பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சி தமிழில் தொடங்கப்பட்டு மற்றும் மூன்று பருவங்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன. இப்போது கமல்ஹாசன் சீசன் 4 இணையும் தொகுத்து வழங்குகிறார்.காலம் யாருக்காகவும் காத்திருக்காது என்கிற வசனத்துடன் நிகழ்ச்சி உள்ளே வந்தார் கமல்ஹாசன். அகம் டிவி வழியே வந்த கமல்ஹாசனை ஸ்மார்ட்டா இருக்கீங்க என்று ஹவுஸ்மேட்ஸ் சொல்ல தென்னிந்தியாவுலயே இதுதான் சிறந்த முறையில் ஆடை அணிந்திருக்கும் வீடு என்று அவர்களுக்கு பதில் சொன்னார் கமல்ஹாசன். வருங்காலத்தில் நீருக்கு தான் உலகப் போர் நடக்கும் என்று கதைக்க ஆரம்பித்தார்.
கறுப்பு வெள்ளை திரைப்பட கால விடயங்களையும் எம்.ஜி.ஆர் உடனான தனது தனிப்பட்ட அனுபவங்களையும், எம்.ஆர். ராதாவும் எம்.ஜி.ஆரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த விஷயத்தையும் பகிர்ந்தார். இளமை இதோ இதோ என்ற பாடலில் கமல்ஹாசன் கண்ணாடியை உடைத்து கொண்டு வரும் காட்சியில் அவரது கை காயம் பட்டு விட்டது அதுக்கு எம்.ஜி.ஆர் கண்ணாடி உடையும் படி விளையாடாதே என்று சொன்னாராம். இதை கமல் இங்கு சொல்ல காரணம் ஹவுஸ்மேட்ஸ் உடன் கடுமையான சண்டை வந்தாலும் பிறகு நட்பாகி விட வேண்டும் என்பது தான்.
50 நாட்கள் நிறைவடைந்த நிலையில் முன்னே பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் குறித்த ஒரு குறுகிய கண்ணோட்டம் இதுவரை பிக்பாஸ் சற்று மகிழ்ச்சிகரமாக பார்க்கும் விதத்தில் அமைந்திருந்தது. சமூகத்தின் பிரதிபலிப்பாக வெளிப்படுத்தும் நேரத்தை கழிக்கும் டாஸ்க் இதில் ஹவுஸ்மேட்ஸ் ஐந்து அணிகளாக பிரிந்து 45 மணி நேரமாக போட்டியிட்டு வந்தனர்.
அத்துடன் வழங்கப்பட்ட நேரத்துக்குள் குழாயடி சண்டைகள் தண்ணி லாரி பானிபூரி என்று இந்திய மக்களின் அன்றாட நடவடிக்கைகளை சாதாரண மக்களின் நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதாக அமைந்த பிரதிபலிப்பாக அமைந்திருந்தது.
மேலும் கடந்த வாரம் வீட்டின் தலைவராக ஆஜித் இருந்தார் இவரை இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் வயது குறைந்து தலைவர் என கூறப்பட்டிருந்தது. நேரத்தை கழிக்கும் டாஸ்க் அர்ச்சனா, சம்யுக்தா, சேகர், ஆகியோர் வெற்றி பெற்றவர்கள். லக்சரி பட்ஜெட்டிலும் பெரும்பான்மையை பெற்றுக் கொண்டனர்.
அதேபோல சோம்பேறித்தனமாக குறுகிய நேரத்தில் மூன்று மணி நேரத்தை கழித்து இதனால் பாலா, சுசித்ரா, ரம்யா ஆகியோர் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டனர் பாலாவுடன் அனுசரிக்கப்பட்டது தானோ என்னவோ ரம்யாவுக்கும் தோல்வியை சந்திக்க நேரிட்டது.
இந்த வாரத்தில் பாலாவுடைய விதண்டாவாத செயல்கள் பார்ப்போருக்கு சற்று கோபத்தை உண்டுபடுத்துவதாக இருக்கிறது. அத்துடன் பாலாஜியின் அப்பப்ப காதல் கலவரமும் பார்க்க சகிக்கவில்லை. இல்லை இல்லை என்று சொன்னாலும் அண்ணன் தங்கச்சி இத்தனை உள்ளதா?
அரை இறுதியில் பாலாவும் சுசித்ராவும் ஓய்வெடுக்கும் அறைக்கு அனுப்ப பட்டிருந்தனர். பாலாவுக்கு அதிலும் ஏதோ கவுரவ குறைச்சல் போல நடந்து கொண்டிருந்தார். மேலும் சுமுகமாக இந்த வாரம் கழிந்தது 50 நாட்களும் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் பதினான்கு போட்டியாளர்கள் வீட்டில் தொடர்கிறார்கள் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் அடுத்த 50 நாட்களுக்குள் யார் வெளியேற போகிறார் யார் வரப்போகிறார்கள் என்று மேலும் அடுத்த வாரத்துக்கான தலைவராகத் ரியோ தெரிவானார். ரியோ தலைமை எவ்வாறு அமையப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
பிக்பாஸ் வீட்டில் மாற்றங்களை நிகழ்த்தப் போகிறேன் என்று சொல்லி உள்ளே வந்த சுசித்ரா மாற்றங்கள் அடைந்து வெளியேறுவது பரிதாபமான விஷயம்.வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, சுசித்ரா தனது பாடும் வாழ்க்கையை மீண்டும் விரும்புவதாகவும், அது விரைவில் நடக்கும் என்று நம்புவதாகவும் கூறினார்.