உலகையே தலைசுற்ற வைத்துள்ள கொரோனா குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில் உயிரிழப்புகள் தொடர்பாக நடத்தப்பட்ட சில ஆய்வுகளில் பெண்களை விட ஆண்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
உலக நாடுகளின் தரவுகளும் ஆண்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அதன் காரணமாக இறப்பதாகவும் காட்டுகின்றன.
சில நாடுகளில் கோரோணா பாதிப்பால் ஆண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதும் இன்னும் சில நாடுகளில் ஆண்கள் பாதிக்கப்படுவதை விட இறப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்களிடம் உள்ள புகைப்பழக்கம்,மதுப்பழக்கம் போன்ற நடத்தைக் காரணிகள் நீரிழிவு புற்றுநோய் போன்ற உடலில் ஏற்கனவே இருக்கும் நோய்கள் மற்றும் மரபணு மாற்றங்களில் நிபுணர்கள் ஆழமான ஆய்வுகள் மேற்கொண்டனர் இதற்கான காரணம் தான் என்ன?
நடத்தை காரணிகள்
பொதுவாகவே கொரோனா வைரஸ் மட்டுமல்லாது அனைத்து விதமான நோய்களுக்கும் ஆண்களே அதிகம் பாதிப்படைகிறார்கள். குறிப்பாக கொரோனா வைரஸ் சுவாச பாதையை தாக்குகிறது என்று சொல்லப்படும் போது ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை இருப்பவர்களிடத்தில் புகைப் பழக்கமும் சேர்ந்து கொள்வதால் நிலைமை இன்னும் மோசமாகும்.
மதுபழக்கமும் கொரோனாவுக்கு எதிரி இவற்றை ஆண்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். இதையே உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்துகிறது சீனாவில் பெண்களை விட இருமடங்கு ஆண்கள் covid-19 க்கு பலியானதையும் அதில் 52 சதவீத ஆண்கள் புகைப்பழக்கம் உடையவர்களாக இருந்ததையும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
அதேபோல் தென்கொரியாவில் 2-1 என்ற விகிதத்தில் ஆண்கள் பெண்கள் இறப்பு விகிதம் இருப்பதையும் அந்நாடு வெளியிட்டுள்ள தரவுகள் எடுத்துரைக்கின்றன.
நோயெதிர்ப்பு அமைப்பு
நோயெதிர்ப்பு ஆற்றலிலும் ஆண்களை விட பெண்களே வலுவாக உள்ளனர். இதனால் ஹெப்படைடிஸ் பி, சி மற்றும் பிற வகை வைரஸ்களுக்கு எதிரான போரிலும் பெண்களே வலிமையான இடத்தில் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மரபணுக்களும் ஒரு காரணம்
ஆச்சரியமான மற்றொரு விடயம் பெண்களின் மரபணுக்கள் மனிதனின் மூளைத்திறன் மற்றும் நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பதில் ஓ குரோமோசோம்கள் அதிகம் பங்களிப்பவை.
இதில் பெண்களிடத்தில் இரண்டு ஓ குரோமோசோம்கள் இருப்பது கூடுதல் சிறப்பு. தாய், தந்தை இருவரிடத்தில் இருந்தும் பெண்கள் ஓ குரோமோசோம்களைப் பெறுகின்றனர். ஆனால், ஆண்களுக்கோ, தான் தாயிடமிருந்து மட்டும் ஒரேயொரு ஓ குரோமோசோம் கிடைக்கிறது.பெண்களின் ஆற்றல் மிக்க நோயெதிர்ப்பு
சக்திக்கு இதுவே காரணம்.
வாழ்வியல் முறை
இதுமட்டுமல்ல,பெண்கள் சுகாதார விடயத்தில் அதிக அக்கறை
எடுத்துக்கொள்வதையும், ஆண்களில் பெரும்பாலானோர் கழிவறை பயன்படுத்திய பின்னர் கைகழுவும் அடிப்படை சுகாதாரத்தை கூட பின்பற்றாதவர்களாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும், ஆண்கள் பெண்களை விட சமூகத்தோடு அதிக தொடர்புள்ளவர்களாகவும், விதிகள், கட்டுப்பாடுகளை மீறுபவர்களாகவும் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
இதனாலேயே ஆண்கள் நோய்த்தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.