இன்று நாம் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடி வருகிறோம். புத்தாடை அணிந்து, இனிப்புகளை பகிர்ந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.
தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்?
தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும். தீபாவளியில் எண்ணெய் தேய்த்து குளித்து லட்சுமியினை வீட்டிற்கு அழைத்தால் செல்வ வளம் மென்மேலும் வளரும்.
தீபாவளி நாளில் புத்தாடை அணிவது ஏன்?
மனதில் இருக்கும் பேராசை, பொறாமை, கோபம் போன்ற அழுக்குகளை அகற்றி இந்த நாள் முதல், மனிதன் புதிய எண்ணங்களை நம் உள்ளத்தில் அணிந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் விதமாக தீபாவளி நாளில் நாம் புத்தாடை அணிந்து கொள்கிறோம்.
தீபாவளி நாளில் பட்டாசு வெடித்து கொண்டாடுவது ஏன்?
நம்மிடம் உள்ள காமம், குரோதம், கோபம், மோகம், மாச்சரியங்கள் போன்ற தீய குணங்கள், இறைவனுடைய நாமங்களால் தூள் தூளாக வேண்டும். இதை குறிப்பதற்காகவே தீபாவளியன்று பட்டாசு வெடிக்கின்றோம்.
தீபாவளி நாளில் இனிப்பு பகிர்வது ஏன்?
தீபாவளி நாளில் இனிப்புகளை இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, அனைவருக்கும் வழங்குகிறோம். இதற்கு காரணம் எல்லோரும் இன்புற்று ஆனந்தமாக இருக்க வேண்டும் என்கிற பரந்த மனப்பான்மையின் வெளிப்பாடுதான் இது.
இன்பத்தை நாம் உணர்ந்து, பிறருக்கும் அந்த இன்பத்தை வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தவே தீபாவளி நாளில் இனிப்புகளை பகிர்ந்து மகிழ்கின்றோம்.
தீபாவளியன்று ஏன் விளக்கேற்ற வேண்டும்?
வீட்டிற்கு வரும் லட்சுமியை வரவேற்கவே விளக்கேற்றி வைக்க வேண்டும். செல்வத்திற்கு கடவுள் லட்சுமி. விஷ்ணுவிற்கு மாலை அணிவித்து அவர் மார்பில் இடம் பிடித்தவள். இந்த நிகழ்ச்சிகள் நடந்த நாள் தான் தீபாவளி
நண்பர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான Cheல்லாவின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..