கொரோனா..
உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் கொரோனா என்ற கொடிய வைரஸ் வந்ததும் சரி மழுங்கி போயிருந்த நம் பாரம்பரிய சம்பிரதாயங்கள் மீண்டும் உயிர் பெற்றுவிட்டன!!
ஒவ்வொரு செயலும் அறிவியல் உண்ணும் உணவெல்லாம் மருத்துவம் அனைத்திலும் அறநெறி ஒரு காலத்தில் ஒவ்வொரு கடைக்கோடி தமிழனின் மரபிலும் மனதிலும் வெகு சாதாரணமாக இருந்த செயல் பாடுகள் இவை இதையே அண்டை நாட்டினர் அங்கீகரித்து சொல்லி இருந்தால் பழகி இருப்போம் பகிர்ந்து இருப்போம் நம் அன்புக்குரியவர்கள் சொன்னதால் அலட்சியபடுத்தி விட்டு ஓடிக் கொண்டிருந்த நமக்கு ஒரு கண்ணுக்குத் தெரியாத கிருமி நம் பாரம்பரியத்தின் மகத்துவத்தை புரிய வைத்துவிட்டது..
உலக மக்கள் நம் பாரம்பரியத்தை ஆச்சரியத்துடன் கொண்டாட துவங்கியுள்ளனர் நாகரீகம் என்ற பெயரில் நாம் மறந்து போன மரபுகள் அனைத்தையும் ஒரு கிருமி நமக்கு திருப்பி தந்து விட்டது நம் மரபுகள் மறைந்து விடுவதற்கான காரணம் சுயநலத்தாலா சூழ்ச்சிகளாலா என்று ஆராய்வதை விட்டுவிட்டு நாம் விட்டுவிட்ட மரபுகளையும் மாண்புகளையும் பற்றி கொண்டு பயணம் செய்வோம் நம் முன்னோர்களின் அறிவு திறன்களையும் பெருமைகளையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தி செல்ல ஒவ்வொருவரும் இயன்றதை செய்ய முயன்றிடுவோம்.
கொடிய நோய்கள் வராமல் தடுக்கவும் வந்த நோயை ஒடுக்கவும் நம் முன்னோர்கள் உலகிற்கு முன்னோடிகள் இது மொத்த உலகமும் உணர தொடங்கி உள்ளது
இரு கை கூப்பி வணங்க சொன்னது.
நீரில் கை கால் கழுவி பிறகு வீடு நுழைந்தது.
மாவிலை தோரணங்கள் கட்டியது.
மஞ்சள் பூசி குளித்தது தெளித்து விளையாடியது.
உணவில் மிளகு இஞ்சி மஞ்சள் சேர்த்தது.
நன்கு அவித்த உணவுகளை மட்டுமே உட்கொண்டது.
வாழை இலையில் உணவை பரிமாறியது.
வேப்பம் குச்சி, உப்பு, கரி கொண்டு பல் துலக்கியது.
வேப்பம் இலையில் புகை போட்டது.
மூலிகை இலைகளை கொண்டு ஆவி பிடித்தது.
மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக்கியது. வருடம் ஒருமுறை வீட்டிற்கு வெள்ளை அடித்தது
படிகாரத்துடன் எலுமிச்சை காய்ந்த மிளகாய் போன்றவற்றை தலை வாசலில் தொங்க விட்டது.
நெரிசல் மிகுந்த இடங்களுக்கு சென்று வந்தால் பின் வாசலில் சென்று குளித்தது.
கசாயம் குடிப்பது.
வெள்ளாவியில் உடை வெளுத்தது.
மண்,செம்பு,வெண்கலம் பாத்திரங்கள் உபயோகித்தது.
கழிவறையையும் குளியலறையையும் வீட்டுக்குள் வைக்காமல் கொள்ளை புறத்தில் வைத்தது.
சலூனுக்கும் சாவுக்கும் சென்று வந்தால் எதையும் தொடாமல் குளித்த பின் வீட்டுக்குள் நுழைந்தது.
சாவு வீட்டில் சமைக்க கூடாது என்று சொன்னது.
இறந்த பிணத்தை எரித்தது.
வீட்டு முற்றத்தில் துளசி செடியை நட்டு வைத்தது.
மாலை நேரம் வீட்டில் சாம்பிராணி புகையை போட்டது.
இன்னும் எத்தனை எத்தனை இவை அனைத்தும் கிருமிகள் தொற்றுவதைத் தடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதற்கும் சுத்தமாக இருப்பதற்கு மட்டுமே நம் சொந்தங்களால் சாதாரணமாக பின்பற்றப்பட்ட வழிமுறைகள் மற்றவரை பட்டியலிட்டால் நீண்டு கொண்டே செல்லும்….
மேலும் பல ஆரோக்கியம் குறித்த தகவல்களை பெற்று கொள்ள
image source:https://exbulletin.com/politics/16576/?Online_Business%insurance