உடற்பயிற்சிகளின் அரசன் என்று அழைக்கப்படும் நடைப்பயிற்சிக்கு ஈடு இணை ஏதுமில்லை.
ஒரு நாளைக்கு குறைந்தது 20 நிமிடங்கள் அதிகபட்சமாக 45 நிமிடங்களுக்கு நடக்க வேண்டும் வாரத்துக்கு 5 நாட்களாவது நடக்க வேண்டும் அதற்கு தேவையான உணவுகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு உடல் வலிமையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
எப்போது நடந்தாலும் முதல் ஐந்து நிமிடங்களுக்கு மெதுவாக நடக்க வேண்டும் அடுத்து நடை வேகத்தை அதிகரிக்க வேண்டும் கடைசி ஐந்து நிமிடங்களுக்கு மீண்டும் மெதுவாக நடக்கவேண்டும்.
நடைப்பயிற்சியின் போது தனியாக நடப்பதைவிடத் துணையுடன் நடப்பது நல்லது துணையுடன் பேசிக்கொண்டே நடக்கும்போது பாதையில் கவனம் தவறி தடுமாறிக்விடக்கூடாது என்பதும் முக்கியம்.
ஆரம்பத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும் போகப்போக தூரத்தை அதிகரித்துக்கொள்ளலாம் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 3 கிலோ மீட்டர் தூரம் நடக்கலாம்.
அதுபோல் ஆரம்பத்தில் ஒரு நாளில் 20 நிமிடங்களுக்கு மெதுவாக நடக்கத் தொடங்கி தினமும் ஐந்து நிமிடங்களை அதிகரித்துக் கொள்ள வேண்டும் நாட்கள் ஆக ஆக வேகத்தையும் அதிகரித்துக்கொள்ளலாம்.
நடைப்பயிற்சியால் கர்ப்பிணிகளுக்கு உடல் சோர்வடையலாம் மூச்சு வாங்கலாம் அதற்காக நடைபயிற்சியை நிறுத்த வேண்டிய அவசியமில்லை நடக்கும் வேகத்தில் சிறிய மாற்றங்களைச் செய்துகொண்டால் போதும்.
நடக்கும் போது அதிகபட்ச இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 120 முறை இருக்க வேண்டும்.
அல்லது இப்படியும் தெரிந்து கொள்ளலாம் துணையுடன் நடக்கும் போது அவருக்குக் கேட்கிற அளவுக்கு பேச முடிகிறது என்றால் அதுவே நீங்கள் அதிகபட்சம் மேற்கொள்ளக்கூடிய நடைப்பயிற்சி வேகம் என வைத்துக்கொள்ளலாம்.
நடக்கும் முன்னரும் பின்னரும் தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டியது முக்கியம் அதிலும் குறிப்பாக நீரிழிவு உள்ள கர்ப்பிணிகள் திரவ உணவை சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது.
சிரிதளவு தளர்வான நடப்பதற்கு வசதியாக ஆடைகளையே அணிய வேண்டும் முக்கியமாக கச்சிதமாகப் பொருந்தும் மார்புக் கச்சையை அணிந்து கொள்ளவேண்டும்.
காலுக்குப் பொருத்தமான காலணிகளை அணிய வேண்டும் வழக்கமாக நடைப்பயிற்சி செய்யும்பாதையில் அல்லது பூங்காக்களில் மட்டுமே நடக்க வேண்டும் அடிக்கடி இதனை மாற்றக்கூடாது.
நாய்கள் அதிகம் நடமாடும் தெருக்களிலும் கல்லும் முள்ளும் நிறைந்த பாதையிலும் நடக்க வேண்டாம்.
ஒவ்வொரு தாயும் தனது இரண்டாவது குழந்தையைப் பெறுவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டியவை