இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்
தலைப்பை பார்த்தும் பயந்து விட்டீர்களா ? கை கால்களில் எல்லாம் எந்த அழுக்கும் இல்லாமல் சுத்தமாக கழுவுவது எல்லாமே நுண்ணங்கிகளின் இருந்து நாம் விடுபட வேண்டும் என்பதற்காகத்தானே. அப்படி இருக்கும்போது இது என்ன நுண்ணங்கி சாப்பிடுவது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் நாம் உண்ணுகின்ற பல்வேறு உணவுகள் இன்று உருவாவது நுண்ணங்கிகளால் தான்.
ஆம். நுண்ணங்கிகளில் எல்லாமே கெட்டவை அல்ல. சிலவகை பாக்டீரியாக்களும் பங்கசுகளும் நமது உணவை தயாரிக்க உதவி செய்கின்றன. அவ்வாறான சில உணவுவகைகள் இதோ.
யோகட் மற்றும் தயிர் : பாலானது நுண்ணங்கிகளால் பழுதடைய செய்யப்படும்போது அப்பாலானது திரையும். ஆனால் இந்த திரள்தல் செயற்பாட்டை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட நிபந்தனையின் கீழ் நன்கு காய்ச்சிய பாலில் குறிப்பிட்ட ஒரு வகை பாக்டீரியா ஆன ஸ்டீப் ரோக்கஸ் தேர்மோ பிளஸ் என்கின்ற பேக்டீரியா மூலமாக செய்யப்படும் பொழுது திரைதல் செயற்பாடானது பால் பழுதடையாது நடைபெறுகிறது.
அவ்வாறு திரண்டு வரும் பாலை ஒன்று தயிராகவோ அல்லது யோகர்ட் ஆகவும் மாற்றப்படுகிறது. நீங்களும் வீட்டிலேயே தயிர் தயாரிக்க வேண்டுமானால் இதற்கு முன்பு வாங்கிய தயிரிலிருந்து ஒரு சொட்டை எடுத்து பாலை நன்கு காய்ச்சிய பின்னர் அப்பா அந்த தயிர் துண்டை விட்டீர்களானால் சிறிது ஆறி தானாக இறுகும் பொழுது தயிர் தயாராக இருக்கும்.
இதே போல இன்னொரு முக்கியமான நுண்ணங்கி தான் மதுவம் எனப்படும் பங்கசு. இதனை ஈஸ்ட் என்றும் கூறுவார்கள். ஈஸ்டர் பயன்படுத்தித்தான் பாண் பணிஸ் போன்ற உணவுவகைகளை தயாரிப்பது முதல் நாம் வீட்டில் மாவை புளிக்க வைக்கின்ற செயற்பாடு வரை அனைத்து செயல்பாடுகளும் இந்த மதுவம் நொதித்தலின் மூலமாகவே இடம்பெறுகிறது.
ஆகவே நுண்ணங்கிகள் எல்லாமே கெட்டவை அல்ல. அவற்றின் பயனை அறிந்து அதற்கேற்றவாறு பயன்படுத்தவும்.
image source:https://www.cellenion.com/applications/single-microorganisms-isolation/bacteria/