உலகில் வேகமாக பரவும் ஓமிக்ரோன் வைரஸ் பாதிப்பு மிதமானதாக
இருந்தாலும், அடுத்து வரப்போகும் வைரஸ் மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என, விஞ்ஞானி ரவீந்திர குப்தா எச்சரித்துள்ளார்.
பூஸ்டர் டோஸ் அவசியம்
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலையின்
நுண்ணுயிரியல் துறை பேராசிரியராக பணியாற்றும் ரவீந்திர குப்தா, ஓமிக்ரோன் வைரஸ் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது கொரோனாவின் புதிய வகை ஒமிக்ரோன்
வைரஸ் வேகமாக பரவினாலும் பாதிப்பு மிதமாகவே உள்ளது. இதற்கு ஓமிக்ரோன் ‘செல்’ அணுக்களின் சேர்க்கை மற்றும் உருவாக்கத்தில் நிகழ்ந்த தவறுகள் தான் காரணம். ஆனால், கொரோனாவில் இருந்து அடுத்து உருவாக உள்ள வைரஸ் மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதனால் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தி பாதுகாப்புக்கு முன்னுரிமை
அளிக்க வேண்டும். ஒமிக்ரோன் தடூப்பூசிக்கு கட்டுப்படாது என்பதால், பூஸ்டர்
டோஸ் அவசியம் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் கெனரல் அதனம்
கெப்ரியேசஸ் கூறியதாவது:தடுப்பூசி போட்டவர்களில் டெல்டாவால்
ஏற்படும் பாதிப்பை விட,ஒமிக்ரோன் வைரஸின் பாதிப்பு குறைவு தான். ஆனால், அதைமிதமானது என்ற பட்டியலில் சேர்க்க முடியாது.
உயிர் இழப்பு
இதர வைரஸ் போல ஓமிக்ரோன் வைரஸ் பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தி அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வருகிறது பலர் உயிரிழக்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.