Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
Likes
  • எங்களை பற்றி
Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்
  • சுகாதாரம்
    • உளச்சுகாதாரம்
    • ஊட்டச்சத்து
    • உடல் ஆரோக்கியம்
    • கோவிட் – 19
  • தொழில்நுட்பம்
    • மைக்ரோசொப்ட்
    • விண்வெளி
    • அனைத்து தொழில்நுட்பங்கள்
    • டெஸ்லா
    • கைத்தொலைபேசிகள்
    • கூகுள்
    • முகநூல்
    • அப்பிள்
    • சாம்சுங்
    • புது வரவுகள்
  • பல்சுவை
    • விளையாட்டு
    • டாப் 10
    • திரைப்படங்கள்
    • கதைகள்
    • வினோதம்
  • சமூகவியல்
    • கனவுகளும் பலன்களும்
    • தமிழ் கலாச்சாரம்
    • பெண்ணியம்
    • மனித உறவுகள்
  • மதிப்பாய்வு
    • மடிக்கணிணிகள்
    • ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள்
    • ஹெட்ஃபோன்கள்
    • கேமிங்
சனி

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 பகுதி 2

  • December 26, 2020
  • 205 views
Total
1
Shares
1
0
0

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி (26.12.2020) சனிதேவர் துவாதசி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது இன்று சனிக்கிழமை தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

விருச்சகம் ராசியின் சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 பகுதி 2
image source

உங்கள் ராசிக்கு தன, குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது தங்களின் ராசிக்கு தைரிய, வீரிய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

  • உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
  • மனதிற்கு பிடித்த மனை மற்றும் வீடு வாங்கி மகிழ்வீர்கள்.
  • புதிய பயணம் மூலம் மனமாற்றம் ஏற்படும்.
  • முயற்சிக்கேற்ப தனவரவும், அங்கீகாரமும் கிடைக்கும்.
  • சிறு அலைச்சல்கள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.
  • உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
  • குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும்.
  • மனதில் ஏற்படும் குழப்பங்களை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் மனதில் தெளிவு பிறக்கும்.
  • வெளியூர் தொடர்பான செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனைகள் பெற்று செயல்படவும்.

விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

தனுசு ராசியின் சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 பகுதி 2
image source

இதுவரை உங்கள் ராசியில் ஜென்ம ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான தன, குடும்ப ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்கிறார்.

  • மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.
  • இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு ஒரு பங்கு மேலும் அதிகரிக்கும்.
  • வெளியூர், வெளிநாடு பயணம் மகிழ்ச்சிகரமானதாக அமையும்.
  • எந்தவொரு செயலிலும் முயற்சியை அதிகப்படுத்துவதன் மூலம் வெற்றி பெறலாம்.
  • பொருளாதார நிலையில் இருந்த மந்தத்தன்மை அகலும்.
  • மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும்.

வியாழக்கிழமைதோறும் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வர வேற்றுமை நீங்கி ஒற்றுமை மேம்படும்.

மகரம் ராசியின் சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 பகுதி 2
image source

உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு ஜென்மச் சனியில் இருக்கிறார்.சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக தைரிய வீரிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.

  • இளைய உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும்.
  • வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும்.
  • தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும்.
  • மனதிற்கு விரும்பிய வாகனங்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.
  • புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
  • எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.
  • நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

சனிக்கிழமைதோறும் சனீஸ்வரர்க்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவும்.

கும்பம் ராசியின் சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 பகுதி 2
image source

உங்கள் ராசிக்கு 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு அயன சயன போக ஸ்தானமான பனிரெண்டாம் இடத்தில் இருக்கிறார்.சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ரண, ருண, ரோக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.

  • உணவு விஷயங்களில் கவனம் வேண்டும்.
  • குடும்ப உறுப்பினர்களிடம் கருத்துக்களை பகிரும்போது சிந்தித்து செயல்படவும்.
  • மனதில் தோன்றும் எண்ணங்களை பெற்றோர்களிடம் பகிரும்போது தெளிவு கிடைக்கும்.
  • உலக வாழ்க்கை பற்றிய புதிய பரிணாமத்தை உணர்வீர்கள்.
  • முயற்சிக்கு தடையாக இருந்த எதிர்ப்புகள் நீங்கும்.
  • சிலருடைய அறிமுகம் மாற்றமான சூழலை ஏற்படுத்தும்.
  • எதிர்பார்த்த பதவி உயர்வு சில தடைகளுக்கு பின் சாதகமாக அமையும்.
  • பணியில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும்.
  • புதிய பயிற்சி தொடர்பான வகுப்புகளில் கலந்து கொள்வீர்கள்.
  • மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்காமல் இருப்பது நன்மை அளிக்கும்.
  • உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும்.
  • மேலதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் நேரிடலாம் ஆகையால் எச்சரிக்கை வேண்டும்.
  • உத்தியோகம் தொடர்பான வழக்கில் வெற்றி கிடைக்கும்.

சனீஸ்வர பகவானை வணங்கி பின் தட்சணாமூர்த்தியை வழிபாடு செய்ய நன்மைகள் பெருகும்.

மீனம் ராசியின் சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 பகுதி 2
image source

உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது தங்களின் ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார். சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக ராசியையும், ஏழாம் பார்வையாக பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.

  • பேச்சுக்களில் நிதானம் வேண்டும்.
  • குலதெய்வ வழிபாடு தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.
  • சுரங்க பணியில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும்.
  • மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.
  • எதிர்பாராத சில தனவரவுகளால் பொருளாதார நெருக்கடிகள் குறைந்து மேன்மை உண்டாகும்.
  • வீட்டில் சுபக்காரியங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளால் மனமகிழ்ச்சி உண்டாகும்.
  • நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் சூழ்நிலைகள் அறிந்து பேசுவது நன்மையை அளிக்கும்.
  • பூர்வீகச் சொத்துக்கள் தொடர்பான பராமரிப்புச் செலவுகள் நேரிடலாம்.
  • புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

மூல நட்சத்திரத்தன்று வடமாலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர தெளிவு கிடைக்கும்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழும் சனிப்பெயர்ச்சி பலன்கள்

wall image

Post Views: 205
Total
1
Shares
Share 1
Tweet 0
Pin it 0
Niranjan Perumal

Previous Article
சனி

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழும் சனிப்பெயர்ச்சி பலன்கள்

  • December 25, 2020
View Post
Next Article
மரணத்தை வென்ற மார்கழி மாதத்தின் சிறப்புக்களும் கதைகளும்

மரணத்தை வென்ற மார்கழி மாதத்தின் சிறப்புக்களும் கதைகளும்

  • December 26, 2020
View Post
You May Also Like
இயற்கை
View Post

இயற்கை அழகுசாதனப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இயல்பாய்
View Post

இயல்பாய் மலரட்டும்..!

பால்குடம்
View Post

பால்குடம் எதற்காக எடுக்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன?

இதோ
View Post

இதோ எளிய மாற்றங்களைச் செய்து உங்களது சிறந்த தோற்றத்தைப் பெறலாம்..!

ஐயப்ப
View Post

ஐயப்பனுக்கு நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனின்
View Post

ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்..!

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்
View Post

துணையை விட்டு தனியாக உறங்குவது உங்கள் உறவைப் பலப்படுத்தும் 5 வழிகள்

சபரி
View Post

சபரிமலையில் நடக்கும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe now to our newsletter

Chellaupdates.com | தினசரி சமீபத்தியதை விட மிக அதிகம்

Input your search keywords and press Enter.