Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

கொரோனா வெண்டிலேட்டர் சிகிச்சையின் கடும்வேதனை பற்றி தெரியுமா ?

  • October 30, 2020
  • 351 views
Total
1
Shares
1
0
0

கொரோனா நோய் நமெக்கல்லாம் இப்போது பழகி விட்டது என்ற எண்ணம் தவறு, ஏனெனில் அக்கிருமியும் இப்போது மனித உடலுக்கும் சூழலுக்கும் ஏற்ப மாறி வருகிறதாம். ஆகவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் கருவியில் இருக்கும் கொடுமை எவ்வாறானது என்பதை விளக்கும் ஒரு கட்டுரை இது, இப்பகிர்வை முதன்முதலில் செய்தவர் யாராயினும் அவர்களுக்கு நன்றிகள்.

கொரோனா காலத்தில் எந்தவிதமான பயணத்தையும் செய்யக் கூடாது ஏன் என்பதற்கும் கொரோனா வார்டில் பணி செய்யும் ஒரு செவிலியர் சொல்லும் காரணங்களைக் கேளுங்கள்.

கொரோனா வெண்டிலேட்டர் சிகிச்சையின் கடும்வேதனை பற்றி தெரியுமா ?
பட உதவி

இது , வெண்டிலேட்டரில் வைத்திருப்பது என்றால் என்ன என்று தெரியாதவர்கள் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் துணிச்சலாகப் புழங்குபவர்கள், மற்றும் பொதுப் பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கான எச்சரிக்கை .

வெண்டிலேட்டர் என்பது வாய்க்கு மேலாக ஒரு மாஸ்க்கை வைத்து ஆக்ஸிஜன் கொடுத்து நோயாளியை சௌகரியமாகப் படுக்க வைத்து ,கையில் ஒரு தினப் பத்திரிகை கொடுத்து வசதியாக வைத்திருப்பது என்ற முட்டாள்தனமான கற்பனையை விட்டு விடுங்கள் .

கொரோனா வெண்டிலேட்டர் சிகிச்சையின் வலிகள்

Covid -19 நோய்க்கான வெண்டிலேட்டர் என்பது ஒரு வலி மிகுந்த சிகிச்சை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் .

ஒரு நீளமான குழாயைத் தொண்டை வழியாகச் செலுத்தி அதன் மூலம் நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் செலுத்துவார்கள் .

இது நீங்கள் உயிரோடு இருக்கும் வரை அல்லது இறக்கும் வரை நடைபெறும் .

இந்த நடைமுறையில் உங்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கும் .

இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தொடர்ந்து எந்த அசைவும் இல்லாமல் குப்புறப்படுத்தபடி நீங்கள் இருக்க வேண்டும் .

உங்கள் வாயின் வழியாக உங்கள் நுரையீரல் வரை ஒரு குழாய் பொருத்தப்பட்டு இருக்கும் .

கொரோனா வெண்டிலேட்டர் சிகிச்சையின் கடும்வேதனை பற்றி தெரியுமா ?
பட உதவி

அதன்மூலம் வெளியே இருக்கிற ஒரு இயந்திரம் அனுப்புகிற ஆக்சிசனை நீங்கள் சுவாசிக்க வேண்டும் .

இந்த சமயத்தில் நீங்கள் பேசவோ உண்ணவோ அல்லது இயற்கையாக நடைபெறும் சில விஷயங்களை செய்யவும் முடியாது .

ஒரு இயந்திரத்தின் உதவியுடன் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள் .

அதுவரை வலி தெரியாமல் இருப்பதற்காக மயக்க மருந்து , தூக்கமருந்து , வலி மருந்து உங்களுக்கு கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் .

கிட்டத்தட்ட நீங்கள் கோமாவில் இருப்பவர் போலதான் .தொடர்ந்து 20 நாட்கள் இந்த சிகிச்சை முறை நிறைவடையும் போது , ஒரு இளம் வயது நோயாளி தன்னுடைய தசையில் 40 சதவீதத்தை இழந்திருப்பார் .

வாயிலும் தொண்டையிலும் குரல் நாண்களிலும் காயம் ஏற்பட்டிருக்கும் .நுரையீரலிலும் , இதயத்திலும் தொற்றுகள் ஏற்பட்டு இருக்கும் .இந்த காரணத்தினால் தான் வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே பலவீனமானவர்கள் இந்த சிகிச்சை முறையை தாங்க முடியாமல் இறந்து போக நேரிடுகிறது .

கொரோனா வெண்டிலேட்டர் சிகிச்சையின் கடும்வேதனை பற்றி தெரியுமா ?
பட உதவி

நம்மில் பல பேர் இதுபோலத்தான் இருக்கிறோம் . ஆகவே பாதுகாப்பாக இருங்கள் .

வீட்டிலேயே தங்கி இருங்கள் .இறப்பிற்கு ஒரு வாய்ப்பு கொடுக்காதீர்கள் . இது சாதாரண காய்ச்சல் போல அல்ல .

மூக்கின் வழியாகவோ அல்லது தோலைத் துளைத்தோ நீராகாரம் செலுத்துவதற்கு உங்கள் இரைப்பை வரை ஒரு குழாய் நுழையும் . பின்புறத்தில் வெளிவரும் மலத்தைச் சேகரிக்க ஒரு பை கட்டப்பட்டிருக்கும் . உங்கள் சிறுநீரை சேகரிக்க இன்னொரு பை கட்டப்பட்டிருக்கும் .

உங்கள் கையில் ஊசி மருந்தும் மற்ற திரவங்களும் செலுத்துவதற்கு ஒரு ஊசி மாட்டப்பட்டிருக்கும் .உங்கள் உடல் நிலையில் அதிகமாக இருக்கும் காய்ச்சலை குறைப்பதற்காக குளிரூட்டப்பட்ட நீர் நிரம்பிய ஒரு படுக்கையில் நீங்கள் படுக்க வைக்கப்பட்டு இருப்பீர்கள் .

இத்தனை விஷயங்களையும் தாண்டி ஒரு மனிதன் நோயிலிருந்து  விடுபட்டு வந்தாலும் அவனால் மீண்டும் சாதாரணமாக இயங்க முடியுமா என்பது ஒரு பெரிய கேள்விக் குறி .

எனவே நண்பர்களே பாதுகாப்பாக இருங்கள் .பாதுகாப்பான இடத்தில் உங்கள் குடும்பத்தாரை இருக்க வையுங்கள் .உங்கள் குடும்பத்தில் வயதான உறுப்பினர்களை இன்னும் சற்று கவனத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள் .

இது போன்ற கோவிட் -19 , உடல் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சுகாதாரம் பகுதிக்கு செல்லுங்கள்

சுகாதாரம் பகுதிக்கு செல்ல

எமது பேஸ்புக் பக்கத்தில் எம்மைப் பின்தொடர்வதன் மூலம் புதிய செய்திகளை உடனடியாகப் பெறுங்கள்.

Facebook 4K Likes

முகப்பு பட உதவி : GettyImages

Post Views: 351
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
ரகசியங்கள்

சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!

  • October 30, 2020
View Post
Next Article
ரோபோட்

நவீன உலகில் ரோபோட்களின் முக்கியத்துவம்!!

  • October 30, 2020
View Post
You May Also Like
வருகிறது கொடிய வைரஸ் எச்சரிக்கை..!
View Post

வருகிறது கொடிய வைரஸ் எச்சரிக்கை..!

கொரோனா
View Post

கொரோனாவுக்கு ஆண்களை ரொம்ப பிடிக்குமாம்..!

ஒமிக் ரோன்
View Post

புதிய வகை வைரஸ் ஒமிக்ரோன் பீதியில் உலக நாடுகள்..!

கொரோனா
View Post

எங்க ஸ்டைலில் கொரோனாவை விரட்டுவோம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்..!

அமெரிக்கா
View Post

கமல்ஹாசனுக்கு கோவிட்டா? அப்போ பிக்பாஸ் என்ன நடக்க போகிறது?

கொரோனா
View Post

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் செய்ய வேண்டியவை..!

தடுப்பூசி
View Post

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் நவம்பரிலிருந்து அமெரிக்கா வர அனுமதி..!

மூன்றாவது டோஸை நிறுத்தி வையுங்கள் உலக சுகாதார அமைப்பு மீண்டும் கோரிக்கை..!
View Post

மூன்றாவது டோஸை நிறுத்தி வையுங்கள் உலக சுகாதார அமைப்பு மீண்டும் கோரிக்கை..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.