பெயர்கள் தெரியாமல் அறிமுகமாகி, பின் ஒருவரையொருவர் நன்கு அறிந்தோம்!ஒருவரையொருவர் கேலி செய்து, பின் நாமே ஆறுதலடைந்து அதனை ஏற்றுக் கொண்டோம்!
சின்னச் சின்ன சண்டைகள், வாக்குவாதங்கள் செய்து, பின் நாமே சண்டை -சமாதானம் என ஆறுதலடைந்தோம்!செல்லப் பெயர்களை சரிசமமாக சூட்டி மகிழ்ந்து, பின் அதனையே நம் நிஜப்பெயராக அடையாளப்படுத்தினோம்!
விரிவுரையாளர்களிடம் நற்பெயர்,நண்பர்களிடம் செல்லப்பயர் என Double Action இல் Dual Roles செய்து மகிழ்ந்தோம்! முதல் வருடத்திலேயே முழு நண்பர்களையும் பெற்றுக்கொண்டோம்!
கல்லூரி காலம் முடியவே கூடாது! என மனம் வேண்டினாலும் இன்னும் மூன்று வருடங்களின் முற்றுப்புள்ளியை கண்டுவிடுவோம்.முற்றுப்புள்ளி காண்பது கல்லூரி வாழ்க்கை மட்டுமே நட்பு இல்லை!
காற்புள்ளி கொண்டு நட்பைத் தொடர்ந்திடுவோம். எவ்வாறெனினும் இறுதி நாளில் கல்லூரி வாழ்க்கைக்கும், அதனையளித்த எம் பெற்றோருக்கும், கல்லூரி மண்ணுக்கும், எம்மை உயர்த்திய எல்லா விரிவுரையாளர்களுக்கும், இறுதியாக என் அன்பின் நண்பர்களுக்கும் நன்றி பகிர்ந்திடுவோம் கண்ணீருடன்…
பேசித்திரிந்த விடயங்கள்,பழகிய காலங்கள், செய்த சேட்டைகள் என பட்டியல் நீண்டுகொண்டே போகும்!மறக்க முடியாத நினைவுகள் ,நிகழ்வுகள்
சற்றும் எதிர்பாராத திருப்பங்கள்,சம்பவங்கள்சற்றும் தளராத நண்பர்கள் ,நண்பிகள் என அனைத்தையும் பார்க்கச் செய்வது ” கல்லூரி வாழ்க்கை ” அதனைப் பெற்றுத் தருவது ” கல்லூரி நட்பு” இப்படிக்கு உங்கள் அன்பின் இணைய நண்பி- திவ்யா விஸ்வலிங்கம்-