகலும் சமமாக அமையும்.
தெற்கு அரைக்கோளத்தைப் பொறுத்தவரை, இது எதிர்மாறாக இருப்பதைக் குறிக்கிறது: வெப்பமான வானிலை மற்றும் வசந்தத்தின் விடியல் உருவாகிறது.
உத்தராயணம் இடம் பெறும்போது என்ன நடக்கிறது என்பதை விளக்குவதற்கு, ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சியின் கிரக விஞ்ஞானி டாக்டர் ஜேம்ஸ் ஓ டோனோகு ஒரு நகர்ப்படத்தை உருவாக்கி, இந்த நிகழ்வுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நேர்த்தியாக சுருக்கமாகக் கூறியுள்ளார்.
சங்கிராந்திகளும் உத்தராயணங்களும் பூமியின் அச்சு சாய்வின் காரணமாக உருவானவையாகும் : அதாவது சூரியனுடன் ஒப்பிடும்போது கிரகம் எந்த அளவிற்கு சாய்ந்திருக்கிறது என்பதைப் பொறுத்து இவை வேறுபடுகிறது.
பூமி சுழலும் அச்சு செங்குத்தாக மேலே இல்லை – இது சுமார் 23.5 பாகை சாய்வில் உள்ளது. இதன் காரணமாக, கிரகம் சூரியனைச் சுற்றும்போது பூமியின் வெவ்வேறு பகுதிகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சூரிய ஒளியைப் பெறுகின்றன. அதனால்தான் நமக்கு பருவங்கள் உருவாகின்றன.
வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளம் எதிர் நேரங்களில் பருவங்களை அனுபவிப்பது ஏன் என்பதற்கு விளக்கமும் இதுதான்: வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் இடம்பெறும்பொழுது, தெற்கு அரைக்கோளம் சூரியனை நோக்கி மேலதிக சாய்வைக் கொண்டிருக்கும். வெயில் காலத்தில் இது நேர்மாறாக அமைந்திருக்கும்.
இதற்கிடையில், பூமியும் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கிறது. இது அதன் வெப்பத்தை நிலையாக வைத்திருக்க உதவுகிறது. இது சரியாக சொன்னால் உங்கள் அவனில் கம்பியில் செருகப்பட்டு வேகுகின்ற சிக்கன் போலத்தான். சுழற்சி மூலம் வெப்பத்தை பெறுகின்றது.
அச்சு சாய்வின் மிகவும் வியத்தகு விளைவுகள் சங்கிராந்தியின்போது வெளிவருகிறது, ஏனெனில் கிரகத்தின் ஒரு பக்கம் சூரியனிடமிருந்து வெகு தொலைவில் சாய்ந்திருக்கும் இரண்டு நாட்கள் இவைதான், மற்றைய இரண்டு நாட்களும் மிக நெருக்கமானவை. டிசம்பர் 21 அன்று, வடக்கு அரைக்கோளம் ஒன்பது மணி நேரத்திற்கும் குறைவான பகலைப் பெறுகிறது, அதே நேரத்தில் தெற்கு அரைக்கோளம் 15 மணிநேரத்துக்கும் அதிகமானதைப் பெறுகிறது.
கோடைகால சங்கிராந்தி பற்றிக்கூறும் போது, ஓ’டோனோக், ட்விட்டரில் “சூரிய ஒளி மிகவும் தீவிரமானது, ஏனெனில் இது ஒரு குறுகிய வளிமண்டலத்தை மட்டுமே கடந்து செல்ல வேண்டும்.” அதனால்தான் பொதுவாக கோடைகாலத்தில் அதிக வெப்பமாக இருக்கிறது, என விளக்கினார்.
பூமியின் அச்சு சூரியனை நோக்கி அல்லது விலகிச் செல்லாத நேரம் ஆண்டின் இரண்டு முறைகள் மட்டுமே இருக்கும் – சூரிய ஒளி வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்களை சமமாகத் தாக்கும் நாட்களான உத்தராயணங்கள். அந்த நாட்களில், கிரகத்தின் இருபுறமும் சமமான 12 மணிநேர சூரிய ஒளி மற்றும் இருளை அனுபவிக்கிறது.
ஆகவே, நாளை, செவ்வாய்க்கிழமை மாலை 7.30் மணிக்கு நீங்கள் பூமத்திய ரேகையில் நேரடியாக நிற்க முடிந்தால், உங்கள் நிழல் அதன் குறைந்தபட்ச அளவைப் பெற்று இருக்கும். சூரியனும் கிட்டத்தட்ட நேரடியாக மேல்நோக்கி தோன்றும். ஆனால், இலங்கை மற்றும் இந்தியா பகுதியை சேர்ந்த வாசகர்களுக்கு இரவில் இது நடப்பதால் பார்ப்பது கடினம்.
பூமி சூரியனைச் சுற்றி 66,600 மைல் (மணிக்கு 107,182 கிமீ) நகரும் என்பதால் நிழல் இல்லாத தருணம் மிகவும் விரைவானது.
இந்த கட்டுரையின் ஆங்கில வடிவம் முதலில் பிசினஸ் இன்சைடரால் வெளியிடப்பட்டது.
இது போன்ற புதிய மற்றும் சுவாரசியமான தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது விண்வெளி பக்கத்தை அணுகுங்கள்
பக்கத்துக்கு செல்ல கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்