இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
நாம் வாழும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் விலகி வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன.
விளக்கேற்றும் நேரம்
விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்கு சற்று முன்னதாக பிரம்ம முகூர்த்தம் (காலை 4.30 முதல் 6.00 மணி ) என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம்.
அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்கு சற்று முன்னதாக, பிரதோஷ காலம் மாலையில் (4.30 முதல் 6.00 மணி ) என்கிற உன்னதமான காலத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான பாக்கியங்களையும் பெறலாம்.
எத்தனை திரி போடுவது?
விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.
ஒரு திரி ஏற்றும்போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.
தீபம் ஏற்றும்போது செய்யவேண்டியவை
பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளவர்களின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.
தீபத்தை எவ்வாறு அணைப்பது?
தீபத்தை பூவினால் அணைக்க வேண்டும்.
வாயினால் ஊதக்கூடாது.
கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.
வீட்டில் விளக்கை ஏற்றிய பிறகு வெளியே செல்லலாமா?
மாலையில் வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றி வழிபாடு செய்த பிறகு வெளியே செல்லக்கூடாது. ஒருவேளை வெளியில் செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டால் விளக்கை மேற்கூறியவாறு அணைக்கவேண்டும். ஏனென்றால் வீட்டில் செல்லப் பிராணிகளாலோ அல்லது எலிகளின் சேட்டைகளால் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
பிரச்சனைகள் நீங்கி வீட்டில் மன நிம்மதி பெருக இதை செய்தாலே போதும்..!!
இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.