சதுரம் எனும் இலாப நோக்கற்ற ஒழுங்கமைப்பானது, அண்மையில் வெளியிட்டிருந்த “சற்குணம் மாமா” விளக்கப்படங்கள் பதிவானது, இலங்கை இளைய சமுதாயத்தின் இணைய என்டெர்டெய்ன்மெண்ட் ஆக மாறியுள்ளது.
யாரிந்த சற்குணம் மாமா ?
சற்குணம் என்பது ஒரு நிஜ கதாபாத்திரம் அல்ல. ஆயினும், இலங்கையின் குறிப்பிட்ட தமிழ் சமூக மக்களை எடுத்துக் காட்டும் முகமாக உருவாக்கப்பட்ட கற்பனை கதாபாத்திரம். பதிவிட்டுள்ள அமைப்பு, மாமா நன்கு படித்தவர். சமூகத்தில் மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர். அனைவருக்கும் உதவி செய்யும் குணங்கள் கொண்டவர். மாமா அடிக்கடி நிறைய புதிய மனிதர்களை சந்திப்பார். அவர் அனைவரையும் அன்போடு நெருங்கி நலம் விசாரிப்பார். என்று அவரைப் பற்றி ஆரம்பிக்கிறது.
ஏன் இவ்வளவு புகழ் ?
சற்குணம் கதையானது வழக்கமாக சமூகத்தில் அடிபடும் கதைகளைக் கொண்டு மறைமுகமாக சொல்லும் வகையில் ஓரளவு அங்கதமாக எழுதப்பட்டுள்ளது. கடைசி வரியில், சாதி மனிதனை சாக்கடையாக்கும் என பெரியாரின் கருத்தோடு முடிவடையும் இந்தக் கதையின் கருப்பொருள் என்ன என நீங்கள் இந்நேரம் ஊகித்திருக்கலாம். எல்லாரையும் ஈர்த்தெடுத்த இக்கதையின் முதல் மூன்று படங்களும், முழு கதைக்கான இணைப்பும் இதோ :
சதுரம்
சதுரம் ஒழுங்கமைப்பானது கடந்த ஆண்டு (2020) தமது பேஸ்புக் கணக்கினை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. “உரிமைகள் மறுக்கப்படும் சமூகத்தினதும் தனிநபர்களினதும் குரல்” என்ற விபரத்தோடு பயணிக்கும் இவ்வமைப்பு பதிவிட்டுள்ள 4 வது பதிவே இப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது. சற்குணம் மாமா கதைக்கு இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பலத்த ஆதரவு கிடைத்துள்ளது அங்கு நிகழும் சமூக மாற்றத்துக்கான முக்கிய காரணியாக தெரிகிறது.
படங்கள் : சதுரம்
இது போன்ற சிந்திக்க வைக்கும் கட்டுரைகளை எமது சமூகவியல் மற்றும் கதைகள் பகுதிகளில் காணலாம்.
எம்மை எமது பேஸ்புக் பக்கத்தில் பின்தொடரவும்