@OnLeaks வெளியிட்ட ட்விட்டர் பதிவின்படி, 2022 ஆம் ஆண்டிற்கான சாம்சங் நிறுவனத்தின் S தொடர் U22 அல்ட்ரா மொபைல் போனின் சில விவரங்கள் ஏற்கனவே தொழில்நுட்ப உலகில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளதாக அறியப்படுகின்றன.
2021 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றான கேலக்ஸி நோட் 21 தொடரை(series) நிறுவனம் வெளியிடாத பின்னணியில், 2022 ஆம் ஆண்டிலும் Note தொலைபேசி வெளியிடப்படாது என்று பலர் ஊகிக்கின்றனர்.
Note தொலைபேசிகளின் சிறப்பு அம்சங்களில்(feature) ஒன்றான எஸ் பென் ஸ்லாட் (S Pen slot) மற்றும் Noteன் பாக்ஸி வடிவமைப்பு (Boxy design) ஆகியவை எஸ் 22 அல்ட்ராவில் இடம்பெறுவதே இதற்குக் காரணமாக கருதப்படுகின்றது.
இதனை நம்மால் கீழே உள்ள புகைபடத்தின் மூலம் நம்மால் கானமுடிகின்றது.
S21 அல்ட்ரா போன் S Pen ஐ ஆதரித்தது, ஆனால் S Pen க்கு ஒரு ஸ்லாட்டை(slot) சேர்க்கவில்லை.
S22 மேலும் 6.8 அங்குல இரட்டை வளைவு நீர்வீழ்ச்சி திரை(Dual curved waterfall) மற்றும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, மேலும் பேட்டரி திறன் உண்மையாக இருந்தால், S22 பெரும்பாலும் S Pen ஸ்லாட் கொண்டிருக்கும்.
அப்படியானால், Note seriesன் கடைசி உறுப்பினர் Note 20 என்ற கேள்வி எழுகிறது, அடுத்த ஆண்டு Note line-up வெளியிடப்படுமா இல்லையா என்பது குறித்து இணையத்தில் போதுமான தகவல்கள் இல்லை.
இருப்பினும், சாம்சங் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடாததால், மற்றும் S22 தொடர் பற்றிய தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாததால், அடுத்த ஆண்டு இரண்டு முன்னணி தொலைபேசி வரிசைகளை(phone line-up) நிறுவனம் எவ்வாறு கையாளும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.