அசிசன்ஸ் எப்படி ஆரம்பித்தது ?
அசிசன்ஸ் கிரீட் ஆனது முதல் நிலையே தனியான ஒரு பதிப்பாக வெளிவந்தது. தனது தலையை ஒரு துணியால் மூடிக்கொண்டு கைகளுக்கு உள்ளே மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் கத்தி மற்றும் முதுகிலே வாள் போன்றவற்றை சுமந்து கொண்டு ஒரு சுதேச வீரராக நாட்டை அடக்கி ஆளுகின்ற தரப்புக்கு எதிராக போராடும் தனி நபர் தான் அவர்.
Parkour,( கட்டடங்களுக்கு நடுவிலும் பாதை போன்ற இடங்களிலும் சுயாதீனமாக தாவுதல் குதித்தல் போன்ற செயற்பாடுகள் ஒரு இசைந்த அசைவை குறிக்கிறது) கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் முறையிலே வடிவமைக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த கேமின் தாக்கல் வடிவங்களைக்காகவே பிரபல்யமானது இந்த கேம். உதாரணமாக சொல்லப் போனால், மாடியிலிருந்து கீழே குதிக்கும் பொழுது தாக்குவதற்கான கட்டளையை கொடுத்தால் அவன் கழுத்தில் பாய்ந்து தாக்குவது, சத்தம் கேட்காமல் இருக்க அமைதியான முறையில் கொல்வது என பல்வேறு வகையான தாக்குதல் முறைகளைக் கொண்டது. இதுவரை, வெளிவந்த அசிசன்ஸ் கிரீட் கேம்களின் விபரம் இதோ,
2007:
அசிசன்ஸ் கிரீட்
2008:
அசிசன்ஸ் கிரீட் அல்டைர்ஸ் க்ரோனிக்கள்ஸ் (பலிபீடத்தின் நாளாகமம்)
2009:
அசிசன்ஸ் கிரீட் பிளட்லைன்ஸ் (குருதிக் கோடுகள் )
அசிசன்ஸ் கிரீட் லைநேஜ் (பரம்பரை)
அசிசன்ஸ் கிரீட் II டிஸ்கவரி (கண்டுபிடிப்பு)
2010:
அசிசன்ஸ் கிரீட் பிரதர் ஹூட் (சகோதரத்துவம்)
2011:
அசிசன்ஸ் கிரீட் ரிவலேஷன்ஸ் (வெளிப்படு நினைவுகள்)
அசிசன்ஸ் கிரீட் எம்பர்ஸ் (உட் பொருட்கள்)
2012:
அசிசன்ஸ் கிரீட் III லிபெரேஷன் (விடுதலை)
2013:
அசிசன்ஸ் கிரீட் IV பிளாக் ஃப்லாக் (கறுப்பு கொடி)
2014:
அசிசன்ஸ் கிரீட் ரோக் (முரடன்)
அசிசன்ஸ் கிரீட் யுனிடி (ஒற்றுமை)
2015:
அசிசன்ஸ் கிரீட் சிண்டிகேட் (கூட்டமைப்பு)
அசிசன்ஸ் கிரீட் குரோனிக்கல்ஸ் சீரிஸ் (நாளாகம தொடர்)
சீனா
2016:
இந்தியா, ரஷ்யா
அசிசன்ஸ் கிரீட் திரைப்படம்
2017:
அசிசன்ஸ் கிரீட் ஒரிஜின்ஸ் (தோற்றம்)
2018:
அசிசன்ஸ் கிரீட் ஒடிசி (வீரகாவியம்)
2020:
அசிசன்ஸ் கிரீட் வல்ஹல்லா (வீழ்ந்தவர்களின் அரங்கம்)
image source:https://amp.reddit.com/r/gog/comments/ckefib/gog_galaxy_20_assassins_creed_posters/