இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! நாம் பசிக்காக உண்ணும் பொழுது நம்முடைய குடலில் சேருகின்ற உணவு காலப்போக்கில் நம்முடைய உருவத்தையும் மாற்றுவது சிலருக்கு கவலை தரக்கூடிய விடயமாக இருக்கலாம்.
சிலர் மிக அதிகமாக சாப்பிட்டும் கூட சிறிதும் உடல் அவர்களுக்கு பெரிதாக ஆகாது. சிலர் எவ்வளவு கொஞ்சமாக சாப்பிட முயற்சி செய்தாலும் அவர்களுடைய பருமனான உடல் குறையாது. ஆகவே இந்த பருமன் ஆகும் நடவடிக்கையானது எவ்வாறு நடைபெறுகிறது ?
நாம் உண்ணுகின்ற உணவுகள் அனைத்துமே நம்முடைய வயிற்றுக்கு சென்றதன்பின்னர் காபோவைதரேட்டுகளாக உடைக்கப்படும். அதை குளுக்கோஸாக மாற்றப்படும். நாம் சுவாசத்தின் மூலம் உள்ளே எடுக்கின்ற ஒட்சிசன் ஆனது இந்த குளுக்கோஸ் உடன் சேர்த்து எரிக்கப்பட்டு அதன் மூலம் நம் உடலுக்கு சக்தி கிடைக்கும். நாம் உண்ணுகின்ற உணவு நாம் செய்கின்ற வேலைக்கு மேல் அதிகமாக இருக்கும் பொழுது உடலுக்கு உள்ளே வந்து மேலதிக குளுக்கோஸ் ஆனது உடலில் வடிவம் மாற்றப்பட்டு சேமித்து வைக்கப்படும்.
இந்த வடிவமானது கிளைக்கோஜன் என்று கூறப்படும். கிடைத்தால் நாம் சாதாரணமாக கொழுப்பு என்று சொல்வோம். உடலில் உணவு இல்லாத நேரத்தில் அல்லது சாப்பிட்டதுக்கு மேலதிகமாக நாம் வேலை செய்யும் பொழுது இந்த கொழுப்பானது மீண்டும் உடைக்கப்பட்டு குளுக்கோஸ் வடிவத்துக்கு மாற்றப்பட்டு எரிக்கப்பட்டு சக்தி கிடைக்கும். இதனால் தான் உடற்பயிற்சி அல்லது யோகா போன்ற விடயங்கள் செய்யும்பொழுது உடலில் இருக்கின்ற கொழுப்பானது குறைகின்றது.
ஆகவே உங்களுடைய உடலானது பருமனாக இருக்கின்றது என்றால் கிளைக்கோஜன் அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். இது உணவால் மட்டுமல்ல சிலருக்கு மரபனு மூலமும் சிலருக்கு ஹார்மோன்களாலும் இருக்கலாம். சரியான காரணம் எது என்பதனை மருத்துவரிடம் ஆலோசித்து கண்டுபிடித்து அதற்கான தீர்வை பெற்றுக்கொள்ளுங்கள்.
image source: https://www.mamamia.com.au/body-shaming-is-worse-for-women/