கடந்த வாரம் நாடியா சாங் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார் அதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் 16 போட்டியாளர் இருந்தனர்.
முக்கிய போட்டியாளராக எதிர்பார்க்கப்பட்ட நமீதா திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறியது அனைவரும் அறிந்ததே.
கடந்த வாரம் கேப்டன் டாஸ்க் நடைபெற்றது. ராஜு, சிபி, பாவ்னி மற்றும் இசை வாணி இந்த டாஸ்கில் பங்கேற்றார்கள். மேலும் இந்த வீட்டில் ஜொலித்தவர் யார் என்ற தேர்வு நடைபெற்றதில் இமான் வெற்றி பெற்றதால் அவரும் இந்த டாஸ்கில் பங்கேற்றார்.
இந்த டாஸ்கில் சிபி வெற்றி பெற்று இந்த வீட்டின் தலைவரானார். பின் நாமினேஷன் நடைபெற்றது, நாமினேஷன் லிஸ்டில் அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகியயோர் லிஸ்டில் வந்தனர்.
நாணயத்தை எடுக்கும் போட்டியின் போது மாட்டிக்கொண்ட நிரூப், பிரியங்கா சுருதி ஆகியோர் பாதாள சிறைக்கு அனுப்பப்பட்டனர். நாணயத்தை ஒருவர் கைப்பற்றுவதும் அவரிடமிருந்து மற்றொருவர் திருடுவதும் அவரிடமிருந்து வேறு ஒருவர் கைப்பற்றுவதும் என்ற வகையில் போட்டி நடந்தது.
நேற்று அபிஷேக்கின் பிக்பாஸ் பயணம் முடிவிற்கு வந்தது. உனக்கு இது வேணும்டா என்று அபிஷேக் மீது கோபத்தோடு இருந்த பல பார்வையாளர்கள் இந்த முடிவுக்காக சந்தோஷப்பட்டிருப்பார்கள். இனிமேல் ஆட்டம் சுவாரசியமா இருக்குமா? என்று கவலையடைந்தவர்களும் சிலர் இருந்திருப்பார்கள்.
இவ்வளவு சீக்கிரம் வெளியே வருவோம் என்று எதிர்பார்த்தீங்களா? என்று அபிஷேக்கை மேடையில் கேட்டார் கமல்ஹாசன்
இல்லை டாப் 5 வரைக்கும் வருவேன் என்று நினைத்தேன் என்று அபிஷேக் சொன்னது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. சமூகவலைதளங்களின் வெறுப்புக்கு ஆளாவதென்பது அபிஷேக்குக்கு புதிதான விஷயம் அல்ல.
புத்திக்கூர்மையுடன் இருக்கும் அபிஷேக் என்றாலும் அவரது அலட்டலான பல விஷயங்களுக்காக அவரை வெறுத்து கிண்டலடிப்பவர்கள் பலர் வெளியே இருக்கிறார்கள்.
நேற்றைய நிகழ்ச்சியில் அபிஷேக்கின் வெளியேற்றத்திற்காக வீடே ஒன்று கூடி ஒப்பாரி வைத்து என் காயினை எடுத்துக்கோ என் காயினை எடுத்துக்கோ என்று கெஞ்சிய போது, அதை நீங்க முடிவு பண்ண முடியாது. நான்தான் முடிவு பண்ணுவேன் என்று பிக்பாஸ் சொல்ல அபிஷேக் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்து விட்டார்.
அபிஷேக்கின் வெளியேற்றத்திற்கு ஒரு சிலர் கண்கலங்குவது சரியானாலும் ஊடக அனுபவம் மிகுந்த பிரியங்கா, ஏதோ வாழ்க்கையே பறிபோனது போல் இடிந்து அமர்ந்திருந்த காட்சி ஆச்சரியத்தை அளித்தது.
சிபியின் கேப்டன்ஷிப் பாரபட்சமில்லாமலும் நேர்மையாகவும் சரியாகவும் நடந்ததாக அனைவரும் சொன்னார்கள்.
அபிஷேக் இல்லாத வீடு இனி அமைதியாக இருக்குமா? அல்லது வேறு ஆர்ப்பாட்டங்களுடன் தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் எதிர் பாராததை எதிர் பாருங்கள் துபுஜிக்கு துபுஜிக்கு BiggBoss