காகங்கள் ஐந்து அறிவுகளில் இது தான் அதிக அறிவாளித்தனமான ஜீவன்..
இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இது நிறைய சுற்றி திரியும் காக்கை தானே என்று சாதாரணமாக என்று எண்ணி விட வேண்டாம் இதனுள் பல விடயங்கள் புதைந்து கிடக்கின்றன. ஐந்து அறிவுகளில் இது தான் அதிக அறிவாளித்தனமான ஜீவனும் கூட அதெப்படி சொல்கின்றீர்கள் என்று நினைக்கின்றீர்களா? வாருங்கள் உள்ளே சென்று பார்போம்.
சில காகங்கள் அவற்றின் இரையை எடுப்பதற்கு கருவிகளை பயன்படுத்துமாம். அதாவது மனிதர்களை போலவே யோசித்து கருவிகளை பயன்படுத்துமாம். இந்த வீடியோவை நீங்களே பாருங்கள் ஒரு கூண்டுக்குள் பெரிய குச்சியையும் அதனை எடுக்க ஒரு சிறிய குச்சியை வெளியையும் வைத்து உள்ளார்கள் அந்த பெரிய குச்சியை வைத்து மட்டுமே எடுக்க கூடிய உணவை இன்னொரு கூண்டிலும் வைத்துள்ளனர். இது எப்படி தனது புத்தியை பயன்படுத்தி எடுக்கிறது என பார்த்தீர்களா? அப்படியானால் இது அறிவாளியான ஜீவன் தானே.
ஜப்பானில் வாழும் காகங்கள் கொட்டைகளை உடைக்க ஒரு விசித்திரமான முறையை பயன்படுத்துகின்றன. அதாவது சாலைகளில் அந்த கொட்டைகளை போட்டு விடுமாம் கார்கள் அந்த கொட்டையை ஏற்றும் வரை காத்திருக்குமாம். பின்பு அந்த உடைந்த கொட்டைக்குள் இருக்கும் பருப்பை எடுத்து சாப்பிடுமாம். கொட்டையை எளிதில் மேலிருந்து போட்டுவிடுமாம் ஆனால் எடுக்கும் போது கீழே கார்கள் வரும் அல்லவா எப்படி எடுக்கின்றது என்று நீங்களே பாருங்கள். பாதை மாறும் இடத்தில் நின்று கொள்ளுமாம் நடை பயணிகளின் மின்விளக்குகள் விழும் வரை காத்திருக்குமாம் விழுந்த உடனே சென்று எடுத்து சாப்பிட்டு விடுமாம். என்ன ஒரு புத்திசாலித்தனம்.
காகங்கள் உண்மையிலே அறிவாளிகள் அவை ஒரு காகம் இறந்து விட்டால் அந்த இடத்திற்கு சென்று இறந்ததற்கான காரணத்தை கண்டறியுமாம். அதாவது விசாரணை செய்யுமாம். அதற்கு காரணமான மனிதர்களை நினைவு வைத்து கொள்ளுமாம் இதுவரை நாம் நமது முன்னோர்கள் சொல்லி பாம்புகளுக்கு தான் பலி வாங்கும் குணம் அதிகம் உண்டு அவை உங்களது முகத்தை படம் எடுத்து வைத்து இருக்கும் என்று கேள்விபட்டிருப்போம் ஆனால் உண்மையில் பாம்பு அல்ல காகம் ஆம் காகத்திற்கு ஒவ்வொரு மனிதனின் முகத்தையும் நினைவு வைத்து கொள்ளும் திறமை உண்டு இந்த திறமையை பழிவாங்கவும் பயன்படுத்துமாம் பாசத்திலும் காகங்களையும் அடித்து கொள்ள முடியாதாம்.
ஒரு பெண் காகத்திற்கு தினமும் தண்ணீரும் உணவும் வைத்து வந்து உள்ளார் இதற்கு கை மாறாக அந்த காகம் கிடைக்கும் அனைத்தையும் எடுத்து வந்து அந்த பெண்ணிற்கு கொடுக்குமாம் அவற்றுள் மோதிரம், கயிறு, இரும்பு போன்றவையும் அடங்குமாம்.
சீனா ஜப்பான் மற்றும் கொரியா நாட்டவர்களின் பழங்கால காவியங்களின் மூன்று கால் காகங்கள் இருந்து வந்ததாக குறிப்புக்கள் உள்ளன ஆனால் இவை எந்த அளவிற்கு உண்மை என்று இன்று வரை புலப்படவில்லை.
உயிரினங்களில் காகம் தான் கடைசி வரை தனது துணையை அதாவது வாழ்க்கை துணையை பிரியாமல் வாழுமாம் இந்த விடயத்தை இந்த கால மனிதர்கள் காகத்திடமிருந்து நிச்சயம் கற்று கொள்ள வேண்டும்.
காகங்களால் அவற்றுக்குள் கருத்தை பரிமாற கொள்ள முடியும் உதாரணமாக ஒரு இடத்தில் அபாயமிகுந்த மனிதன் ஒருவன் வருகிறான் என்றால் காகங்கள் அவற்றுக்குள் எச்சரிக்கை விடுத்தது கொள்ளுமாம். ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து என்ற இடத்தில் உள்ள காகங்கள் விஷத் தன்மையான தவளைகளை எப்படி உண்கிறது என்பது இன்னமும் புரியாத புதிராக உள்ளது அந்த தவளைகளை உண்ணுவதால் காகத்திற்கு எதுவும் ஆவதில்லையாம்.
காகம் மட்டும் தான் அண்டாடிக்கா கண்டத்தை தவிர உலகில் அணைத்து கண்டங்களிலும் வாழ்கிறது. மனிதர்களை காகங்கள் சில சமயங்களில் தாக்குமாம் ஆனால் அந்த தாக்குதல் மிக கொடூரமான தாக்குதல் இல்லாமல் அது பார்த்து கொள்ளுமாம். வளர்ந்த காகங்கள் தனது அம்மா காகத்தை அதன் பிரசவ காலத்திலும் குட்டி காகத்தை வளர்க்கும் காலத்திலும் நன்றாக கவனித்து கொள்ளுமாம் எப்படி மனிதர்கள் தனது அம்மா தங்கையை பார்த்து கொள்கிறார்கள் அதே போல தான் இதுவும் காகங்கள் மனிதனின் நடவடிக்கைகளை பின்பற்றுமாம். அமெரிகாவில் காகங்களை வேட்டை ஆட அணுமதி உண்டாம்.
சில இடங்களில் வாழும் காகங்கள் அந்த பகுதியில் வாழும் விலங்குகளுடன் கூட கருத்துக்களை பரிமாறிக் கொள்ளுமாம். காகங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்குமாம்.
சில இடங்களில் வாழும் காகங்கள் அந்த பகுதியில் வாழும் விலங்குகளுடன் கூட கருத்துக்களை பரிமாறிக் கொள்ளுமாம். காகங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்குமாம்.
சிவாஜி நடித்த அன்புக்கரங்கள் திரைப்படத்தில் ஒரு பாடல் உள்ளது
ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தை பாருங்க அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்
image source:https://www.webindas.com/motivation/the-thirsty-crow/