உங்களுக்கான சினிமா துளிகள்…
தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நூறு படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகை ஜெயப்பிரதா தற்பொழுது தன் சுயசரிதையை எழுதி வருவதுடன் வலைத்தள தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
கோலிசோடா கடுகு / பத்து என்றதுக்குள்ள உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் தற்போது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
இசையமைப்பாளர் டி இமானை தொடர்ந்து சத்யா, கொலைகாரன், கபடதாரி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சைமன் றி.கிங் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கிறார்.
பாகுபலி பட புகழ் நடிகர் பிரபாஸ் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ராதே ஷ்யாம் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அரசியல்வாதியாக நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி இருக்கிறது இதில் அவருக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹையாத்ரி தங்கையாக நடிகை மஞ்சிமா மோகன் நடித்திருக்கிறார்கள்.
வெற்றிவேல் / கிடாரி / தம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நிகிலா விமல் தமிழில் அறிமுகமான முதல் திரைப்படம் ஒன்பது குழி சம்பத் இந்த திரைப்படம் ரீகல் டாக்கீஸ் தாக்கி என்ற ஒன்லைன் தியேட்டரில் வெளியாகிறது.
புரியாதபுதிர் / ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி வரும் யாருக்கும் அஞ்சேல் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த பிந்துமாதவி தன்னுடைய கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுக்கும் பணியை நிறைவு செய்திருக்கிறார்…
வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் தயாராகி இருக்கும் கலர்ஸ் என்ற திரைப்படத்தில் ராம்குமார் என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகிறார் இவர் நடிகர் சரத்குமாரின் சகோதரர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள இசையமைப்பாளர் ரவி மேனன் இசையில் கதவுஎண் 7 கணேசபுரம் என்ற படத்திற்காக மூத்த பின்னணி பாடகர் ஜேசுதாசுடன் இளம் பாடகி மாதங்கி அஜித்குமார் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இதன் மூலம் ஜேசுதாஸ் நான்காவது தலைமுறை கலைஞர்களுடன் இணைந்து திரைப்பட படத்தில் பின்னணி பாடி சாதனையை படைத்திருக்கிறார்.
என் சுவாசக் காற்றே என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை இஷா கோபிக்கர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் அயலான் படத்தில் எதிர்மறை நாயகியாக நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில், நம்பர்-1 நாயகியாக இருந்தவர், குஷ்பு. அந்த சமயத்தில் எல்லா பிரபல நடிகர்களும் தங்கள் படங்களில், குஷ்புவை ஜோடியாக்கி கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள்.இதன் உச்சகட்டமாக சில ரசிகர்கள், குஷ்புவுக்கு கோவில் கட்டினார்கள்.குஷ்புவை கொண்டாடிய அதே ரசிகர்கள் இப்போது அந்த இடத்தில், நயன்தாராவை வைத்து அழகு பார்க்கிறார்கள்.
நயன்தாரா தற்போது, மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படத்தில் நடித்து வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில், நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கிறார்.அவர், அம்மன் வேடத்தில் இருக்கும் படம் ஒன்றை கடவுளாக நினைத்து வீட்டின் பூஜை அறையில் வைத்து, சில ரசிகர்கள் வணங்கி வருகிறார்கள்.
நயன்தாராவுக்கு ரசிகர்கள் இதே வரவேற்பை தொடர்ந்தால், அவர் எதிர்காலத்தில் அரசியலுக்கு நகர்வது நிச்சயம் என்கிறார், ஒரு பிரபல பட அதிபர்!
அங்காடி தெரு, வெயில், அரவான், காவிய தலைவன் ஆகிய படங்களை இயக்கிய வசந்தபாலன் அடுத்து இயக்கியுள்ள புதிய படம், ஜெயில் இந்த படத்தை பற்றி இவர் கூறியதாவது
ஜெயில் என்றதும் இது ஜெயிலில் நடக்கிற கதை என்று கற்பனை செய்ய வேண்டாம். ஜெயில் போன்ற உணர்வை ஏற்படுத்துகிற கதை. ஜீ.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக, நடித்து இருக்கிறார். நடிகர் கிட்டியின் மகன் நந்தன்ராம், ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அபர்நதி கதாநாயகியாக, குட்கா விற்கும் பெண்ணாக வருகிறார். ஜீ.வி.பிரகாசின் அம்மாவாக ராதிகா சரத்குமார் நடித்து இருக்கிறார்.
ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கிறார். இவர் சவரகத்தி / இரும்புத்திரை ஆகிய படங்களை வெளியிட்டவர்.
ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, பாடல்களை கபிலன் எழுதியிருக்கிறார்.
விஷால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் தன் கைவசம் தற்போது சக்ரா மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய படங்களை வைத்திருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் அவர் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலமாக தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் தமக்கும் அதிக காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள விஷால், தமது மேலாளருக்கும் இதே நிலை தான் என தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தற்போது மூவரும் தனிமைப் படுத்திக் கொண்டு ஆயுர்வேத மருந்து எடுத்து வருவதாகவும், ஒரு வார காலத்திற்குள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், தற்போது நலமாக உள்ளதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிக்கும்போது கதாபாத்திரமாகவே மாறும் ஒரு சில நடிகர்- நடிகைகளில் கீர்த்தி சுரேசும் ஒருவர். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தமிழில் நடிகையர் திலகம் தெலுங்கில் மகாநடி அவர் கதாபாத்திரத்துடன் ஒன்றினார். அதற்கு பலன் கிடைத்தது. அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
தற்போது அவர் நடிப்பில் வெளி வந்துள்ள பென்குயின் படத்திலும் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். 2-வது முறையாக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்கள்.
அந்தக்காலத்து கிராமப்புறங்களில் முனி அடித்து விட்டது மோகினிப் பேய் கொன்று விட்டது என்று இரவு நேரங்களில் திகிலூட்டும் கதைகளை கற்பனை கலந்து சொல்வார்கள். நடு நிசியில், ஒற்றை மாட்டு வண்டிக்காரரை மல்லிகை சூடிய மோகினி வழிமறித்து, வெற்றிலைக்கு சுண்ணாம்பு கேட்டது… என்று பயமுறுத்துவார்கள். இப்போது உலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனாவின் அராஜகமும் அப்படித்தான் ஆகிவிட்டது.
இதையே கருவாக வைத்து ஒரு பேய் படம் தயாராகிறது. பேயை கொரோனாவுடன் ஒப்பிட்டு திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.
இதையும் படிக்கலாமே விடாமுயற்சியே யோகிபாபுவின் விஸ்வரூப வெற்றி
இது போன்ற மேலும் பல சினிமா தகவல்களை அறிந்து கொள்ள இங்கே செல்லவும்.