Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்

அவனொரு படகு : ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அவனொரு படகே !

  • September 4, 2020
  • 308 views
Total
6
Shares
6
0
0

“மனிதர்கள் இந்த உலகில் பிடித்த ஒன்றை அடைவதற்கு கண்டுபிடித்த ஒரே வழிமுறை: இன்னொன்றை பின்னால் விடுவதுதான்.” இயற்கையும் அதைத்தான் சொல்வதாக நியூட்டன் கூட தன்னுடைய விதிகளில் வகுத்திருக்கிறார். அடைவதற்கான பயணத்தின் அந்தக் கரைகளுக்கிடையே அலைக்கழியும்

“அவனொரு படகு”.

அவனொரு படகு
பட உதவி

இன்று அவள் இருக்கின்ற நிலைக்கு முக்கிய காரணம் அவன்தான்.அவனை விட்டுவிடுவதில் அவளுக்கு சுத்தமாக மனமில்லை. கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் அல்லது உலகுணர்வு இல்லாமால் வாழ்ந்துகொண்டிருந்த அவளுக்குள் அடாவடியாக அன்பு மழை பொழிந்து அவளது மனதை வென்ற அழகன் அவன். அவளை சிறு வயதிலிருந்தே அவனுக்கு தெரியும். அவளது பேச்சு இவனுக்கு தேவையில்லை. அவளை பார்த்ததும் என்ன மனநிலை என்பதைப் புரிந்து அதற்கேற்றாற்போல நடப்பதில் அவனைவிட வேற யாருமே இல்லை.

அவனுக்கு அவளென்றால் உயிர். அவளது பாதத்தை தனது நெஞ்சில் பதித்து வாழ்வதே சொர்க்கம் என நினைத்திருந்தான். அவளுக்கு ஈடான பெண்ணை தான் கண்டதே இல்லை என்பதே அவனுடைய மனதார்ந்த எண்ணமாக இருந்தது. ஒவ்வொரு மனித வாழ்க்கைக்கும் ஒரு நோக்கம் இருக்கும். “எனது வாழ்வின் நோக்கமே நீதானடி” என்று அடிக்கடி அவளிடமே சொல்வான். அவளும் அவனிடம் செல்லமாய் கொஞ்சுவாள். வயதில் இவன் அதிகம் என்றாலும் அவள் உரிமையோடு வா போ என அழைப்பாள். எவ்வளவுதான் உரிமை இருந்தாலும் ஒருபோதும் ‘டா’ போட்டு அழைக்கக் கூடாது என்ற பக்குவம் அவளுக்கும் இருந்தது.

இன்று நடக்கப்போகும் சம்பவத்திற்குப் பிறகு அவனும் அவளும் ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொள்ள முடியாமல் போக போகிறது. முற்றிலுமாக பிரிவதில்லை தான் என்றாலும் அவன், அவள் மீதான தனது உரிமையை இழப்பதாக நினைத்தான் . இதற்கு மேலும் என்ன செய்ய முடியும் என்பது மட்டுமே அவனுடைய எண்ணமாக இருந்துகொண்டே இருந்தது. இதற்கு மேலும் என்ன தான் செய்துவிட முடியும் என்பது அவளுடைய எண்ணம்.

அவ்வளவுக்கு ஒருவருக்கொருவர் என்ன செய்தார்கள் ?

ஏன் இவ்வளவு அன்னியோன்னியம் தெரியுமா ?

சிறு வயதாக இருக்கும் பொழுது ஒரு முறை இவள் வயது சிறுமிகள் எல்லாம் பொம்மைகள் வைத்து விளையாடி பழகிக் கொண்டிருந்த வேளையிலே இவள் மட்டும் உதைபந்து விளையாடுவதற்காக  சென்று விடுவாள். அந்த நேரத்திலெல்லாம் அவளுக்கு பாதுகாப்பாக இவனும் கூட சென்றிருக்கிறான். சின்ன வயதிலிருந்தே அவள் மீதான பாதுகாப்பில் இவனுக்கு அக்கறை அதிகம்.

அவள் பாடசாலை செல்கின்ற காலத்தில் இவன் ஏற்கனவே படித்து முடித்திருந்த வருடங்களைக் கூட அவளுக்காக மீண்டும் படித்து அவள் என்ன சந்தேகம் கேட்டாலும் சொல்லிக் கொடுப்பான்.

பேருந்தில் கூடவே செல்வான். ஆனால் இவள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவளை அவதானித்தபடி இரண்டு இருக்கைகள் பின்னாலேயே எப்பொழுதும் சென்றிருக்கிறான். அவள் வாழ்க்கையில் அவனொரு படகு.

அது அவளுடைய 21 ஆவது பிறந்தநாள். காலையில் எழுந்து கொண்டதும் அம்மாவிடம் போய் இவனை பற்றி தான் விசாரித்தாள். அவனுடைய வேலை விஷயமாக அவன் வெளிநாட்டுக்குப் போய் இருப்பதால் இன்னும் திரும்பி வரவில்லை என்று அம்மா சொன்னதை கேட்டதும் முற்று முழுதாக சுக்கல் நூறாக உடைந்து போனாள். என்னுடைய பிறந்தநாளை அவன் மறக்க மாட்டான். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் இதற்கு முன்னர் நான் பார்த்தோ, கேட்டோ அறியாத ஏதேனும் புதிதாக ஒன்றைக் கொண்டுவந்து நிச்சயமாக என்னை மகிழ்ச்சிப்படுத்துவான். இன்றைக்கு என்னுடைய 21 ஆவது பிறந்தநாள். இந்த உலகம் எனக்காக திறக்கும் நாள். இன்று அவன் என்னோடு இல்லாது இருக்க முடியாது. இன்று எனக்கு பிறந்தநாள் அவன் வந்தால் மட்டும்தான். இல்லாவிட்டால் வேண்டாம். இது அவளுடைய பிடிமானமான தீர்வு.

“உன்னுடைய பிரண்ட்ஸ் எல்லாம் கூப்பிடாச்சு, வேற வழி இல்ல, கண்டிப்பா செஞ்சுதான் ஆகணும். இல்லனா ரொம்பவே அசிங்கமா போயிடும். அவன் வரலைன்னா என்ன?  இதுக்கு முன்னாடி உன் கூட இருந்தது இல்லையா?  இந்த ஒரு முறைதானே ப்ளீஸ்மா..” அவளுடைய அம்மாவின் கெஞ்சல்..

ஒப்புக்கொள்ள மனமே இல்லாமல் ஒப்புக்கொண்டு அந்த பிறந்த நாள் கேக்கை வெட்டுவதற்காக அவன் வாங்கி பார்சலில் அனுப்பி வைத்திருந்த அழகான ஆடையை அணிந்து கொண்டு தயாரானாள். அவளுடைய நண்பர்கள் எல்லாரும் சுற்றமாக வந்து நிற்கிறார்கள்.

சம்பிரதாயமாக  பாடப்படும் ஹாப்பி பர்த்டே பாடல் எல்லாராலும் பாடப்படுகிறது. கேக் வெட்டுவதற்கு அவள் தயாராக இருக்கும்பொழுது திடீரென அவளது நண்பி ஒருத்தி அழைக்கிறாள்.

“ஹேய், உனக்காக ஒரு பர்த்டே சப்ரைஸ் வச்சுருக்கோம்.திரும்பி நில்லு.”

அவள் மனதுக்குள் அது அவன் தான் என்கின்ற எண்ணம் உதித்தது.

“ஆம் நான் கண்ணை மூடி திரும்பி நின்று நின்று கொண்டு பிறகு திறந்து பார்க்கும் பொழுது அவன் என் முன்னால் நிற்க போகிறான். ஒட்டுமொத்த கோபத்தையும் சேர்த்து கன்னத்தை தட்டி அவனை அறைய போகிறேன். கீழே தள்ளிவிட்டு ஏறிநின்று செருப்பால் ஏறி மிதி மிதி என்றவன் நெஞ்சிலேயே மிதிக்கப் போகிறேன். கீழேயே வைத்து கழுத்தை நெரித்து கேக்கை தூக்கி அவன் முகத்தில் அடித்து தலையை மண்ணுக்குள் புதைத்து கொலை செய்யப் போகிறேன். இவ்வாறு தனக்குள் தானே ஆயத்தப்படுத்திக் கொண்டாள்.

தன்னுடைய ஒட்டுமொத்த திட்டமும் இன்று அவனை தாக்குவதுதான் என்று முடிவு எடுத்து விட்டாள். திரும்பி கண்ணை கட்டிக் கொண்டு நிற்கிறாள். எல்லோரும் அவளை திரும்பச் சொல்கிறார்கள். திரும்பி நிற்கிறாள். கண்கள் கட்டி இருட்டாக இருக்கிறது. 5…4…3…….2……..1…………..

எல்லாரும் ஒன்றாக கோரசாக கத்திவிட்டு, சப்ரைஸ் எனக் கத்திக் கொண்டு அவளது கண் கட்டை அவிழ்க்கிறார்கள்.

கண்ணைத் திறந்து இவ்வளவு நேரமும் கண்ணுக்குள்ளே தான் கற்பனை செய்து கொண்டிருந்த அவனது உருவத்தை நினைத்தபடி பார்க்கிறாள்.

எட்டு அடியில் ஒரு பெரிய டெடி பெயர் பொம்மை.

அவளது கண்கள் கலங்கி விட்டன. அவளது கலக்கம் அவனை காணவில்லையே என்று. எல்லோரும் நினைத்துக்கொண்டது இந்த பரிசு அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்று.

“கண்ணீர் வருவதற்கான உண்மையான காரணம் உதிர்க்கும் கண்களுக்குக் கூட தெரியாது; உருவாக்கும் இதயத்துக்கு மட்டுமே தெரியும்.”

-நேத்திரக்கைதி : அவனொரு படகு கதைக்காக

அந்த கண்ணீரோடு ஹாப்பி பர்த்டே பாட்டு மீண்டும் பாடியபடி எல்லோரும் அவளை கேக் வெட்டுமாறு கூறுகிறார்கள். அவளும் அவனை நினைத்து கலங்கியபடியே கேக்கை வெட்டி கண்ணீர் ததும்ப ததும்ப தனது அம்மாவுக்கு ஊட்டுகிறாள். ஊட்ட சென்ற கைகள் உணர்ந்தது வேறு எதையோ.

நன்கு வளர்ந்திருந்த ஒரு ஆண்மகனின் பற்கள் அவளது விரலை கடித்துக்கொண்டிருந்தன. திரும்பிப் பார்க்கிறாள்.

உங்களுடைய ஊகம் சரிதான்… அது அவன் தான்…

இந்த சந்திப்புக்கு அவள் தயாராக இருக்கவில்லை. முன்னர் அவள் தயார் செய்து வைத்திருந்த எல்லாம் உடைந்து கண்ணீராக மாறி இருந்தது.  ஒரே தாவில் கைகள், கால்கள் அனைத்தையும் அவன் மீது சுற்றிக் கொண்டாள். தனது நாடியை அவனது தோள்மேல் பதித்து கண்ணீர் நிற்கும்வரை கதறிக் கதறி அழுதாள்.அவள் அவன்  இல்லாமல் எவ்வளவு தூரம் வருந்தி இருந்தாள் என்பது அந்த செயலில் நன்றாக தெரிந்தது.

அன்றைய தினம் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி சந்தோஷப்பட்டுக் கொண்டதற்குப் பிறகு இன்றைக்குத்தான் மீண்டும் அவர்கள் அவ்வாறான ஒரு தருணத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

அவளை அவன் இன்று பிரிய வேண்டிய தருணம்.

இந்தப் பிரிவு அவளை பாதிக்கப் போகின்ற அளவினை அவன் முற்றிலுமாகவே உணர்ந்திருந்தான். ஆனால் தான் அவளோடு இதற்கு மேலும் இருந்தால் அது அவளுடைய வாழ்க்கைக்கு சரியானதாக இருக்காது என்பதை அவன் உணர்ந்து கொண்டான் போலும்.

நமக்கெல்லாம் பிரிவுகள் மிகவும் வழக்கமானவையே. ஆனால் நாம் தான் அவற்றை உணர்வதில்லை. பாடசாலையில் படித்த நண்பர்கள் உங்களைப் பிரிந்து பொழுது நீங்கள் பட்டிருந்த கவலைக்கு மருந்தாகத்தான் புதிய நண்பர்கள் வந்து சேர்ந்திருப்பார்கள். உங்களுடைய பழைய நண்பர்களின் அம்சங்களையோ அல்லது அவர்கள் உங்களுக்குள் விதைத்த வாழ்க்கை முறையையோ மீண்டும் பிரதிபலிக்கும் இன்னொரு நண்பர் கூட்டம் தான் உங்களுக்கு அடுத்தகட்ட வாழ்க்கையில் அமைகிறது.

அவள் இவனிடத்தில் கண்டுகொண்ட ஒட்டுமொத்த அன்பையும், நட்பையும் இன்னொருவனிடத்தில் கண்டுகொண்டாள். அவளுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அவனோடு இணைவதற்கு சித்தமாக இருந்தாள்.

இவர்கள் இரண்டு பேருடைய இந்த  உறவு பற்றி அவளது ஒட்டுமொத்த குடும்பத்துக்கும்  தெரியும். ஒருவர் இல்லாமல் மற்றவர் வாழ்வது என்பது அவர்கள் இரண்டு பேருக்கும் கசப்பான விடயம் . இவர்களைப் போல பழகக்கூடிய மனிதர்கள் உலகத்தில் வேண்டுமென சொந்தக்காரர்கள் கண் வைப்பார்கள்.

இந்த அளவு தூரத்துக்கு ஒன்றாக இருந்தவர்கள் பிரிய வேண்டிய கட்டாயம் வந்தது ஏன் தெரியுமா ?

கல்யாணம்.

இன்று அவளுடைய திருமணம் புதியவனோடு வெற்றிகரமாக முடிவடைந்து இருந்தது. வந்திருந்த சிறு பிள்ளைகள் எல்லாம் எட்டாத தூரத்தில் நின்று மங்கல அரிசியை வீச, இளைஞர்கள் அவ்வளவு பேரும் எங்கேடா சோறு என்று தேடி திரிய, வேண்டுமென்றே தலையை ஆறுமுறை சீவி விடும் ஆண்களை பார்த்து வழியும் ஐந்து பெண்களைத் தவிர மற்ற எல்லா பெண்களும் ஒன்றாக சேர்ந்து இந்த சோறு சாப்பிட போன கும்பலோடு கும்மாளம் அடிக்க, ஐயரும் நாதஸ்வரக் காரரும் கூட இப்படி ஒரு திருமணத்தை நான் பார்த்ததில்லை என்று பாராட்டிவிட்டு, அந்த பாராட்டுக்காக எக்ஸ்ட்ரா ஆயிரம் ரூபாயையும் பெற்றுக்கொண்டு விடைபெற்ற தடபுடலான திருமணம் அது. இன்று இவனை அவள் பிரிய போகிறாள். அவள் கணவன் தன்னுடைய வீட்டுக்கு அவளை அழைத்துச் செல்வதற்காக காரில் ஏறி அமர்ந்து இருக்கிறான். அம்மாவை கட்டிப்பிடித்து அவள் அழுகிறாள்.

அடுத்தது அவன்,

“அப்பா, என்னை மன்னிச்சுருப்பா…………… ” அவள் வாய் விட்டு இவனிடம் அழுகிறாள். இவ்வளவு நேரமும் நீங்கள் வாசித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு காட்சியும் அவள் தனது கழுத்தில் தாலிக்கொடி ஏறும் நேரத்திலிருந்து நினைத்துக்கொண்டிருந்ததவைதான்.

மனிதர்கள் இந்த உலகில் ஒன்றை அடைவதற்கு கண்டுபிடித்த ஒரே வழிமுறை: இன்னொன்றை பின்னால் விடுவது.

-நேத்திரக்கைதி : அவனொரு படகு கதைக்காக

அவனும் ஒன்றும் சொல்லவில்லை. கட்டியணைத்து அழுது தீர்த்தான். தனது மகளைக் கல்யாணம் செய்து கொடுக்கும் நாள் என்று வருமென ஏங்கி இன்றுவரை அவளை கண்ணும் கருத்துமாக பார்த்த நண்பன் நான் என்ற  பார்வை மாறி, தன் மகளின் அன்பை சம்பாதித்த அப்பன் என்கிற வெற்றியை உணர்ந்தான். இன்று தன மக்கள் வாழவை கரை சேர்த்த அவனொரு படகு.

இரண்டு பேருடைய அழுகைகளும் ஓய்ந்து முடியும் தருணத்தில் அவனது கைகள், அவளது கைகளை பற்றின. பாடசாலையில் ஆசிரியரிடம், விளையாட்டு என வந்தபோது பயிற்றுவிப்பாளரிடம், வேலை என வந்தபோது அதிகாரிகளிடம் இவன் பிடித்து தாரை வார்த்த அதே கைகளை இம்முறை மீண்டும் இறுதியாக அவளது விருப்பத்திடமே தாரை வார்க்கிறான். கலங்கிய கண்களோடு பிரிந்தவளின் நெற்றியில் ஆழ்ந்து முத்தமிட்டான்.

மகளைப் பெற்ற அப்பனுக்குத்தான் தெரியும், முத்தத்தில் காமமில்லை என்று.

– திரைப்படவசனம்
அவனொரு படகு முற்றும் 

-நேத்திரக்கைதி

அவனொரு படகு சிறுகதை தொடர்பான உங்களது கருத்தை எம்முடன் கருத்துக் பெட்டியில் பகிர்ந்து கொள்ளுங்கள். மனித உறவுகள் பகுதியில் இது போன்ற கட்டுரைகளை வாசியுங்கள்.

எமது பேஸ்புக் எம்மைப் பின்தொடர்வதன் மூலம் நேத்திரக்கைதியின் அவனொரு படகு போன்ற சிறுகதைகளை வாராவாரம் பெற்றுக்கொள்ளுங்கள்.

முகப்பு பட உதவி : வால்பேப்பர்ஸ்123

Post Views: 308
Total
6
Shares
Share 6
Tweet 0
Pin it 0
abiesshva

Previous Article
தமிழர் கல்வெட்டுக்கள்

தமிழர் பெருமை சொல்லும் அரிய வெளிநாட்டுக் கல்வெட்டுக்கள் – 1

  • September 4, 2020
View Post
Next Article
கனவுகளும் பலன்களும்

உங்களுக்கான கனவுகளும் பலன்களும் பகுதி 18

  • September 5, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

இந்த அழகு நடைமுறைகள் உங்கள் தோலை பாதிக்கும்..
View Post

இந்த அழகு நடைமுறைகள் உங்கள் தோலை பாதிக்கும்..

கர்ப்பிணி
View Post

கர்ப்பிணிகளுக்கு மிகச்சிறந்த உடற்பயிற்சி..!

உங்கள்
View Post

உங்கள் கூந்தலுக்கு சருமத்துக்கு பாதங்களுக்கு செய்யவேண்டியவை..!

தாயும்
View Post

ஒவ்வொரு தாயும் தனது இரண்டாவது குழந்தையைப் பெறுவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டியவை..!

குழந்தை
View Post

குழந்தை வளர்ப்புக் கலை..!

கர்ப்ப
View Post

கர்ப்ப கால சிறுநீர் தொற்று..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.