கடலில் அரியவகை உயிரினங்கள் வாழ உதவுவது பவளப்பாறைகள். அதேநேரம், கடல்பகுதியின் தட்பவெட்பத்தைப் பேணுவதிலும் பவளப்பாறைகளுக்கு மிக முக்கிய பங்குண்டு.
சுண்ணாம்புக் கற்களால் ஆனவை என்றாலும் பவளப்பாறைகளும் உயிரினமாகவே கருதப்படுகின்றன.
கடலில் வாழும் எனைய நுண்ணுயிரிகளையே உணவாக உட்கொண்டு வளர்வதாலேயே இவற்றை விலங்கு அல்லது தாவரம் என்ற விகுதிக்குள் அடக்கியிருக்கிறது விஞ்ஞானம்.
இதுபோன்ற பவளப் பாறைகளில் பொலிப்ஸ் என்ற உயிரினம் காணப்படுகின்றன. இந்த உயிரினம் தான் கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு பவளப் பாறைகளுக்கு கடினத்தன்மையையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன.
இந்த பொலிப்ஸ் உயிரிழந்து விட்டால் பவளப்பாறைகளும் உயிரிழந்து விடும்.
பவளப் பாறைகளை சார்ந்து தான் பலவிதமான கடற்பறவைகள், பாலூட்டிகள், ஒட்டுப்பிராணிகள் மற்றும் முள்தோல் பிராணிகளும் அதிக அளவில்
உயிர் வாழ்கின்றன.
மிகப்பெரிய கடல்வளங்களை உள்ளடக்கியதாக இருக்கும் பவளப் பாறைகள் கடல் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும்
திகழ்வதுடன் ஆராய்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது.
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கடலோரப் பகுதிகளை மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவியாக இருக்கிறது.