ஒரு நபரின் ஆடம்பரமான செயல்களை அவர்களின் குணத்தால் நாம் அடிக்கடி விளக்குகிறோம். ஆனால் அதைத் தாண்டி அறிய வேண்டிய பல கோளாறுகள் உள்ளன.சிறந்த அமெரிக்க உளவியலாளர்களான ஆரோன் டி. பெக் மற்றும் ஆர்தர் ஃப்ரீமேன் ஆகியோர் மனித மனநிலையின் சில ரகசியங்களை, தங்கள் புத்தகமான, Cognitive Therapy of Personality Disorders இல் வெளிப்படுத்தியுள்ளனர்.
1. அலட்சியக் கோளாறு
இந்த பிரிவில் எப்போதும் அதிக ஓய்வு மற்றும் குறைந்த வேலை வேண்டும் என்று விரும்பும் நபர்கள் உள்ளனர். நிச்சயமாக, இது ஒரு எளிய மனித விருப்பம், இருப்பினும், நம்மில் சிலர் பெரும்பாலும் இதில் அதிகம் மூழ்குகின்றனர். எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனத்தின் ஊழியர் ஒரு வருடத்திற்குள் பல நோய் விடுமுறைகள், ஓரிரு தவணை விடுமுறைகள் மற்றும் பல ஊதியமின்மை விடுமுறை நாட்களை எடுத்துக்கொண்டால், மேலும் பல முறை வேலைக்கு தாமதமாக வந்தால், உளவியலாளர்கள் அவர்களை ஒரு சமூக விரோத ஆளுமை கோளாறு கொண்டர்வகளாக அடையாளப்படுத்துகின்றனர்.இருப்பினும், இக்கோளாறு ஏற்படுத்தும் இன்னும் சில அறிகுறிகள் உள்ளன:
- அடிக்கடி மாற்றப்படாத பொய்கள்
- மற்றவர்களின் செலவில் வாழ ஒரு ஆசைப்படல்
- மேலதிக வேலைவாய்ப்பு திட்டங்கள் இல்லாமல் அடிக்கடி வேலையை மாற்றுதல், அதாவது “எங்கும் ஒழுங்காக போவதில்லை”
- திட்டமிடப்படாத கொள்முதல் மற்றும் பணத்தை வீணடிப்பது (ஒரு நபர் தேவையான தயாரிப்புகளை வாங்கப் போய்விட்டு,அதற்கு பதிலாக பொழுதுபோக்க ஒரு புதிய விளையாட்டை வாங்குதல்)
நேர மேலாண்மை மற்றும் வெகுமதிகள் சமூக விரோதத்தை எதிர்த்துப் போராட உதவும். ஏதேனுமொரு கடமையை செய்தால் உங்களுக்கு நீங்கள் என்ன பரிசை வழங்குவீர்கள் என்று எழுதுவது நல்ல யோசனையாக இருக்கலாம் (எடுத்துக்காட்டாக, ஓரிரு நாட்கள் திட்டத்தின் படி வாழ்க) ஒரு பழக்கத்தை வளர்ப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு மாத கால அட்டவணையை தயாரித்து அதன்படி நடக்க. மேலும், இதுபோன்ற குறைபாடுகள் இருக்கும்போது, உளவியலாளர்கள் “தேர்வுகளின் கண்ணோட்டம்” என்ற பயிற்சியை பரிந்துரைக்கின்றனர். ஒரு சிக்கல் எழுதப்பட்டதும், அதிலிருந்து வெளியேறக்கூடிய அனைத்து வழிகளும் அவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகள் ஆகியவற்றுடன் ஆராயப்படும்போது, அது பகுத்தறிவுடனான முடிவுகளை எடுக்க உதவும்.
2. கூச்சம்
வளரவிடப்பட்ட கூச்சம் காலப்போக்கில் வெளி உலகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்த விடாத தனிமை மற்றும் விருப்பமின்மையாக உருவாகலாம். மனநல கோளாறின் விளிம்பில் இருக்கும் நபர்கள் வலுவான உணர்ச்சிகளை உணருவதை நிறுத்திவிட்டு, மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதிலிருந்து தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். அதனால்தான் அவர்கள் தொலைதூர வேலை அல்லது தகவல்தொடர்புடன் இணைக்கப்படாத பிற செயல்பாடுகளைத் தேர்வு செய்கிறார்கள்.
வளர்ந்துவரும் உள்நோக்குச் சிந்தனை ஒரு உளச்சிதைவு ஆளுமைக் கோளாறுக்கு வழிவகுக்கிறது, இது பின்வரும் அறிகுறிகளைக் கொண்டுள்ளது:
- விமர்சனம் அல்லது பாராட்டுகளை அலட்சியப்படுத்தல்
- நெருங்கிய நண்பர்கள் இல்லாதது அல்லது ஒரே நெருங்கிய நண்பர் மட்டுமே இருப்பது
- அடிக்கடி மற்றும் நம்பத்தகாத முறையில் கனவு காணும் போக்கு
- ஒரு நபர் தங்கள் சுற்றுப்புறத்துக்கு வெளிப்படுத்த பயப்படுவதாக உணரும் ஒரு வகை அதிஎதிர்வினைத்தன்மை
பல வழிமுறைகளின் உதவியுடன் இந்நோயைத் தடுக்க முடியும். பாடங்களை எழுதல், வெளிநாட்டு மொழியைக் கற்றுக்கொள்வது, யோகாவில் கலந்துகொள்வது அல்லது பைலேட்ஸ் பயிற்சி போன்ற எந்தவொரு குழு நடவடிக்கையும் மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.
அதிகரித்து வரும் இந்த தவறான மனநோயை எதிர்த்துப் போராடுவதற்கு நீங்கள் ஒரு எளிய வாழ்க்கைத் தந்திரத்தைப் பயன்படுத்தலாம் – “நான் மக்களை நேசிக்கவில்லை …” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, “எனக்கு இந்த விஷயம் பிடிக்கவில்லை” (பண்பு, ஆடை உருப்படி, தோற்றம், பழக்கம் போன்றவை) என சொல்லுங்கள். இந்த அணுகுமுறை கெட்டதைத் தவிர்த்து மக்களிடையே ஏதேனும் நல்லது இருக்கிறது என்ற புதிய கருத்தை உருவாக்க உதவும்.
3. பிற்போடல்
இந்த பிரிவில் சமூகத்தின் விதிகளைப் பின்பற்ற விரும்பாத கிளர்ச்சியாளர்கள் உள்ளனர். பின்னர் தேவையான நடவடிக்கைகளை தள்ளி வைப்பதன் மூலம் இது வெளிப்படுத்தப்படுகிறது. ஒத்திவைப்பதைப் பழக்கமாக்குவது ஒரு செயலற்ற-ஆக்கிரமிப்பு ஆளுமைக் கோளாறுக்கு வழிவகுக்கும், இது பெரும்பாலும் நீண்டகால மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.
பள்ளி அல்லது கல்லூரியில் ஒரு சிறிய கிளர்ச்சி என்பது ஒரு சாதாரண விஷயம், அதனை நோயாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், தள்ளிப்போடுதல் ஒரு புதிய கட்ட வளர்ச்சிக்கு மாறுகிறது என்பதை பின்வரும் அறிகுறிகள் குறிக்கலாம்:
- பாத்திரங்களை கழுவுதல், செல்லப்பிராணியின் அழுக்குப் பெட்டியை சுத்தம் செய்தல், குப்பைகளை வெளியே எடுப்பது போன்ற பெரும்பாலான மக்களுக்கு மிகவும் இனிமையற்ற ஆனால் சாதாரணமான செய்ய வேண்டிய வேலைகளுக்கு முகங்கொடுக்கும்போது எரிச்சல்.
- வேலை செய்யும்போது மிக மெதுவான வேகம் மற்றும் மோசமான தரம்
- வேலையை எவ்வாறு சிறப்பாகவும் விரைவாகவும் செய்வது என்பது குறித்து சுற்றுப்புறங்களிலிருந்து வரும் பயனுள்ள ஆலோசனைகளை எதிர்த்துப் பேசுதல்
- அதிகாரம் பெற்ற நபர்கள் மீது நியாயமற்ற கோபமான விமர்சனம் செய்தல்
தள்ளிப்போடுதல் நோயின் சிக்கலானது ஒரு நபர் வழக்கமாக அது அவர்களின் குற்றமல்ல என்று நினைப்பதாகும். ஏற்கனவே மேலே விவரிக்கப்பட்டுள்ள “தேர்வுகளின் கண்ணோட்டம்” என்ற பயிற்சி இந்த நிலைமைக்கு ஏற்றதாக இருக்கும். மேலும், மற்றவர்கள் தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ள மற்றவர்களின் இடத்தில் தங்களை கற்பனை செய்து கொள்வது மிகவும் அத்தியாவசியமாகும். இத்தகைய சிகிச்சையானது தள்ளிப்போடுதலின் முன்னேற்றத்தை நிறுத்தி, அந்த நபரை மற்றவர்களுக்கு அதிக உணர்திறன் தரும்.
4. மனக்கிளர்ச்சி மற்றும் கோபம்
தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்காத ஒரு நபருக்கு எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறு உருவாகும் அபாயங்கள் அதிகம். அத்தகைய நோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று, அந்த பழக்கத்திலிருந்து முற்றிலும் எதிர்மாறானவர்களுக்கு அது மோசமான முறையில் கருத்தை மாற்றும்.
நிச்சயமாக, ஒரு எளிய மனக்கிளர்ச்சி எந்த ஆபத்துக்களையும் மறைக்காதுதான். இருப்பினும், இது மனநிலையை பாதிக்குமாறும் பின்வரும் அறிகுறிகளுடன் பொருந்துமாறும் சென்றால், இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்:
- நிலையற்ற நட்பும் காதலும்
- அடிக்கடி சிந்திக்க முடியாத பண விரயம் (எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு சாரியை வாங்கப் போகிறீர்கள், ஆனால் இரண்டாவதாக ஒரு டெனிமை வாங்கி வருவீர்கள்.)
- விபத்துக்குள்ளாகும் விளிம்பில் கூட கவனமின்றி வாகனம் ஓட்டுதல்
- வெளிப்படையான காரணமின்றி மனநிலையின் மாற்றம் மற்றும் நாள்பட்ட சலிப்பு உணர்வு
கோப மேலாண்மை மற்றும் சுய அடையாளம் குறித்த பல்வேறு பயிற்சிகள் இதற்கு ஒரு நல்ல நோய்த்தடுப்பு ஆகும். சிறிய வெகுமதிகளுடன் சுய கட்டுப்பாடு கூட உதவியாக இருக்கும். உதாரணமாக, நீங்கள் என்ன வேலை செய்யப் போனீர்களோ அதை மட்டும் செய்து வர வேண்டும் செய்யாமல் திரும்பினால், உங்களுக்கு நீங்களே பிடித்த விருந்தைப் பரிசளியுங்கள்.
5. சுய நிந்தை
சுய நிந்தனைக்கு ஆளாகக்கூடிய நபர்களை தீக்கோழிகள் என்று எளிதாக அழைக்கலாம், ஏனென்றால் அவர்கள் ஒவ்வொரு முறையும் பிரச்சினைகளில் இருந்து மறைக்க விரும்பும் போது அவர்கள் தலையை மணலில் மறைக்க முனைகிறார்கள். உளவியலில் இந்த நோய்க்குறி தவிர்ப்பு ஆளுமைக் கோளாறு என்று அழைக்கப்படுகிறது. பீதி தாக்குதல்கள், மனச்சோர்வு மற்றும் தூக்கக் கோளாறுகள் மேம்பட்ட நோய்நிலைமைகளில் அறிகுறிகளாகத் தோன்றக்கூடும்.
சுயவிமர்சனம் சிறிய அளவுகளில் உதவியாக இருக்கும், மேலும் இது சுயமாக வளர நம்மைத் தூண்டுகிறது, ஆனால் இது அதிக அளவில் இருந்தால் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. பின்வருவதை நீங்கள் கவனித்திருந்தால் நீங்கள் இந்நோய்க்கு ஆளாகியுள்ளீர்கள்:
- விமர்சனம் அல்லது மறுப்பு ஆகியவற்றால் வலுவான மற்றும் உடனடி மனக்கசப்பு;
- புதிய தொடர்புகளால் அபத்தம் நடக்காமல் தவிர்ப்பது (எடுத்துக்காட்டாக, புதிய நபர்களுடன் தொடர்புகொள்ள வேண்டுமென்பதால் பதவி உயர்வினை மறுப்பது);
- சாத்தியமான சிரமங்கள், உடல் ஆபத்துகள் அல்லது சாதாரண செயல்களின் அபாயத்தை பெரிதுபடுத்துதல்;
- சொல்வதில் ஏதேனும் தவறாகி விடுமோ என பயந்து மக்களுடன் தொடர்புகொள்வதிலிருந்து உங்களைத் தடுத்தல்.
தவறான கணிப்புகளை மறுப்பது இந்த விஷயத்தில் ஒரு பயனுள்ள பயிற்சியாக இருக்கும். நீங்கள் செய்யவிருக்கும் ஒரு செயலைப் பற்றிய உங்கள் கணிப்புகளை நீங்கள் எழுத வேண்டும். உதாரணமாக, “நான் இரவு நேரத்தில் தாமதமாக, அறியப்படாத கடைக்குச் சென்றால், நான் கொள்ளையடிக்கப்படுவேன்” என ஒரு எண்ணம் எழுந்தால் அதை எழுதுங்கள். ஒருமுறை நிஜமாகவே அந்த செயலைச் செய்த பிறகு, முடிவை எழுதுங்கள். எனவே, அடுத்த முறை உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் அல்லது எதிர்மறையான கணிப்புகள் இருக்கும்போது, உங்கள் புத்தகத்தை திறந்து, உங்கள் குறிப்புகளைப் படியுங்கள், பயமுறுத்தும் எதுவும் நடக்கப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இது போன்ற வேறு கட்டுரைகளுக்கு எமது உளச்சுகாதரம் பகுதியை நாடுங்கள்.