பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பனிபடர்ந்த மிகவும் குளிரான பிரதேசங்களில் மம்மூத் எனப்படும் அடர்த்தியான ரோமங்களுடனும், பிரமாண்டமான வளைந்த தந்தங்களுடனும் உயரமான யானைகள் வாழ்ந்தன.
காலப்போக்கில் அழிந்துபோன இந்தயானையின் புதிய படிவங்கள் கிடைத்துவருகின்றன. குறிப்பாக, ரஷ்யாவில் மம்மூத்தின் முழு உடலுமே கிடைத்தது.
இதனால் குளோனிங் முறையில் மீண்டும் இந்த யானைகளை உருவாக்க, கடந்த சில ஆண்டுகளாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உயிரி அறிவியல் மற்றும் மரபியல் நிறுவனமான கொலோசல், தொழில் முனைவோர் பென் லாம் மற்றும் ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின் மரபியல் பேராசிரியரான ஜோர்ஜ் சர்ச் உள்ளிட்டோர் இணைந்து, இத்திட்டத்தை
செயல்படுத்த உள்ளனர்.
இதற்கு, சைபீரியாவில் கிடைத்துள்ள மம்மூத் யானையின் புதைபடிமங்களில் இருந்து மரபணுக்கள் சேகரிக்கப்பட்டு,தற்போது இந்த இனத்தை போன்ற தோற்றத்தைகொண்டுள்ள ஆசிய யானைகளின் மரபணுவுடன் இணைத்து கருவாக மாற்றப்படும். அது செயற்கை கருப்பையில் வைக்கப்பட்டு மம்மூத்
யானை உருவாக்கப்படும் என சர்ச் கூறியுள்ளார்.