இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்
வெளியாகி செக்கச் சிவந்த தோல் உள்ளே மாணிக்கம் மாணிக்கமாக முத்து போல ஜொலிக்கும் பழச்சுளைகள் அதுதான் மாதுளை பழம். சுவையிலும் சரி மருத்துவ குணத்திலும் சரி ஈடு இல்லாத ஒரு பழம் இந்த மாதுளை பழம். விற்றமின் சி, பி, பொட்டாசியம் ,போலிக் அமிலம், இரும்புச் சத்து நார்ச்சத்து என மாதுளம்பழத்தில் முக்கியமான சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன.
மாதுளம்பழத்தில் 100க்கும் மேற்பட்ட பைட்டோகெமிக்கல் வகைகள் இருக்கின்றன. நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கவும் புற்று நோயை தடுக்கவும் நினைவுத் திறனை அதிகரிக்கவும் மாதுளை உதவுகிறது. மாதுளையில் ஊட்டச்சத்துக்களும் ஆக்சிஜனேற்றத் தடுப்பான்களும் இருப்பதால் செல்கள் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்கிறது. அன்றாடம் இந்த பழத்தை சாப்பிடுவதற்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். மாதுளம் பழம் தரும் நன்மைகள் சில.
நினைவுத்திறனை அதிகரிக்கும் : மாதுளை முத்துக்கள் சிவப்பு நிறத்தில் இருக்க காரணம் அதிலிருக்கும் பாலிஃபீனால்கள். மாதுளம் பழச்சாற்றில் பாலிஃபீனால்கள் நிரம்பி இருப்பதால் அது நினைவுத் திறனை அதிகரிக்க உதவுகிறது. அன்றாடம் மாதுளம் பழச்சாறு அருந்தி வந்தவர்களின் நினைவுத்திறன் மற்றவர்களை விட கூடுதலாக இருப்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரத்த அழுத்தம் இதய நோயை தடுக்கும் : மாதுளம் பழச்சாறு இதய நலனை பாதுகாப்பதற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்த குழாய்கள் இருக்காமல் பார்த்துக் கொள்ள மாதுளம் பழச்சாறு உதவுகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும். ஆனால் இரத்த அழுத்தம் கொழுப்பை குறைக்க மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கு மாதுளைச் சாறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு மாதுளை சாறு அருந்தலாம்.
புற்றுநோய் தடுப்பு : இந்த படத்தில் வீக்கத்தை எதிர்க்கும் பண்புகள் அதிகமாக இருப்பதாலும் அதிகமாக பாலிபீனால்கள் இருப்பதாலும் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைக் குறைக்கிறது அத்துடன் அது பரவாமலும் தடுக்கின்றது. மார்பக, நுரையீரல், ஆண்மைச் சுரப்பி புற்று நோய்களை எதிர்த்து போராட மாதுளம் பழத்தால் முடியும்.
image source:https://tipbuzz.com/how-to-cut-a-pomegranate/