முதல் படி: பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும்,கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களைநிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும்.இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம். இதுவே முதல்படி.
இரண்டாம் படி: பரமாத்மாவே என் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம்.
மூன்றாம் படி: கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம்.
நான்காம் படி: பாவ – புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல், எதன் மீதும் பற்றில்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும்.
ஐந்தாம் படி: நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான,தர்மங்கள் செய்வது ஐந்தாம் படி.
ஆறாம் படி: கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம்.இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர, அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.
ஏழாம் படி: இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம் தான்.எல்லாமே இறைவன் தான் என உணர்வது பிரம்ம ஞானம்.
எட்டாம் படி: எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.
ஒன்பதாம் படி: கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. சமூக தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது தான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.
பத்தாம் படி: அழகு, அறிவு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது பத்தாம் படி.
பதினொன்றாம் படி: பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
பனிரெண்டாம் படி: இன்பம் – துன்பம், விருப்பு – வெறுப்பு, ஏழை – பணக்காரன் போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது பனிரெண்டாம் படி.
பதிமூன்றாம் படி: எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து இறைவனே அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல் பதிமூன்றாம் படி.
பதினான்காம் படி: யோகம், பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.
பதினைந்தாம் படி: தீய குணங்களை ஒழித்து நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.
பதினாறாம் படி: இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது பதினாறாம் படி.
பதினேழாம் படி: சர்வம் பிரம்மம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது பதினேழாம் படி.
பதினெட்டாம் படி: யாரிடமும் எந்த உயிர்களிடத்தும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று அவனையே சரணடைவது பதினெட்டாம் படி. ஓம் சாமியே சரணம் ஐயப்பா -படித்தேன் பகிர்ந்தேன்-
image source:https://www.maadurgawallpaper.com/lord-ayyappa-photos