கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த பகுதி.
அலர்ஜி என்பது யாருக்கு ஏற்படும் எதற்கு ஏற்படுகிறது என்பதை கணிக்க இயலாது. பிற மருந்துகளுக்கு அலர்ஜி உள்ளவர்கள், தடுப்பூசி போடக்கூடாது என்பது கிடையாது. குறிப்பிட்ட ஏதேனும் அலர்ஜி உள்ளவர்கள், தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவர்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்.
பெனிசிலின், அமினோகிளைகோசைட்ஸ், டைக்ளோஃபெனக் போன்ற மருந்துகளால் அலர்ஜியை எதிர்கொள்வோர், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா?
எந்தவிதமான மருந்து அலர்ஜி உள்ளவர்களும் தைரியமாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். ஏற்கனவே வேறு ஏதோ தடுப்பூசி போட்டுக்கொண்டு, அதன் விளைவாக அதிக காய்ச்சலோ, நரம்புத்தளர்ச்சியோ, கைகால்கள் செயலிழந்த உணர்வோ, மயக்கமோ வந்திருந்தால் அவற்றைத் தடுப்பூசி தொடர்பான தீவிர பின்விளைவுகள் என்று புரிந்துகொள்ளலாம்.
இதற்கு முன் இப்படிப்பட்ட அனுபவம் உள்ளவர்கள் மட்டும் மிகவும் யோசித்து, மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து அவர்களின் அறிவுரையின் பேரிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மற்றபடி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மருந்து அலர்ஜி இருந்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் முதலில் ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகளோ, இன்சுலினோ எடுத்துக்கொள்ள வேண்டும். HbA1c எனப்படும் மூன்றுமாத கால ரத்தச் சர்க்கரை அளவு 6.5 முதல் 7-க்குள் இருக்க வேண்டும்.
உங்களுக்கு இருப்பதாகச் சொல்கிற புண்ணுக்கு மருத்துவப் பரிந்துரையோடு ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொண்டு புண் ஆறியதும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தவறில்லை. ஆனால், அந்தப் புண் ஆறாமலிருக்கிறது, ரத்தச் சர்க்கரையும் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்ற நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வது சரியான ஆலோசனையல்ல.
உங்களுக்கு கால்களில் நரம்பு சுருண்டுகொள்ளும் வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை இருந்தாலும் புண் ஆறாமலிருக்கலாம். எதற்கும் ஒருமுறை மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். பொதுவாக எந்த நோய் இருந்தாலும் அதன் தீவிரத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.
இதயநோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா என எந்தப் பிரச்னை இருந்தாலும் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இணைநோய்களுக்கான சிகிச்சைகளை எடுத்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்பதே எங்களைப் போன்ற மருத்துவர்களின் அறிவுரை.
தடுப்பூசி போட்டவர்கள் மாஸ்க் அணிய வேண்டியது அவசியமா ?
தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மாஸ்க், கட்டாயம் அணிய வேண்டும்.சமூக இடைவெளி என்பது நம் அனைவருக்கும்.
இப்பாதிப்பில் இருந்து முழுமையாக நாம் அனைவரும் மீள, அரசின் விதிமுறைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
டாக்டர். ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.
ஒட்சிசன் கோவிட் -19 சிகிச்சையின் போது அதிகம் தேவைப்படுவது ஏன்