சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்று வந்த கமல்ஹாசன் கோவிட் தொற்றுக்கு ஆளாக, போன வாரம் நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
சிகிச்சை முடிந்து கமல்ஹாசன் நலமுடன் திரும்பி இந்த வார நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இத்தனை விரைவில் அவர் திரும்பியது எல்லோருக்கும் மகிழ்ச்சி.
தன்னால் முடிந்த பங்களிப்பை ரம்யா கிருஷ்ணன் செய்து இருந்தாலும் கமல்ஹாசன் அளவிற்கு இல்லை என்று சொல்ல வேண்டும். உங்கள் அன்பினால்.. மீண்டும் உங்கள் நான் என்று மகிழ்ச்சி அடைந்தார் கமல்ஹாசன்.
ஒரு வாரம் கமல்ஹாசன் இல்லாமல் இருந்து மீண்டும் கமல்ஹாசன் வந்ததை பார்த்ததும் போட்டியாளர்கள் உற்சாகமாக கைதட்டி கமல்ஹாசனை வரவேற்றார்கள்.
புதிதாக வந்த சஞ்சீவையும் அமீரையும் வரவேற்று நன்றாக விளையாடுறிங்க என்று சொல்லி பாராட்டினார்.
நிரூப்பின் கேப்டன் பதவி எப்படியிருந்தது என்கிற கேள்வியை அனைவரிடமும் கேட்டார் கமல்ஹாசன். எப்படி இருந்த நிரூப் இப்படி ஆகி விட்டார் என்கிற மாதிரி என்பதையே பலரும் பதிலாகச் சொன்னார்கள்
இந்த வாரம் எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் வருண், அபிநய், அபிஷேக் ராஜா உள்ளிட்டோர் இருந்த நிலையில் அபிஷேக் ராஜா வெளியேறினார்.
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து இரண்டாவது நபராக வெளியேறிய அபிஷேக் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்து, தற்போது மீண்டும் எலிமினேட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் பிரியங்காவுக்கும் தாமரைக்கும் நடந்த சண்டைக்கும் பிரதான காரணமே அவர் தான். கிடைத்த இரண்டாம் வாய்ப்பையும் கோட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் அபிஷேக்.
இனி வரும் நாட்களில் கடுமையான டாஸ்க்குகள் வரலாம். அதை போட்டியாளர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் எதிர்பாராததை எதிர்பாருங்கள் துபுஜிக்கு துபுஜிக்கு BiggBoss.