தீபாவளி என்பது இந்துக்களின் மிக முக்கியமான திருவிழாவாகும்.இந்தியா மற்றும் வேறு நாடுகளில் உள்ள இந்துக்கள் கொண்டாடப்படும் தீபாவளி பிரார்த்தனை, விருந்துகள், பட்டாசுகள், குடும்பங்கள் ஒன்று கூடல் ஆகியவற்றால் கொண்டாடப்படுகின்றன. சிலருக்கு தீபாவளியும் ஒரு புதிய ஆண்டின் தொடக்கமாகும்.
இந்த வருடம் 2020 ஆம் நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
தீபாவளி ஒளிநிரம்பிய விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு வழிகாட்டும் விழா. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் தீய எண்ணங்களை அழித்து நல்ல எண்ணங்களை மனதில் ஏற்படுத்த தீபாவளி சிறந்த நாளாக அமைகிறது.
தீபாவளி நல்ல நேரம்..!!
எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நேரம்
அதிகாலை : 04.30 மணி முதல் 06.00 மணி வரை
புதிய ஆடை, அணிகலன்கள் அணிய உகந்த நேரம்
காலை : 06.00 மணி முதல் 07.30 மணி வரை
காலை : 10.30 மணி முதல் 12.00 மணி வரை
லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்
அதிகாலை : 03.00 மணி முதல் 06.00 மணி வரை
காலை : 10.30 மணி முதல் 12.00 மணி வரை
பிற்பகல் : 12.00 மணி முதல் 01.00 மணி வரை
மாலை : 05.00 மணி முதல் 07.30 மணி வரை
இரவு : 9.00 மணி முதல் 10.00 மணி வரை
தீபாவளி வழிபாடுகள் :
லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாள் தீபாவளி திருநாள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜையை செய்யலாம். இந்த பூஜையை செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
தீபாவளி நன்னாள் முதற்கொண்டு வறுமையும், பசிப்பிணியும் விலகி நம் இல்லமும், உள்ளமும் மகிழ்வுற அன்னபூரணியை மனதார வழிபட வேண்டும்.
தீபாவளித் திருநாளில் நரகாசுரனை அழிக்க காரணமான கிருஷ்ணரை வழிபட வேண்டும். வீட்டில் செய்த பண்டங்களை கிருஷ்ணருக்கு நிவேதனமாகப் படைக்க வேண்டும்.
தீபாவளி அன்று கோவிலிற்கு சென்று வாருங்கள்.
தீபாவளி நாளில் கேதார கௌரி விரதம் இருந்து வழிபட்டால் மனை தோஷங்கள் நீங்கும். வீட்டில் பொன், பொருள் சேரும். வீடு, நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய்தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தீபாவளி அன்று நாம் செய்ய வேண்டியவை :
புத்தாடைகள் அணிந்துகொள்ள வேண்டும். பெற்றோரிடமும், வீட்டுப் பெரியோர்களிடமும் ஆசீர்வாதம் பெறுதல் சிறந்தது.
தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகும். புண்ணியம் உண்டாகும்.
பட்டாசு, புத்தாடை, இனிப்பு, கார வகைகள் என்று அன்றைய நாள் முழுக்க மகிழ்ச்சி இல்லங்களிலும், நம் உள்ளங்களிலும் இருக்க வேண்டும்.
தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள்
இந்த தீப ஒளி நாள், நம் வாழ்வில் மென்மேலும் ஒளியையும், மகிழ்ச்சியையும், வளத்தையும், நலத்தையும் பெற்றுத்தர வேண்டி, நண்பர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான Cheல்லாவின் தீபாவளி நல் வாழ்த்துக்கள்..
மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்