கனவு, வாழ்வில் ஒவ்வொரு நபரும் அனுபவித்திருக்கக் கூடிய ஆனால், வார்த்தைகள் வடிவத்தில் வெளிவராத மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் கதை.
நான் நேத்திரக்கைதி. வாழ்வின் உணர்வுகளை எழுத்தாக வடிக்கும் எனது விருப்பத்தின் சிறு படிகளில் ஒன்று இந்தக் கதை. இந்தக் கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை , கதையை வாசித்து முடித்ததும் கருத்துக் பெட்டியில் அல்லது எமது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்வீர்கள் என ஆவலோடு காத்திருக்கிறேன். வாருங்கள் கதைக்குள் செல்வோம்.
கனவு
டேய், சாப்பிட வாடா !
கொஞ்சமிருங்கம்மா… இந்த லாஸ்ட் பந்திய type பண்ணிட்டா போதும். இண்டைக்கு வேலை முடிஞ்சுரும்.
அந்த ஹரிப் போட்டர பாத்த நேரத்துல செஞ்சுருக்கலாம் தானே … பாத்த படத்தையே திருப்பி பார்குறதுல என்ன interest ஓ உனக்கு ?
அம்மா ஹாரிப் போட்டர் – 1 இண்டைக்குத்தான் பாத்தன் முதல்தரம்.
மேல் மாடிக்கும், கீழ் வீட்டுக்கும் அவர்கள் கத்திய கத்து பக்கத்து வீட்டாருக்கும் கேட்காமல் இல்லை.
“இன்னும் சின்ன புள்ள மாதிரி எனா அண்டி ? “
100% பக்காவாய் பத்த வைக்கும் பக்கத்து வீடு..
பதிலுக்கு அம்மாவும்,” வீட்டு வேலை ஒண்டும் செய்றது இல்ல.. ஃபோன் இல்லாட்டி கொம்பியூட்டர். “
எனக்கு எப்ப எல்லாம் தோணுதோ அப்பெல்லாம் உன்னைத்தான் வச்சு செய்வன்…
Typical தமிழ் அம்மாமார்களின் இலத்திரனியல் சாதனங்களுக்கு எதிரான சபதம் அது.
நமக்கு நன்மை விளைகிறதோ இல்லையோ.. அடுத்தவனுடைய இன்பஸ்வரங்களில் இரைச்சல் கிளப்புவதென்றால் காசே வேண்டாம். வலிந்து செய்வோம்… தமிழ் சமூகத்துக்கே ஆன பக்கத்து வீட்டு குணமது… இருக்கட்டும்..
சரி .. கதையின் ஹீரோக்கிட்ட வருவோம்… 1678. அப்பாடா… இன்னும் கொஞ்ச வார்த்தைதான். கதையும் கிளைமாக்ஸ் க்கு வந்துட்டு..
“நீ வேற லெவல் டா ராசா… “
அவனுடைய பால்ய சிநேகிதன்.. அவன் வைத்த பெயர் உருப்படாத சென்மம்.. உலகம் வைத்த பெயர் மனது, உயிரியல் வைத்த பெயர் மூளை..
பூச்சி ………………………….
எது பூச்சியா ?? யார் கத்தியது ? சத்தம் கேட்கவில்லையே.. நான் எதும் கனவு காண்கிறேனா ? ஏன் சொற்கள் விளங்கியும் சத்தம் கேட்கவில்லை… ?

அட இந்த உருப்படாத சென்மம்.. இதுக்கு வேலையே இதுதான்.. இருந்துட்டு திடீர் திடீர்னு எதாச்சும் சொல்லும். இப்படியான கொஞ்சல் வார்த்தைகள் எங்கருந்துதான் வருதோ அதுக்கு… நான் எதுக்கு பூச்சிய பத்தி நினைக்க ?
அவனுடைய குழப்படிக்கார மூளை செய்த சேட்டையை ஆய்ந்து முடித்து, தனது கதையை சேமிப்பதற்காக, Ctrl பட்டனை பெருவிரலால் அழுத்தி கொண்டே S எழுத்தை நோக்கி தனது நடு விரலைக் கொண்டு சென்றான்.
பூச்சி….
இம்முறை உண்மையாகவே ஒரு பூச்சி காதருகில் பட்டு பறக்க, கையை சுழற்றி விரட்டினான்.. பூச்சி போய் விட்டது. மீண்டும் கீபோட்டுக்கு அருகில் கையைகொண்டு போக….
பிச்க்…..
திரையின் நான்கு மூலைகளிலும் கீற்றாக வெளிச்சம் தெரிந்தது… அந்த வெளிச்சம் மட்டுமே அவன் கண்களுக்கு இறுதியாக தெரிந்த ஒரே வெளிச்சம்… என்ன நடந்தது ?
கண்ணை மூடி விட்டேனா ? இல்லை திறக்க முயற்சிப்போம்.. கண் திறந்துதான் இருக்கிறது. கனவு காண்கிறேனா ?
கும்மிருட்டு…. பூரணமாக
சந்தேகமாக இருக்கிறது என்றால் கிள்ளிப் பார்.
கிள்ளுகிறேன். வலிக்கிறதுதான் போல, சரியாக சொல்லமுடியவில்லை. ஒரு வகையாக உணர்வில்லாதது போலும் உணர்கிறேன்.
ஏன் ? கும்மிருட்டு.. ஏதும் தெரியவில்லை. எல்லாத்திசைகளும் பூரணமாக இருட்டு. கரண்ட் போயிட்டுப் போல.. யாரோ தூரத்தில கதைக்கிற சத்தம் கேக்குற மாதிரிதான் தோணுது.. ஏன் எல்லாம் ஒரு மாதிரி மந்தமாகவே இருக்கு ?
அவன் மட்டுமில்ல நிச்சயம் நீங்கள் கூட திடீரென மின்சாரம் துண்டிக்கபட்டால், கண்கள் சிறிது பழக நேரமெடுக்கும் வரை முழுமையான இருளை உணர்வோம். ஆனால் ஏனோ காதுகள் கூட அடைத்தாற் போல உணர்வோம்.. ஒரு வேளை பேய் வந்து காதை மூடுமோ ??
ச்சீ..ச்சீ.. கரண்டு போற நேரத்துல வாற யோசனையா இது?…
செய்க். ஒரு செகண்ட்ல என்னமா பயமா இருந்துது..
இந்த நேரந்தான் கரண்ட் போகும். அது சரி நான் கதையை save பண்ணனா ?
அவனுடைய உருப்படாத சென்மம் தான் அவனுக்கு அதை ஞாபகப்படுத்தியது.
போச்சு.. எல்லாம் போச்சு…
உங்கள் காதலுக்காக கஷ்டப்பட்டு ஒரு ஓவியம் வரைந்து அதை கொடுக்க வேண்டிய அன்று அதன் மீது காபியை ஊற்றி விட்டால்,
சொல்லவே வேண்டாம்.. அந்த வலியை முழுதுமாக இப்போது அவன் அனுபவிக்கிறான்.
“அட, இது நமக்கு தெரிஞ்ச ஆள்தான். இயலாமை.. எதாச்சும் நம்ம கண்ட்ரோல்ல இல்லாம நடந்துட்டா என்ன செய்யனும் ?”
தனது results history ஐ தேடியது உருப்படாத சென்மம்.
பதில் : “கோவம்…. “
அனுப்பி வைத்த சிக்னல் அழகாக வேலை செய்ய அடிக்கடி கரண்ட் நின்று போகும் இந்த அரசாங்கத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு கழுவி ஊத்தினான்.
இப்போது, கும்மிருட்டை மட்டுமே உணர்ந்தான்.. மெழுகுவர்த்தி பக்கத்து ரூமில் இருக்கிறது. போய் எடுக்க வேண்டும்.
கர்ர்ர்ர்ர்ர்ர்…. (கதிரை இழுபடுகிறது)
வாசகர்களே மேலே இருப்பதை எழுத்து வடிவ சவுண்ட் எப்பெக்ட் என்று பெயர் வைக்கலாம் என நினைக்கிறேன்.. அது இருக்கட்டும்.. நீங்கள் கதைக்குள் போங்கள்..
கும்மிருட்டு… கதிரையை இழுக்கிறான்… கதிரை அசையும் சத்தம்….
ஆனால்… ஆனால் எனக்கு மட்டும் கேட்கவில்லை. இவ்வளவு பக்கத்தில் இருக்கும் கதிரையை இழுத்தேனே அது ஏன் கேட்கவில்லை. என்ன நடந்தது எனக்கு.. ஏன் காது அடைத்துக் கொண்டது ? புதிரில் உறைந்தது அவன் மட்டுமல்ல அவன் மூளை அதாவது உருப்படாத சென்மமும்தான்.
“சரி எழுந்து போய் மெழுகுவர்த்தியை எடுப்போம். இந்த இருட்டுக்குள் அந்த சின்ன சாமானை வேற தேட வேண்டும்.”
இந்தப் பகுதியில் இருந்து கொஞ்ச நேரத்துக்கு நான்தான் அவனுடைய நிலையை விபரிக்க வேண்டும். ஏனெனில் அவன் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. கும்மிருட்டு. எழும்ப முயற்சி செய்கிறான். முடியவில்லை. மனிதர்கள் நாம் எப்பொழுதுமே எழும்போது நிச்சயமாக கால்கள் அல்லது கைகள் இரண்டில் ஒன்றில் சக்தியைப் பிரயோகிப்போம்.
அதேதான் செய்ய முயற்சி செய்கிறான். ஆனால் அவன் கைகளும் கால்களும் கட்டுப்பட்டதைப் போல உணர்கிறான். இவ்வளவு நேரம் எனக்குப் பக்கத்தில் நிலைக்குத்தாக தானே இருந்தன கைகள்,
திடீரென வேறு திசைகளில் கைகள் வளைக்கப்பட்டு இருப்பதை உணர்ந்தான். அசைக்க முயற்சிக்கிறான். இரண்டு கைகளும் ஏதோ ஒன்றை இறுக வளைத்துப் பிடித்திருக்கின்றன. கைகளால் பயனில்லை.
கால்களை உணர முயற்சிக்கிறான். கும்மிருட்டு. அவன் தலை எந்தப் பக்கமாக பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற உணர்வு கூட இல்லை. கால்களை அசைக்க முடியவில்லை. தொடை தசையை இறுக்கி காலுக்கு இயக்கம் கொடுக்க முயற்சிக்கிறான். வெறும் முயற்சி. தொடை இருக்கும் பக்கத்தை உணர்கிறான். ஆனால் எதனாலோ உணர்வுகளைக் கடத்த முடியவில்லை. பலனில்லை.
கடைசி முயற்சி முதுகை கதிரையை விட்டு விலத்தி எழுவோம் என முயற்சிக்கிறான். ஆனால், என்ன நடந்தது ? ஏன் முதுகின் மீது எந்த விசையையும் பிரயோகிக்க முடியவில்லை ? ஆ இல்லை உணர்வு கிடைக்கிறது… ஏன் முதுகு பாரமேறிப் போய் இருக்கிறது.
அசைக்க முடியவில்லை; முன்னோக்கி முடியவில்லை. ஆனால் மேல்நோக்கி முடிகிறது. காலின் திசை உணர முடிந்தது போலவே முதுகின் திசையை உணர முடிகிறது. ஆனால் அசைக்க முடியவில்லை. முதுகு கிடையாக சாய்ந்து வலது பக்கமாக சரிந்துள்ளது. இதை உணர்ந்ததும் அவன் அறியாத சென்மம் திடுமென வேலை செய்து வார்த்தைகளை உதிர்த்தது.
இல்லை. வாய்ப்பில்லை.. உட்காந்திருந்த நான் எப்போது படுத்தேன்? மீண்டும் முயற்சி செய்வோம் என்னுடைய முதுகு.. ஆம் அது பக்கவாட்டில் மட்டும் வளைந்து கிடையாக சரிந்துள்ளது. தலை தூக்க முடியவில்லை. அதே கோலம். சரிந்துள்ளது தலை. இடம் தெரிகிறது. ஆனால் இயக்க முடியவில்லை. ஏதோ நிறை அமத்துகிறது.
கும்மிருட்டு. முற்றிலும் மந்த நிலை, உடலை அசைக்க முடியவில்லை. ஒரு வேளை நான் ஏதும் பொம்மைக்குள் சிறைப்பட்டு விட்டேனா ? என்ன நடக்கிறது ?
இல்லை. இல்லை. சுற்றிப் பார்ப்போம். இல்லை எதுவுமில்லை.. முற்றிலும் இருட்டு.
எங்கிருந்தோ திடீரென உருப்படாத சென்மத்துக்கு அந்த நிலை உறைத்தது. “கனவு காண்கிறாய்”.. இதற்கு முன் இப்படி நடந்துள்ளது நீ கனவு காண்கிறாய்.
திடீரென உடலில் உள்ள இறுக்கம் தளர்கிறது.என்ன நடக்கிறது என்று சுற்றிலும் பார்க்கின்றான். கைகளை உணர முடிகிறது
கால்கள், முதுகு ஒவ்வொன்றாய் நிறையற்றுப் போக எல்லாவற்றையும் உணர்கிறான்.
சுத்தி என்ன நடக்கிறது ? மீண்டும் ஏன் நான் எழுந்ததாய் உணர்கிறேன் ? முழித்துக் கொண்டேனா ?
கிள்ளிப் பார்ப்போம். அது ஒன்றுதான் தீர்வு..
வலிக்கவில்லை..
அப்போது இன்னும் நான் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்..
முழிக்க வேண்டும்.
அவன் அதனை உணர்ந்து கைகளை அசைக்க முயற்சிக்கிறான்.
முடியவில்லை. மீண்டும், கால் கைகள் எதனாலோ கட்டப்பட்டதை உணர்கிறான். இல்லையில்லை இது கனவு.. பார்த்து விடுவோம்.. இன்று இந்த கனவா ? நானா ? இரண்டில் ஒன்று. தெரிந்தே ஆக வேண்டும்… முழிக்க வேண்டும் நான் இப்பொழுதே..
நினைக்க நினைக்க அவனுக்கு மூச்சும் அடைக்கத் தொடங்குகிறது.
அவன் முயல்கிறான்.. அவன் மனதுக்கு தெரிகிறது அது கனவென.. ஆனால் விட்டுவிட முடியவில்லை..
போராடுகிறான்..காட்சிகள் எல்லாம் மறைகிறது.. கண் முன்னே இருள் தோன்றுகிறது..
முழிக்க வேண்டும்..
அவன் தனது கை கால்களை உணர முயல்கிறான்.. கை இருக்கிறது.. ஆனால் ஆசைக்க முடியவில்லை… கண்ணை உருட்ட முடிகிறது.. ஆனால் திறக்க முடியவில்லை… தொண்டை அடைக்கிறது.. மூச்சு எடுபட மாட்டேன் என்கிறது… போராடுகிறான்..
இது கனவு….. நம்பு.. நம்பு..
முதுகு கட்டிலில் இருக்கிறது தெரிகிறது.
நான் நிச்சயம் படுத்திருக்கிறேன். முழிக்க வேண்டும்.. முழி.. முழி…
என்ன செய்யும் பாவி உருப்படாத சென்மம்.. அதற்கு கனவென்று தெரியும்.. ஆனால் உடலை விழிக்க செய்யும் சக்தி அதற்கில்லை..
ஆஆ……… மூச்சு முட்டுகிறது..
முடியவில்லை.. நான் முழிக்க வேண்டும்..
நான்.. நான் முழிக்க..
கைகளை அசைக்க .. கால்களை காணவில்லை..
தொடை பாகத்தை உணர முடியவில்லை..
எனக்கு என்ன ஆனது ?
மூ.. மூ.. மூ..மூச்சு நிற்கிறது …. வேண்டாம்.. வேண்டாம்.. நான் முழிக்க……..
ம்ஹா… ஹா…. ஹா… ஹா…..ஹா.. ஹா.. ஹா..
திடுமென நினைவு திரும்ப அவன் உடல் முழுதும் ஒரேடியாய் தூக்கிவாரிப் போடுகிறது.. மூச்சு வாங்குகிறது.
உயிர்… அப்பாடா..
முழித்து விட்டான்…
அவன் கையில் திடீரென ஏதோ பொருள் தட்டுப்படுகிறது. டார்ச் லைட்டு. உடலை சிறிதும் அசைக்க அவன் விரும்பவில்லை. படுத்திருந்த படியே கையை இயக்குகிறான். டார்ச்சை தொட்டு பார்த்து தலைப்பை உணர்ந்தான்.. பிறகு மற்றப்பக்கம் திருப்பி உருட்டத் தொடங்கினான்.. ஸ்விட்ச் தட்டுப்படும் வரை….
தட்டுப்பட்டது.. முன்னால் தள்ளினான்.. முடியவில்லை.. மற்றப் பக்கம் தள்ள வேண்டும் போலும். பெரு விரலை ஸ்விட்ச்சுக்கு முன்னால் கொண்டு போய் பின் பக்கமாக தள்ளினான்..
சொதக் !!!!!!! (ஏதோ வழ வழ கொழ கொழ என இருக்கும் பொருள் அப்புகிறது)
திடீரென எல்லா விளக்குகளும் எரிந்து வெளிச்சம் கொடுக்கிறது…
ஹே……………….ப்பி பர்த்டே மச்சா……………..ன்…….
முடிஞ்சு
இது போன்ற வேறு கதைகளை வாசிக்க கதைகள் பகுதிக்கு செல்லுங்கள்
எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்
முகப்பு உதவி : Wallpaperflare