இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
கோவிலில் இதெல்லாம் செய்யலாம் ஆனால் இதை மட்டும் செய்து விடாதீர்கள்
நம்மில் பலர் அடிக்கடி கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவதுண்டு. பக்தி பெருக்கால் நாம் என்ன செய்கிறோம்? என்று அறியாது பல விஷயங்களை செய்கிறோம். நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் சரிதானா? ஆகம விதிகளின் படிதான் நாம் அவற்றை செய்கின்றோமா? என்பது போன்ற பல கேள்விகளுக்கான விடைகளை இப்பதிவில் காண்போம்..!!
கோவிலில் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத செயல்கள்
கோவிலுக்கு சென்றால் இறைவனை வணங்கிவிட்டு, சிறிது நேரம் அமரலாமே தவிர கோவிலில் தூங்கக்கூடாது.
கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்யக்கூடாது.
வீட்டில் கோலம் போடாமலும், விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்கக்கூடாது.
எவருடனும் வீண் வார்த்தைகளை கோவிலில் வைத்து பேசக்கூடாது.
அபிஷேகம் நடக்கும் பொழுது பிரகாரத்தை சுற்றி வரக்கூடாது.
கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக்கூடாது.
சுவாமிக்கு நிவேதனம் செய்யும்போது பார்த்தல் கூடாது.
விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக்கூடாது. அதாவது கருவறை இருட்டாக இருக்கும் சமயத்தில் இறைவனை வணங்குதல் கூடாது.
கற்பூர ஆரத்தி காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு முறையும், தொப்பிளிற்கு இரண்டு முறையும், முகத்துக்கு ஒரு முறையும், கடைசியாக முழு உருவத்துக்கும் மூன்று முறை காண்பிக்க வேண்டும்.
கோவிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக்கூடாது.
புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும்.
கோவில் குளத்தில் கல்லை போடக்கூடாது.
வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தரக்கூடாது.
தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்குள் செல்லக்கூடாது.
தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கம் மற்றும் நந்திக்கு நடுவிலும் செல்லக்கூடாது.
கொடிமரம், நந்தி, பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்கக்கூடாது.
சிவன் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும், பெருமாள் கோவில்களில் அமரக்கூடாது.
கோவிலுக்கு போய்விட்டு வந்தால் நேராக நம் வீட்டிற்கு செல்ல வேண்டும், வேறு எங்கும் போகக்கூடாது. வீட்டிற்கு சென்றதும் கால்களை கழுவக்கூடாது, வீட்டிற்குள் அப்படியே செல்ல வேண்டும். அப்போது தான் கடவுளிடம் நாம் கோவிலில் பெற்ற வரம் நேராக நமது இல்லத்தில் நிலைத்து இருக்கும்.
காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின்போது, சொல்லக் கூடாது. இம்மந்திரத்தை சுத்தமான இடத்தில்தான் ஜெபிக்க வேண்டும்.
மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்றக்கூடாது.
எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடக்கூடாது. அவ்வாறு தொட்டால் அதை தலையில் தடவி கொள்ளக்கூடாது.
அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் திருநீற்றை தண்ணீரில் குழைத்து பூசக்கூடாது.
நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.