இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
ஸ்படிக மாலை என்றால் என்ன?
பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன நீர், பாறைகளாக உருமாறி இருக்கும். அவ்வாறு உருமாறிய நீர்ப்பாறைகளை வெட்டி தூய்மையான கற்களைத் தேர்ந்தெடுத்து அதனை பலவித உருண்டையாக தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணிவது தான் ஸ்படிக மாலை ஆகும்.
யார் யாரெல்லாம் அணியலாம்
இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து படைப்புகளும் அனைவருக்கும் சொந்தம், ஆகையால் நீர் பாறைகளில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த ஸ்படிக மாலையை, அறிவியல் மற்றும் ஆன்மீக ரீதியாக சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம்.
பயன்படுத்தும் முறைகள்
ஸ்படிக மாலையை ஒருவர் காலை எழுந்தது முதல் இரவு தூங்க செல்லும் வரை அணிந்து கொள்ளலாம். முக்கியமாக நீங்கள் குளிக்கும் பொழுது கழுத்தில் ஸ்படிக மாலையோடு குளிப்பது நல்லது.
ஸ்படிகத்தை இரவில் அணியக்கூடாது. காரணம், ஸ்படிக மாலையை இரவில் கழற்றி தரையில் வைக்க வேண்டும். அப்போது தான் பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்பு பெறும்.
ஸ்படிக மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்
ஒளியையும், உரிய நிறத்தையும், காந்த சக்தியையும் இந்த பிரபஞ்சத்திலிருந்து தன்னுள் ஈர்த்து வைத்துக் கொண்டு அதனை அணிபவர்களுக்கு வழங்கும் குணம் இந்த ஸ்படிக மாலைக்கு உண்டு.அதனால் தெய்வ அருள், மனஅமைதி, சாந்தம், நல்ல சிந்தனை, தெளிவான அறிவு, தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும் என்கிறது அறிவியல்.
தெளிவான சிந்தனை, தன்னம்பிக்கையை அதிகரிக்கும், அதோடு உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து உடலை எப்போதும் குளிர்ச்சியுடன் வைத்திருக்கும். நம்மிடம் எப்போதும் எந்த வித தீய சக்திகளையும் நெருங்க விடாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது.
காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாகவும் இருக்கும். இதை அணிந்த தருணத்தில் உங்கள் மன அழுத்தம் குறைவதை நீங்கள் உணரலாம்.
இறைவனின் நாமத்தை உச்சரித்து ஸ்படிக மாலையை உருட்டும் போது மனதில் உள்ள அனைத்து எதிர்மறை எண்ணங்களும் விலகி ஓடும். இந்த ஸ்படிக மாலை அணிவதால் மனதில் உள்ள பாரம், மன அழுத்தம் போன்றவை குறையும்.