அந்தக் காலம் போல வருமா?
தற்போது வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளங்களிலும் டிரெண்ட்டாகி வருகிறார்கள்.தற்போது வளர்ந்து கொண்டிருப்பவர்கள் தொழில்நுட்பத்தை வரவேற்று கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள்!!
நாம் எல்லாம் எதையெல்லாம் கடந்து வந்திருக்கின்றோம் கொஞ்சம் திரும்பி பார்ப்போம் வாருங்கள்!!
காலையில் அம்மா போடும் டீ-யை குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து ரசித்து குடித்தவர்கள் எங்கே ?
தாத்தா, பாட்டியுடன் நேரத்தை செலவிட்டவர்கள் எங்கே ? அவர்களிடம் அதிகபட்சமாக கதை கேட்டவர்கள் எங்கே?
அன்றைய நாளில் ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவு அரைப்பார். அவர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் எங்கே ?
ஞாயிறன்று பார்த்த திரைப்படத்தை அடுத்த நாள் பாடசாலைக்கு சென்று நண்பர்களுடன் கதைத்து மகிழ்ந்தவர்கள் எங்கே?
கடைகளுக்கு செல்லும்போது பெரும்பாலும் மஞ்சப்பைகளை உபயோகப்படுத்தியவர்கள் எங்கே?
வகுப்பறையில் ராணி காமிக்ஸ் கதைகளை, பாடப் புத்தகங்களுக்குள் வைத்துப் படித்தவர்கள் எங்கே?
நாடகத்தில் வரும் ‘ஷக்கலக்க பூம்பூம்” பென்சில்தான் வேண்டும் என்று அடம்பிடித்தவர்கள் எங்கே?
பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துடன் கடைகளுக்கு ஒன்றாகச் சென்று அதிலும் அம்மா, அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தவர்கள் எங்கே?
அம்மா சுடும் பலகாரங்களை சாப்பிட கையில் தட்டுடன் காத்திருந்தவர்கள் எங்கே?
இதுமட்டுமல்ல இன்னும் மறக்க முடியாத சில நினைவுகளை கடந்து வந்தவர்கள் தற்போது கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் ஒன்றாக ஒப்பிட்டு பார்த்து கொண்டிருக்கிறார்கள்!!
பனைமரத்தில் காற்றாடி, பப்பாளி மரத்தில் புல்லாங்குழல் செய்து விளையாடிய நாட்கள் ஞாபகம் வருகிறதே…
அரிதாய் நடந்த பள்ளி விழாக்களில் அமர்க்களமாய் குதூகளித்த நாட்கள் ஞாபகம் வருகிறதே…
ஒருவர் பின் ஒருவராக தோளில் கைவைத்து டிரெயின் ஓட்டிய அந்த நாட்கள் ஞாபகம் வருகிறதே…
கிராமத்திற்கு தினமும் ஒரே முறை வரும் அக்கால பேருந்து பின்னால் சக தோழர்களுடன் அரை ட்ரவுசரை பிடித்துக்கொண்டு ஓடிய நாட்கள் ஞாபகம் வருகிறதே…
விசிறியால் வீசியும், விசிறி கிடைக்காத பட்சத்தில் ஏதேனும் அட்டை அல்லது சிறு புத்தகத்தால் வீசி ஆனந்தப்பட்டதும் ஞாபகம் வருகிறதே…
தெருவிளக்கு ஒளியில் பாடம் படித்த அந்த அழகிய நாட்கள் ஞாபகம் வருகிறதே…
பாடசாலையில் புத்தக கிரிக்கெட் விளையாடியது ஞாபகம் வருகிறதே
இதுபோல் இன்னும் பல விஷயங்களை சொல்லி கொண்டே போகலாம்…
இதை படித்தவுடன் உங்களுக்கும் மலரும் நினைவுகள் ஞாபகத்தில் வந்துவிட்டதா?உங்களின் நினைவுகளை எங்களுடன் மேலும் பகிர்ந்து இங்கே செல்லவும்
image source:https://fineartamerica.com/featured/hit-the-top-jose-vistan.html