பேச்சு திருமணங்களில் இந்து சோதிடத்தில் கடைபிடிக்கப்படும் திருமணப் பொருத்தங்கள் பற்றி நாம் அறிவோம் இவற்றில்
நட்சத்திர பொருத்தம்
சரியாக அமைந்து இருந்தால் நோய் நொடிகள் இன்றி ஆயுள் ஆரோக்கிய விருத்தியுண்டாகும்
கணப் பொருத்தம்
சரியாக அமைந்து இருந்தால் அன்பு இணக்கம் ஒற்றுமையுடன் ஒருவரையொருவர் மதிக்கும் வாழ்வு உண்டாகும்
மகேந்திரப் பொருத்தம்
சரியாக அமைந்து இருந்தால் ஐஸ்வர்ய புத்திர விருத்தி கிடைக்கும்
ஸ்த்ரீதீர்க்கப் பொருத்தம்
சரியாக அமைந்தால் பெண் தீர்க்க சுமங்கலியாக சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வார்
யோனிப் பொருத்தம்
சரியாக அமைந்திருந்தால் அன்யோன்ய அன்பு சயன சுகம் சந்தோஷமான இன்பவாழ்வு உண்டாகும்
ராசி பொருத்தம்
சரியாக அமைந்து இருந்தால் வம்சவிருத்தி குடும்ப விருத்தி நீடித்த ஆயுள் ஆரோக்கியம் என்பன உண்டாகும்
இராசியதிபதி பொருத்தம்
சரியாக அமைந்து இருந்தால் மன ஒற்றுமை சற்புத்திர யோகம் பரஸ்பர ஸ்நேகம் தானிய விருத்தி ஏற்படும்
வசிய பொருத்தம்
சரியாக அமைந்து இருந்தால் பரஸ்பர கவர்ச்சியுடன் இணைபிரியாத சுக வாழ்வு கிடைக்கும்
ரச்சு பொருத்தம்
சரியாக அமைந்து இருந்தால் மாங்கல்ய பலத்துடன் இன்ப துன்பங்களில் சமபங்குடன் ஒற்றுமையாகவும் தீர்க்க சுமங்கலியாகவும் வாழ வழி கிடைக்கும்
வேதைப் பொருத்தம்
வேதைப் பொருத்தம் சரியாக அமைந்திருந்தால் கஷ்டங்களை தாங்கும் வல்லமை துக்க நிவாரணம் மகிழ்ச்சி என்பவை கிடைக்கும்
நாடி பொருத்தம்
நாடி பொருத்தம் சரியாக அமைந்து இருந்தால் வம்சவிருத்தியும் சுகவாழ்வும் கிடைக்கும்
இவைகள் எல்லாம் இந்து சோதிடர்களால் மிக நெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தற்காலத்தில் உலகையே அச்சுறுத்தி உயிர்ப்பலி எடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காலத்தில் பேச்சுத்திருமணத்தை நடத்துவதற்கு இன்னமும் ஏதும் பொருத்தங்கள் பார்க்க வேண்டுமா? என்பது பற்றி கூறவில்லை காரணம் உலக சரித்திரத்தில் இவ்வாறான ஒரு கொரோனா காலம் இருந்ததில்லை என்பதே காரணமாகும்
இது பற்றிச் சிந்தித்ததன் பேறாக கொரோனா காலத்தில் திருமணம் நடத்துவதற்கு மேலதிகமாக எவ்வாறு பொருத்தம் பார்க்கலாம் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்
திருமண மட்டுமல்ல எதை செய்தாலும் வைத்திய சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகக் கடைபிடித்துக் கொள்ள வேண்டும் என்பதே உலகில் எங்குமுள்ள ஆட்சியாளர்களின் அறிவுறுத்தல்களாகும்.
இதனை மீறுவோர் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக வேண்டி ஏற்படும் அத்துடன் அந்த நபரும் அவரோடு தொடர்புபட்டவர்களும் பல நாட்களுக்குத் தனிமை படுத்த வேண்டியிருக்கும் ஆதலால் உலகைவிட்டு என்றுமே ஒழிந்து போக முடியாதபடி பரவிவிட்ட கொரோனாவுடன் வாழப்பழகுவதே எமக்கான வழியாக உள்ளது.
ஒரு மணமகன் வெளிநாட்டில் உள்ளவரானால் அவருக்குப் பேசப்படும் மணமகள் உள்நாட்டவராயின் திருமணம் நிச்சயமான பின்பு ஒன்றில் மணமகள் வெளிநாடு செல்ல வேண்டும் அல்லது மணமகன் உள்நாட்டுக்கு வந்து திருமணம் முடித்துக் கொண்டு மணமகளை அழைத்துக்கொண்டு வெளிநாடு செல்லலாம்.
எது எப்படியோ இருந்தாலும் அந்தந்த நாட்டுக்குரிய சட்டங்களின்படி இருவருமே பல நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருவருக்கும் கொரோனாத் தொற்று இல்லை என்று சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே திருமணம் நடத்தலாம்.
அதுவும் திருமண விழாவில் அனுமதிக்கப்படக்கூடிய ஆட்களின் எண்ணிக்கையும் அவர்களது ஆரோக்கிய நிலையும் கவனத்திற் கொள்ளப்படவேண்டும்.
மணமகன் மணமகள் இருவரும் ஒரே நாட்டில் இருந்த போதிலும் அவர்கள் வாழும் இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாயின் அப்போதும் பல நாட்கள் திருமணத்தைத் தள்ளிப்போடவேண்டி ஏற்படும் இங்கு PCR பரிசோதனைகள் இருவருக்கு செய்யப்பட்டு கொரோனா இல்லை என்று சான்றிதழ் பெற வேண்டும் இதை நாம் கொரோனா திருமணப் பொருத்தம் என்ற பெயரால் அழைக்கலாம்.
காதல் திருமணங்களுக்கு இந்து சோதிடத்தில் குறிப்பிட்டுள்ள 11 பொருத்தங்களும் பார்கப்படதேவையில்லை என கூறப்பட்டிருக்கிறது. ஆனால் கொரோனா காலத்தில் காதல் திருமணத்தை நிறைவேற்றுவதானாலும் கொரோனா திருமணப் பொருத்தம் கட்டாயமாகப் பார்க்கப்பட வேண்டியது அவசியம்.
உலகை விட்டு என்றுமே ஒழிந்துபோக முடியாதபடி பரவி விட்ட கொரோனாவுடன் வாழப்பழகுவதே எமக்கான வழியாக உள்ளது.
1000 பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம்-னு சொல்வது ஏன் சில வியப்பூட்டும் தகவல்கள்
சா . சக்திதாசன்