2017 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘குற்றம் 23’ திரைப்படத்தை இயக்கியவர் அறிவழகன். இவர் மீண்டும் அருண் விஜய்யுடன் இணைந்து திரில்லர் படத்தை இயக்கி வருகிறார்.
இன்றைய திகதியில் தமிழ்த் திரையுலகில் சவாலாக இருக்கும் விடயங்களில் ஒன்று படம் வெளியாகும் முதல் நாள் முதல் காட்சிக்கு ரசிகர்களை பட மாளிகைக்குள் வரவழைப்பது தான்.
தளபதி விஜய், தல அஜித், தனுஷ், சூர்யா போன்ற நடிகர்களைத் தவிர ஏனைய நடிகர்களின் படங்களுக்கு ரசிகர்கள் வருவதில்லை.
இதற்காக படத் தயாரிப்பு நிறுவனங்களும் படைப்பாளிகளும் பல்வேறு வகையான உத்திகளை கடைபிடித்து ரசிகர்களை ஆவலைத் தூண்டுகிறார்கள்.
அந்த வகையில் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தயாராகியிருக்கும் போர்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அப்படத்தை தயாரித்திருக்கும் ஓல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் புதுமையான முறையில் வெளியிட்டு திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
ஆம் 3D மேப்பிங் எனப்படும் முப்பரிமான வரைப்பட தொழில்நுட்பத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வடிவமைத்து அதனை சென்னையின் இதயப் பகுதியான அண்ணா மேம்பால பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் முகப்பு பகுதியில் பிரமாண்டமான திரையிட்டது.
இதனை வரவேற்றிருக்கும் ரசிகர்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தமிழ்-தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் இடம் பெற்றதால் இந்திய இராணுவத்தின் உளவுத் துறையில் பணியாற்றும் அதிகாரியாக அருண்விஜய் நடித்திருப்பதால் போர்டர் போன்ற சிறந்த தேசபக்தி படமாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்த படத்தில் அருண் விஜய்யுடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா மற்றும் புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இதுபோன்ற சுவாரசியமான சினிமா செய்திகளுக்கு எமது சினிமா பக்கத்தை நாடவும்.